4 பேருமே சரி இல்லையே.. 5 நாள் ஐபிஎல்லில் விக்கித்து போன பிசிசிஐ.. டி 20 அணியில் எதிர்பாராத மாற்றம்?
சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சில இந்திய வீரர்கள் ஆடும் விதம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. முக்கியமாக டி 20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகி இருக்கும் சில வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் மோசமாக சொதப்பி வருகிறார்கள்.
2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 8 அணிகளும் மாறி மாறி மோதி இருக்கின்றன. 5 நாள் ஆட்டமும் விறுவிறுப்பாக முடிந்துள்ளது.
இன்று சென்னைக்கும், பெங்களூருக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. இதில் சென்னை வெற்றிபெறும்பட்சத்தில் பிளே ஆப் செல்வது 99 சதவிகிதம் உறுதியாகிவிடும். டி 20 உலகக் கோப்பை நடக்க உள்ளதால் இந்த தொடரில் ஆடும் ஒவ்வொரு வீரர்களின் ஆட்டமும் தீவிரமாக கவனிக்கப்படுகிறது.

இந்தியா
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த போட்டியில் பிசிசிஐ அதிகம் எதிர்பார்த்த இந்திய வீரர்கள் யாரும் பெரிதாக ஆடவில்லை. உலகக் கோப்பை டி 20 அணிக்கு தேர்வாகி இருக்கும் வீரர்கள் பலர் பார்ம் அவுட்டில் இருப்பது தெளிவாக தெரிகிறது. இது பிசிசிஐ அமைப்பை கொஞ்சம் ஜெர்க் ஆக வைத்து இருக்கிறது. முதலாவது மும்பை அணியில் ஆடும் சூர்யா குமார் யாதவ். கடந்த இரண்டு போட்டிகளாக இவர் சரியாக ஆடவில்லை. இவரின் பார்ம் மோசமாக இருந்தது.

மோசம்
இவரின் ஆட்டத்தை பார்த்தாலே இவருக்கு பார்ம் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. இந்திய டி 20 அணியில் இவரைத்தான் ஒன் டவுன் இறக்கும் திட்டம் இருந்தது. ஆனால் தற்போது இவர் ஆடுவதை பார்த்தால் உலகக் கோப்பை டி 20 தொடரில் சரியாக ஆடுவாரா அல்லது சொதப்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் ராகுல் சாகரின் பவுலிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. தொடர்ந்து இவர் சொதப்பி வருகிறார்.
Recommended Video

பார்ம் இல்லை
இந்த சீஸனின் தொடக்கத்தில் ஆடியது போல இப்போது அவரின் பவுலிங் இல்லை. இந்திய அணியில் இடம்பெற்று இருக்கும் ராகுல் சாகர் தொடர்ந்து நன்றாக பவுலிங் செய்வாரா அல்லது சொதப்புவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதேபோல் இன்னொரு பக்கம் டெல்லி வீரர் அஸ்வினும் சரியாக ஆடவில்லை. ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. பவுலிங்கில் வேரியேஷன் காட்டுகிறேன் என்று மோசமாக சொதப்பி எந்த விக்கெட்டும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார்.

அஸ்வின்
அதேபோல் இன்னொரு மிடில் ஆர்டர் வீரரான இஷான் கிஷானும் சரியாக பேட்டிங் செய்வது இல்லை. கடந்த இரண்டு போட்டிகளாக ஐவரும் பார்ம் அவுட்டில் இருக்கிறார். இந்திய டி 20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய நம்பி இருந்த 4 முக்கியமான வீரர்களும் மோசமாக ஆடி ஏமாற்றம் அளித்துள்ளனர். வருண் சக்ரவர்த்தி, கே. எல் ராகுல், ரோஹித் போன்ற சில வீரர்கள் மட்டுமே தற்போது சரியாக ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஹர்திக் பாண்டியா இரண்டு போட்டிகளாக ஆடாமல் ஏமாற்றம் அளித்துள்ளார்.

ஐயர்
இவர் பார்மில் இருக்கிறாரா என்றே தெரியவில்லை. இதனால் இந்திய டி 20 அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் இந்திய அணிக்குள் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இஷான் கிஷானுக்கு மாற்றாக இவரும் அணியில் மாற்று வீரர்கள் லிஸ்டில் சேர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

பாஸ்ட் பவுலிங்
அதேபோல் பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களுக்கு பதிலாக புதிதாக அணியில் கலக்கும் வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்களுக்கு அணியில் இடம் கொடுக்கலாம் என்று பலர் பரிந்துரை செய்ய தொடங்கி உள்ளனர். அதேபோல் ராகுல் சாகர் போன்ற வீரர்களுக்கு பதிலாக ரவி பிஸ்னோய் போன்ற வீரர்களை அணிக்குள் கொண்டு வரலாம் என்றும் பலர் கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர்.

பார்ம் அவுட்
முக்கியமாக வீரர்களின் இந்த பார்ம் அவுட் காரணமாக டி 20 உலகக் கோப்பை இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது. வீரர்கள் யாரையும் தூக்காமல், கூடுதலாக சில வீரர்களை மாற்று வீரர்களாக பிசிசிஐ அறிவிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications