Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

My TVK: செயலியை பயன்படுத்துவது எப்படி? தவெக உறுப்பினராக இல்லைனா யூஸ் பண்ண முடியாதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான 'My TVK' செயலியை இன்று அறிமுகம் செய்தார் விஜய். இந்த செயலியில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? இந்த 'ஆப்' எப்படி செயல்படும் என்பதைப் பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் தவெக தீவிரமாக இறங்கி உள்ளது. தவெக சார்பாக 'மக்கள் விரும்பும் முதலமைச்சர்' என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டமைப்பு பணிகளை பலப்படுத்தும் பணியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

Vijay Launches My TVK App Features and How It Works

கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவு படுத்த My TVK என பெயரிலான உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று அறிமுகப்படுத்தி வைத்தார். செயலியை தொடங்கி வைத்த பின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறையினருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை விஜய் வழங்கினார்.

மை டிவிகே செயலி

My TVK செயலியில் தற்போது ஏற்கனவே கட்சியில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே உள்நுழைய முடியும். ஆகஸ்ட் 15க்கு பிறகே அனைவரும் இணையலாம். இப்போது கட்சியில் உறுப்பினராக உள்ளவர்கள் உங்கள் மொபைல் எண்ணை அழுத்தினால் உங்களுக்கு ஓடிபி (OTP) வரும். அதனை பதிவிட்டு செயலிக்குள் நுழையலாம். பூத் கமிட்டி உறுப்பினர்கள் லாகின் செய்ததும், அவரவர் பூத் விவரங்கள் காட்டப்படும்.

அதில், வாக்குச்சாவடியில் மொத்தம் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை, அதில் தவெக உறுப்பினர்களாக இணைந்தவர்களின் எண்ணிக்கை ஆகியவை காட்டப்படும். உங்கள் பூத்தில் எத்தனை சதவீதம் பேர் தவெக உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதும் காட்டப்படும்.

Vijay Launches My TVK App Features and How It Works

எப்படி செயல்படும்?

உங்கள் பூத்தில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை, அங்கிருக்கும் வாக்காளர்களின் விவரங்கள் ஆகியவை காட்டப்படும். வாக்காளர்களின் மொபைல் எண்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், அவர்களை தவெக கட்சியில் உறுப்பினராக சேர்க்கவும் ஆப்ஷன் இதில் இருக்கும். அதனை க்ளிக் செய்து உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கலாம். மேலும், அவர்களை அப்படியே நேரடியாக வாட்ஸ் குழுக்களில் இணைக்கவும், அவர்களுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பவும் செய்யலாம்.

இந்த My TVK App செயலியின் Access மாவட்ட செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர்கள் அதில் உள்ள வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ளலாம்.

Vijay Launches My TVK App Features and How It Works

ஜியோ மேப்பிங் டெக்னாலஜி

ஜியோ மேப்பிங் தொழில்நுட்பம் (Geo Mapping) இணைக்கப்பட்டுள்ளதால் வேறு இடத்திலிருந்து உறுப்பினராக இணைக்க முடியாதவாறு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, நிர்வாகிகள் பொதுமக்கள் இல்லத்திற்கு சென்றால்தான் உறுப்பினராக சேர்த்துக் கொள்ள முடியும்.

இந்தச் செயலியில் உறுப்பினர் சேர்க்கை மட்டும் இல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தரும் நபர்கள், கட்சியில் சேராமல் வெளியே இருந்து ஆதரவு தர நினைப்பவர்கள் போன்ற விவரங்களை வாக்குச்சாவடி முகவர்கள் பதிவு செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Vijay Launches My TVK App Features and How It Works

தமிழ்நாடு முழுவதும்

இன்று பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரத்யேக உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுக விழாவில் பேசிய தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 2 லட்சத்து 95 ஆயிரத்து 980 பேர் இனி ஒருங்கிணைந்து தமிழகம் முழுக்க பணியாற்ற இருப்பதாக தெரிவித்தார்.

தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "2 கோடி உறுப்பினர்களை இணைப்பது தான் நம்முடைய இலக்கு . நாம் ஏற்கெனவே ஆரம்பிக்கும் போது 70 லட்சம் பேர் இணைந்ந்த போது வெப்சைட்டே முடங்கியது. இப்போது அதை அப்டேட் செய்திருக்கிறோம் .அதில் 1 நொடியில் 18,000 பேர் இணையக்கூடிய வகையில் வெப்சைட் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் 1 தொலைபேசி எண்ணை வைத்து 5 பேர் இணையலாம்.

ஆகஸ்ட் 15 முதல்

MY Tvk App செயலி 69 ஆயிரத்துக்கும் அதிகமான பூத் கமிட்டி உறுப்பினர்கள் முதலில் இணைவார்கள். 2 கோடி பேர் இலக்காக இருந்தாலும், 8 கோடி பேர் இருக்கக்கூடிய தமிழகத்தில் 5 கோடி பேரை குடும்பம் குடும்பமாக இணைப்பதுதான் நம்முடைய குறிக்கோள். ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் இருந்து மக்கள் நேரடியாக MY Tvk Appல் சேர முடியும். ஆண்டிராய்டு போன் பயனர்கள் ஆகஸ்ட் 15 முதலும் ஆப்பிள் போன் பயன்படுத்துபவர்கள் செப்டம்பரில் இருந்தும் சேரலாம்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+