சிஎஸ்கே டீம் விளையாடுறது எப்படி இருக்குன்னா.. வெளுத்து கட்டும் வீரேந்திர சேவாக்!
சென்னை: ஏற்கனவே சிஎஸ்கே ஃபேன்ஸ் நொந்து போயிருக்கும்போது, அதில் வெண்ணீரை ஊற்றிவிட்டுள்ளார் வீரேந்திர சேவாக். ஸ்பின் பந்துகளை அடிக்கும் தனது பாணியில், இரண்டாவது முறையாக இறங்கி வந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மீது விமர்சன கணைகளை தொடுத்துள்ளார் வீரு.
இந்த ஐபிஎல் சீசன் சென்னை அணிக்கு மறக்க முடியாத அடி வாங்கும் ஆண்டாக மாறிப்போய்விட்டது. ஆரம்பத்தில் ஓப்பனிங் சொதப்பியது. ஓப்பனிங் செட்டானால் மிடில் ஆர்டர் சொதப்புகிறது. இரண்டும் பரவாயில்லாத போட்டியில் பவுலர்கள் சொதப்பினார்கள்.
தோனி அடிக்கும் பல ஷாட்டுகள் சிங்கிளுக்குத்தான் போகிறது. தன்னால் பந்துகளை மிடில் செய்ய முடியவில்லை என்று அவரே ஒரு போட்டிக்கு பிறகு கொடுத்த பேட்டியில் சொன்னார்.

குளுக்கோஸ் குடிங்கப்பா
இப்படி சிஎஸ்கே தட்டி தவழும் நிலையில்தான், சேவாக், இப்படிச் சொன்னார், "சென்னை டீம் குளுகோஸ் குடிச்சிட்டு வந்து விளையாடுங்கப்பா". பார்க்கும் ரசிகர்களுமே அப்படித்தான் நினைத்தார்கள். இருந்தாலும், சேவாக் நம்ம டீமை கிண்டல் பண்றதை எப்படி ஒத்துக்க முடியும் என்று அங்கலாய்த்தும் கொண்டனர்.

மிடில் ஆர்டர்
இதோ இப்போது, கொல்கத்தா டீமுக்கு எதிரான போட்டியில் கைக்கு கிடைத்த வெற்றியை கோட்டை விட்டு தோற்றது சிஎஸ்கே. 10 ஓவர்களுக்கு வெறும் 1 விக்கெட்டை இழந்து 90 ரன்கள் எடுத்தது. வாட்சன் அரை சதம் அடித்தார். ஆனால் 11 முதல் 14 ஓவர்களில், வெறும் 14 ரன்களைத்தான் கூடுதலாக சேர்க்க முடிந்தது. அப்போது களத்தில் தோனியும், சாம் கர்ரனும் இருந்தனர். தோனி வழக்கம் போல ரன் அடிக்க திணறினார்.

அரசு வேலை
ஒருவழியாக இலக்கை நெருங்கும்போது, 12 பந்துகளில் 7 ரன் எடுத்து டெஸ்ட் போட்டி ஆடினார் கேதர் ஜாதவ். கடுப்பான சேவாக் கூறியதை பாருங்க: என்னோட கருத்துப்படி, சென்னை சூப்பர் கிங்சில் சில வீரர்கள், தாங்கள் அரசு வேலை பார்க்கிறோம் என்ற நினைப்பில் இருக்கிறார்கள். வேலை பார்க்கிறோமோ இல்லையோ, சம்பளம் வந்துவிடும் என்ற நினைப்பில் அவர்கள் இருக்கிறார்கள்.

சேவாக் குட்டு
கொல்கத்தா டீமுக்கு எதிராக ஈஸியாக சிஎஸ்கே வெற்றி பெற்றிருக்க முடியும். கேதர் ஜாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா (ஆரம்பத்தில்) நிறைய டாட் போட்டனர். ஒரு ரன்னை கூட எடுக்கவில்லை. இப்படி பந்துகளை ருசித்து சாப்பிட்டதுதான் சிஎஸ்கே தோல்விக்கு காரணமாகிவிட்டது. இப்படி சொல்லி குட்டு வைத்துள்ளார் வீரேந்திர சேவாக்.
-
கடைசி 4 போட்டிகளில் 3ல் சேப்பாக்கம் மண்ணில் ஆடும் சிஎஸ்கே.. சென்னை அணியின் அட்டவணை.. முழு விவரம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications