தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்தது... மீளும் இந்தியா - அதிகரிக்கும் நம்பிக்கை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து 5ஆவது நாளாக 2 லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
சென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2,55,287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,95,520 ஆக குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவை புரட்டிப் போட்டு விட்டது. தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வந்தது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். மயானங்கள் நிரம்பி வழிந்தன. எங்கும் குவியல் குவியலாக சடலங்கள் காணப்பட்டது.
இரண்டாம் அலையின் தொடக்கத்தில் மாநில அரசுகள் அனைத்தும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த திணறி விட்டனர். பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

1,27,510 பேருக்கு பாதிப்பு
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,81,75,044 பேராக அதிகரித்துள்ளது.

2,59,47,629 குணமடைந்தனர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,55,287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,59,47,629 பேராக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 3,31,895 பேர் மரணம்
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு 2,795 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 3,31,895 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா பாதிக்கப்பட்டு தற்போது நாடு முழுவதும் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,95,520 ஆக குறைந்துள்ளது. 21,60,46,638 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications