8 வேக்சின்.. 216 கோடி டோஸ்.. 2021 இறுதிக்குள் இந்தியாவில் அனைவருக்கும் வேக்சின்.. மத்திய அரசு பிளான்
சென்னை: இந்தியாவில் 2021 டிசம்பர் மாதத்திற்குள் 216 கோடி டோஸ் வேக்சின் தயாரிக்கப்படும், இதன் மூலம் இந்திய குடிமக்கள் எல்லோருக்கும் இந்த வருட இறுதிக்குள் வேக்சின் போட முடியும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் தேசிய வேக்சின் வல்லுநர் குழு தலைவர் வினோத் குமார் பால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கோவேக்சின் மற்றும் கோவிட்ஷீல்ட் வேக்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின் ஏற்கனவே இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்தில் இருந்து இந்த வேக்சின் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்திய வேக்சின் தேவை இந்த வருட இறுதியில் பூர்த்தி செய்யப்படும், தேவைக்கு அதிகமாக வேக்சின் உருவாக்கப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்படும் என்று தேசிய வேக்சின் வல்லுநர் குழு தலைவர் வினோத் குமார் பால் தெரிவித்துள்ளார்.

பேட்டி
வினோத் குமார் பால் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் 2021 டிசம்பர் மாதத்திற்குள் 216 கோடி டோஸ் வேக்சின் தயாரிக்கப்படும். ஆகஸ்ட் முதல் டிசம்பருக்குள் இவ்வளவு டோஸ்கள் உருவாக்கப்படும். இதனால் இந்தியாவில் எல்லோருக்கும் வேக்சின் கொடுக்கப்படும்.

8 வேக்சின்
மொத்தம் 8 வேக்சின்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்படும். தற்போது உள்ள கோவாக்சின், கோவிட்ஷீல்ட் உற்பத்தி அதிகரிக்கப்படும். அதன்படி கோவிட்ஷீல்ட் 75 கோடி டோஸ், கோவாக்சின் 55 கோடி டோஸ் உற்பத்தி செய்யப்படும்.

வேறு வேக்சின்
இது போக பயோ இ சப்யூனிட் வேக்சின் 30 கோடி, சைடஸ் கேடில்லா டிஎன்ஏ வேக்சின் 5 கோடி, நோவாவேக்ஸ் 20 கோடி டோஸ், பாரத் பயோ டெக் இன்டராநாஸல் 10 கோடி டோஸ், ஜெனோவா எம்ஆர்என்ஏ 6 கோடி டோஸ், ஸ்புட்னிக் 15.6 கோடி டோஸ் இந்தியாவில் கிடைக்கும் என்று வினோத் குமார் பால் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை
இந்த லிஸ்டில் ஃபைசர், ஜான்சனன் ஜான்சான், மாடர்னா, சினோபார்ம் ஆகிய நிறுவனங்களின் வேக்சின் இடம்பெறவில்லை. இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வினோத் குமார் பால் தெரிவித்துள்ளார். இவர்களிடம் இருந்து வேக்சின் கிடைத்தால், கையிருப்பு இன்னும் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications