உளவுத்துறை ரேடாரில் தவெக அமைச்சர்கள்? சாய் குமாருக்கு போட்ட ஆர்டர்.. விஜய் கேட்ட 8 கேள்விகள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் அமைச்சர்களின் பட்டியலை தயாரித்து வருகிறாராம். உதவியாளர்கள், உறவினர்களின் ஆதிக்கத்தை அனுமதிக்காத வகையில் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்த இந்த லிஸ்ட் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.. இந்த நடவடிக்கையின் மூலம் சிறப்பாக செயல்படாத 7 பேரின் அமைச்சர் பதவிகள் பறிபோகும் அல்லது அவர்களின் முக்கிய இலாக்காக்கள் மாற்றப்படும் என்றெல்லாம் செய்திகள் கசிந்தவாறே உள்ளன. . இந்நிலையில் நமக்கு ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் கிடைத்துள்ளது.

தவெக ஆட்சி அமைந்ததுமே, எம்எல்ஏ பதவியைத் துறந்து, தங்கள் அரசியல் எதிர்காலத்தையே பந்தயமாக வைத்து தவெகவில் இணைய ஆரம்பித்து விட்டார்கள் சில அதிமுக புள்ளிகள். இதில் முன்னாள் அமைச்சர்களும் அடக்கம்.

TVK CM Vijay Sai Kumar Tamil Nadu Politics

இவர்கள் தவெகவில் வெறும் சாதாரண உறுப்பினர்களாக இருக்க நிச்சயம் சம்மதித்திருக்க மாட்டார்கள். ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலங்களில் முக்கிய இலாக்காக்களை கையாண்ட நிர்வாக அனுபவமும், அசைக்க முடியாத மாவட்ட செல்வாக்கும் கொண்ட இவர்கள், பதவிக்கான வலையை தவெகவில் விரித்திருக்கவே செய்வார்கள்.

முதலமைச்சர் விஜய் அதிரடி

வரவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றிபெறும்பட்சத்தில் உடனடியாக பவர்புல் அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக சோஷியல் மீடியாவில் விவாதங்களும் வெடித்தபடி உள்ளன. .

இப்போதுள்ள தவெக அமைச்சரவையில் பெரும்பாலானோர் அனுபவமற்ற புதுமுகங்களாகவும், சட்டமன்ற நடைமுறைகளுக்குப் புதியவர்களாகவும் இருப்பதால் நிர்வாகத்தைச் சீர்படுத்த முதலமைச்சர் விஜய்க்கு பழுத்த அரசியல்வாதிகளின் தேவை அவசியமாகிறது.

தவெக அமைச்சர்கள் ஃபெர்ஃபாமன்ஸ் எப்படி

ஆனால், சி. விஜயபாஸ்கர் போன்ற துறை சார்ந்த அனுபவம் மிக்க தலைவர்களை உள்ளே கொண்டுவருவதன் மூலம், திமுக போன்ற பலமான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைச் சமாளிக்கவும் அரசு இயந்திரத்தை வேகப்படுத்தவும் விஜய் திட்டமிடுகிறார். இதனால், திருப்திகரமாக செயல்படாத ஜூனியர் அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு அல்லது அவர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவது உறுதி என்றும் தவெகவில் கிசுகிசுக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் நமக்கு ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் கிடைத்துள்ளது.. அதாவது, தலைமைச்செயலாளர் சாய்குமாரிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர்கள் பற்றி விசாரித்திருக்கிறார் முதல்வர் விஜய். அமைச்சர்களின் ஃபெர்ஃபாமன்ஸ் பற்றி ஒரு ரிப்போர்ட் வேண்டும் என ஏற்கனவே சாய்குமாரிடம் கேட்டிருந்தாராம் விஜய்.. அதனை 2 நாட்களுக்கு முன்பும் நினைவுப்படுத்தியிருக்கிறார்.

சாய்குமாரிடம் உத்தரவு போட்ட விஜய்

முதல்வரின் உத்தரவுக்கேற்ப, துறை செயலாளர்களிடம் அறிவுறுத்தியிருந்தார் சாய்குமார். குறிப்பாக, ஒவ்வொரு அமைச்சர்களின் ஆற்றல், செயல்பாடுகள், அதிகாரிகளிடம் நடந்து கொள்ளும் முறை, துறை சார்ந்த அறிவு உள்ளிட்ட 8 கேள்விகளுக்கான விபரங்களை ரிப்போர்ட்டாக கொடுங்கள், முதல்வர் அந்த ரிப்போர்ட்டை எதிர்பார்க்கிறார் என்று கேட்டிருந்தார்.

இதனால் அதிகாரிகளும், துறை சார்ந்த பணிகளை கவனைத்துக்கொண்டே, தலைமைச்செயலாளர் கேட்டிருந்த அறிக்கையை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளனர். இதனைத்தான், 2 நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலாளரிடம் மீண்டும் கேட்டுள்ளார் விஜய்.

உளவுத்துறை ரிப்போர்ட்

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாகவே அந்த ரிப்போர்ட் கிடைக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்துங்கள் என்றும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.. தலைமைச் செயலாளரிடம் சொன்ன அதே உத்தரவை போன்றே உள்துறையை கவனிக்கும் தனது செயலாளரிடமும் சொல்லியிருக்கிறார். அந்த செயலாளரும் உள்துறை வழியாக உளவுத்துறை ஐ.ஜி.க்கு தகவல் தரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அமைச்சர்களின் நடவடிக்கை கள் பற்றி இப்போது தகவல்களை சேகரித்து வருகிறது உளவுத்துறை. பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் அமைச்சரவையை மாற்றியமைக்கும் திட்டத்தில் முதல்வர் விஜய் இருப்பதால் தான், இந்த ரிப்போர்ட்டுகளை கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது...!!

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+