இந்தோனேசியா நிலநடுக்கம்..2004ல் சென்னையை சுருட்டி வீசிய சுனாமி அலைகள்..பறிபோன பல ஆயிரம் உயிர்கள்
சென்னை: நிலநடுக்கமும் சுனாமியும் மக்களை அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன. கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தமிழ்நாடு இலங்கை வரை எதிரொலித்தது. வங்கக் கடல், இந்தியப்பெருங்கடலில் எழுந்த சுனாமி அலைகள் பல ஆயிரம் உயிர்களை காவு வாங்கியது. இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வாபஸ் பெறப்பட்டது.

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலைகள் ஏற்படுகின்றன. "ரிங் ஆஃப் ஃபயர்" இல் அதன் இருப்பிடம் உள்ளதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் நேற்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் நேற்று அதிகாலை நில நடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. அதன் பின் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இதனால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையிலும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவானது. இதனையடுத்து, இந்தோனேசியா நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
பூமியின் வெவ்வேறு அடுக்குகள் அடிக்கடி சந்திக்கும் புவியியல் அமைவிடம் காரணமாக அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டில், மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டது. பல நாடுகளில் சுனாமி அலைகள் தாக்கியதில் பல லட்சம் பேர் உயிரிழந்தனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரைக்கும் கடற்கரையோர நகரங்களில் வசித்த பல ஆயிரம் உயிர்களை சுனாமி அலைகள் சுருட்டிக்கொண்டு போய் கபளீகரம் செய்தன. கொத்து கொத்தாக மடிந்த உயிர்கள் மண்ணிற்கு மொத்தமாக புதைக்கப்பட்டனர். உயிர்களையும் உறவுகளையும் இழந்தவர்கள் 19 ஆண்டுகளாக கடற்கரைகளில் டிசம்பர் 26ஆம் தேதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதே போல கடந்த 2018 ஆம் ஆண்டு சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 4,340 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதியன்று அன்று மேற்கு ஜாவாவில் 5.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது. இதில் 331 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications