முதல்வர் ஸ்டாலினுக்கு போன தகவல்.. தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இணைய வசதி இல்லாத ரேஷன் கடைகளுக்கு இணைய இணைப்பு வழங்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 34 ஆயிரத்து 877 ரேஷன் கடைகளில் 369 ரேஷன் கடைகள் இணைய இணைப்பு இல்லாத ரேஷன் கடைகளாக கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் இணைய இணைப்பு வழங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி அவசர உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரம் ரேஷன் கடை ஊழியர்கள் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

அதன்படி, பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான வாடகை (வண்டி வாடகை) மற்றும் ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி ஆகியவை முறையாக வழங்கப்படுவதில்லை. இதனால் பணியாளர்களே தங்கள் கைக்காசை செலவிடும் நிலை ஏற்படுகிறது. இந்தப் பணிக்காக அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை பணியாளர்களுக்கு இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.
சர்வர் பிரச்சனை
4G சர்வர் மற்றும் POS Machines அடிக்கடி பழுதாவதால், கைரேகை மற்றும் கருவிழி சரிபார்ப்பில் பெரும் தாமதம் ஏற்படுகிறது. பணியாளர்கள் தங்கள் சொந்த செல்போன் டேட்டாவைப் பயன்படுத்தி வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்தத் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றார்கள்.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறுகையில், "தாயுமானவர் திட்ட விநியோகத்துக்கு ஒவ்வொரு மாதமும் 2-வது சனி, ஞாயிறு மற்றும் அடுத்து வரும் திங்கட்கிழமையை நிரந்தர நாட்களாக செயல்படுத்தி அறிவிப்பு வெளியிட வேண்டும்.
50 வயது பணியாளர்கள்
பிரதிநிதி மூலம் பொருட்கள் வழங்குவதற்கும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது, தாயுமானவர் திட்ட விநியோக நாட்களில் 'பிராக்ஸி' (Proxy) முறையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல் நலக்குறைவுடன் காணப்படும் பணியாளர்களுக்கு தாயுமானவர் திட்ட விநியோகத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
பணியாளர்கள் கோரிக்கை
தாயுமானவர் திட்டம் செயல்படும் நாட்களுக்கு மட்டும் 'ப்ளூடூத்' முறையை ரத்து செய்ய வேண்டும். தாயுமானவர் திட்டத்துக்கான வண்டி வாடகை, ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி, ஊக்கத்தொகையை உடனடியாக வழங்குவதோடு, அன்றாட கூலி அடிப்படையில் உதவியாளர் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களின் செல்போன் 'ஹாட் ஸ்பாட்' மூலம் விற்பனை முனை கருவி (பி.ஓ.எஸ்.) இயங்குகிறது என தெரிவித்து 'ஓய்சிஸ்' (OASIS) நிறுவனத்தின் தரவுகளை மேம்படுத்த தக்க உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு
இதையடுத்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் சிவராசு, இணைய வசதி இல்லாத ரேஷன் கடைகளுக்கு இணைய இணைப்பு வழங்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, சேலம், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு இயக்குனர் சிவராசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இணையவசதி இல்லாத கடைகள்
அந்த உத்தரவில் கூறுகையில், "தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 34 ஆயிரத்து 877 ரேஷன் கடைகளில் 369 ரேஷன் கடைகள் இணைய இணைப்பு இல்லாத ரேஷன் கடைகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் இணைய இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கண்ணாடி இழை வலையமைப்பு
தற்போது வரை தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் 28 ரேஷன் கடைகளுக்கு இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் மாவட்டத்தில் இணைய இணைப்பு கிடைக்கப்பெறாத ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் இணைய இணைப்பு வழங்கப்படுவதை கண்காணிப்பதோடு, ரேஷன் கடைகளுக்கு இணைய இணைப்பு வழங்கப்பெற்ற உடன் அந்த தகவலை இயக்குனர் அலுவலகத்துக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications