துண்டான கல்லூரி மாணவி தலை.. சென்னை ரயிலில் தள்ளிவிட்டு காதலன் வெறிச்செயல்! சதீஷை பிடிக்க 2 தனிப்படை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளி கொன்றுவிட்டு தப்பிச்சென்ற அவரது காதலனை போலீசார் 2 தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (20). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்து இருக்கிறார்.

இவரது தாய் ராமலட்சுமி சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சத்யாவுக்கு அதே குடியிருப்பில் வசித்து வந்த சதீஷ் (23) என்ற இளைஞரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

மோதல்

மோதல்

இருவரும் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு ஒன்றாக வருவது ரயில் ஏறிச்செல்வது வழக்கம். இந்த நிலையில் சதீஷின் நடவடிக்கை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி சத்யா அவரை தவிர்க்க தொடங்கி இருக்கிறார். இதனால் மனம் உடைந்த சதீஷ் சத்யாவை தொடர்ந்து பின் தொடர்ந்து சமாதானம் செய்ய முயன்றிருக்கிறார்.

 தள்ளிவிட்ட சதீஷ்

தள்ளிவிட்ட சதீஷ்

இந்த நிலையில் இன்று சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் சென்ற சத்யாவை சந்தித்து அவரை சமாதானம் செய்ய முயன்றுள்ளார் சதீஷ். அப்போது இருவருக்கும் திடீரென சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. கோபத்தின் உச்சிக்கு சென்ற சதீஷ் (23) ஓடிக்கொண்டிருந்த ரயில் முன்பு சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார்.

 துண்டான தலை

துண்டான தலை

அந்த சமயத்தில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயிலில் மோதிய சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தலை துண்டான நிலையில் தண்டவாளத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த சத்யாவின் உடலை கண்ட ரயில் நிலையத்தில் காத்திருந்த ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

2 தனிப்படைகள்

2 தனிப்படைகள்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவியை ரயில்முன் தள்ளிவிட்டு கொலை செய்த அவரது காதலன் சதீஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சதீஷை 2 தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+