தோனி "பிளான்".. ஆனால் ஒரு சிக்கல்.. அதிமுக - அண்ணாமலை மோதல் டிராமாவா? பின்னணியை சொன்ன புள்ளி!
திமுகவை எதிர்த்தே அண்ணாமலை பெரிய அரசியல் செய்யலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அண்ணாமலை பதற்றத்தின் உச்சத்தில் இருக்கிறார். என்ன செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்று தெரியாமல் தவறாக முடிவெடுத்துக்கொண்டு இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை அண்ணாமலையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பாஜகவினர் பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்ததால் பாஜக கட்சியினர் கடும் அப்செட்டில் இருக்கின்றனர். அமர் பிரசாத் ரெட்டியும் வெளிப்படையாக தங்கள் அதிருப்தியை அதிமுகவிற்கு எதிராக காட்டி உள்ளார்.
இதற்கு ஜெயக்குமாரும் சரமாரி பதிலடியை கொடுத்தார். ஆனால் சிலரோ அதிமுக - பாஜக மோதல் என்பது சிறுபான்மையினர் வாக்குகளை கவர்வதற்கான டிராமா என்றும் சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக - பாஜக மோதலில் என்ன நடக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்கி உள்ளார்.

அரசியல்
அவர் தனது பேட்டியில், திமுகவை எதிர்த்தே அண்ணாமலை பெரிய அரசியல் செய்யலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. மாறாக தவறாக வீடியோ, ஆடியோ அரசியல் செய்கிறார். அவர் அரசியல்வாதி என்பதை மறந்துவிட்டு போலீஸ் போல வீடியோ, ஆடியோ அரசியல் செய்துகொண்டு இருக்கிறார். அவர் இப்படி எல்லாம் செய்ய கூடாது. தன்னை ஒரு பெரிய கட்சியின் மாநில தலைவர் என்பதை மறந்துவிட்டார். அண்ணாமலையின் செயல்பாடுகள் அவருக்கே சிக்கலாகும். அவருக்கே அரசியல் ரீதியாக இது சிக்கலை ஏற்படுத்தும்.

என்ன சொல்கிறார்கள்
சிலர் சொல்கிறார்கள் இது எல்லாம் நாடகம் என்று. அதாவது பாஜக - அதிமுக இப்போது அடித்துக்கொள்வது போல அடித்துக்கொள்ளும். இதன் மூலம் மைனாரிட்டி வாக்குகளை பெறும். அதன்பின் தேர்தல் சமயத்தில் இவர்கள் கை கோர்ப்பார்கள். ஜெயித்த பின் இவர்கள் சேர்ந்து கொள்ளலாம் என்று இவர்கள் திட்டமிடுவதாக சிலர் கூறுகிறார்கள். பாஜக - அதிமுக சேர்ந்து இருந்தால் சிறுபான்மையினர் வாக்கு போட மாட்டார்கள் என்று இவர்கள் பிரிந்து இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் மோதலை பார்த்தால் அப்படி தெரியவில்லை.

மோதல்
இவர்கள் மோதுவதை பார்த்தால் உண்மையில் இவர்கள் சண்டை போட்டுக்கொள்வது போலவே தெரிகிறது. அதையும் மீறி இவர்கள் டிராமா செய்தால் அது அவர்களுக்குத்தான் பிரச்சனை. இது டிராமாவாக இருந்தால், அது அவர்களுக்கே எதிராக திரும்பும். அண்ணாமலை பதற்றத்தின் உச்சத்தில் இருக்கிறார். என்ன செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்று தெரியாமல் தவறாக முடிவெடுத்துக்கொண்டு இருக்கிறார். கட்சிக்கு வந்த புதிதில் திராவிட பாணியில் அரசியல் செய்வேன் என்றார். அவர் அதை தவறாக புரிந்துகொண்டார் போல.

நீக்கம்
கட்சியில் இருந்து பலரை நீக்கினால் அதன் மூலம் தான் திராவிட அரசியல் தலைவர் போல ஆகிவிடலாம் என்று நினைக்கிறார் போல. ஓபிஎஸ் உடன் மோதல் வந்தால் எடப்பாடியை சந்திக்கலாம், எடப்பாடியுடன் மோதல் வந்தால் ஓபிஎஸ்ஸை சந்திக்கலாம் என்று நினைக்கிறார் போல. இதுதான் திராவிட அரசியல் பாணி என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார் போல. அவரின் இந்த அரசியல் எல்லாம் நிலைக்காது. பாஜகவின் வாக்கு வங்கி என்ன 5% - 6% இருக்குமா? சீமான் தனித்து நின்று 7% சதவிகிதம் வாங்குகிறார்.

வாக்கு வாங்க முடியுமா?
ஆனால் பாஜக தனியாக நின்றால் அப்படி வாங்க முடியுமா? அண்ணாமலைக்கு பெரிய சப்போர்ட் உள்ளது. அவருக்கு பெரிய தலைவர்கள் ஆதரவு தருகிறார்கள். அவருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் தனக்கு இருக்கும் ஆதரவை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு கட்சியை வளர்க்காமல் இப்படி கட்சியை வளர்க்காமல் மோதல் போக்கில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். கட்சி தொண்டர்களே அவரை ஏற்கவில்லை. எல் முருகன், பொன்னார் அவரை ஏற்கவில்லை. கட்சியில் சீனியர்கள் யாருமே அவரை ஏற்கவில்லை. அந்த அளவிற்கு அண்ணாமலை மோதல் போக்கை கடைபிடிப்பதை தவறு என்பேன். தோனி போல சீனியர்களை கழட்டிவிட்டுவிட்டு ஆடலாம் என்று நினைக்கிறார். ஆனால் தோனி மட்டும் எல்லா ஓவரும் அடிக்க முடியாது. மற்ற வீரர்களும் அடிக்க வேண்டும். அவர் மற்ற வீரர்களையும் கழட்டிவிடுகிறாரே.. என்று குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications