அம்மாவை இழந்து வாடும் மகள்! சோனியாவின் தியாகவாழ்வு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்-முஸ்லீம் லீக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜீவ் காந்தியின் மாமியாரும் சோனியாவின் தாயாருமான பவோலோ மொய்னோ மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இரங்கல் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியுடன் பல ஆண்டுகளாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணியை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சோனியா காந்தி தாயார் மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர்மொகிதீன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

Indian Union Muslim League condoles death of Sonia Gandhi mother

''பேரன்புக்குரிய திருமதி சோனியா காந்திஜி அவர்களுக்கு இறையருள் சூழ பிரார்த்தனை. தங்களின் அன்புத்தாயார் இத்தாலியில் மரணமுற்ற செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தோம்,அவரின் ஆன்மா சாந்திக்கு எல்லோரும் இறைஞ்சுவோம்.திருமதி பவோலா மொய்னோ தனது 90வது வயதில் இறப்பெய்தியுள்ளார்

தாங்கள் பிறந்த நாட்டையும் பிறப்பித்த தாயையும் உற்றார், உறவினரையும் பிரிந்து, தான் ஏற்றக் கொண்ட ராஜீவ்காந்திஜியுடன் இந்திய நாட்டின் பிரஜையாகி, தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், இரண்டு முறை மத்திய அரசின் வழிகாட்டியாகவும் விளங்கி, உலகில் சாதனை படைத்த பெண்களின் முதலாமானவராகத் திகழ்ந்து வருகிறீர்கள்.

இன்றைக்கு தன்னைப் பெற்ற தாயை இழந்து வாடுகிறீர்கள். தங்களின் தியாக வாழ்வு சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தங்களின் தயாரின் மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தனது இரங்கலையும் தங்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது. இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் போரசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் தெரிவித்துள்ளார்.''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+