சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த "ஹீ" யாரு? அண்ணாமலையா? செய்தியாளர் கேட்டதும் மாறிய காயத்ரி ரியாக்சன்.. வெளியான சீக்ரெட்ஸ்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை குறித்தும், தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் குறித்தும் காயத்ரி ரகுராம் இன்று செய்தியாளர் சந்திப்பில் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் தனக்கு எதிராக டிரெண்ட் செய்கிறார். கட்சியில் சீனியர்கள் ஓரம்கட்டப்படுகிறார்கள் என்று பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டி வந்தார். அதோடு இன்று திருச்சி சூர்யா பேசுவதாக வெளியான ஆடியோ குறித்தும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அண்ணாமலையை காயத்ரி ரகுராம் மறைமுகமாக சீண்டுகிறார் என்றும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தன.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் இன்று காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சஸ்பென்ட் நடவடிக்கைக்கு பின் ட்விட்டரில் காயத்ரி ரகுராம், அவர் என்னை தொடக்கத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறார். நான் விரைவில் பதிலடி கொடுப்பேன், (He always wanted me out from day one. I will come back stronger._ என்று பெயரை குறிப்பிடாமல் விமர்சனம் செய்து இருக்கிறார். அவரின் இந்த ட்விட் சர்ச்சையாகி உள்ளது.

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த காயத்திரி ரகுராம் உட்கட்சி மோதல் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

 மோடி பேட்டி கொடுப்பாரா? மேயர் பிரியா அப்படி சொன்னாரா? சீறிய காயத்திரி! கடைசியில் பார்த்தால் ட்விஸ்ட் மோடி பேட்டி கொடுப்பாரா? மேயர் பிரியா அப்படி சொன்னாரா? சீறிய காயத்திரி! கடைசியில் பார்த்தால் ட்விஸ்ட்

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

இந்த செய்தியாளர் சந்திப்பில், நீங்கள் குறிப்பிட்ட அந்த He (அவர்) யார்.. அவர் யார் அண்ணாமலையா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.. இதற்கு பதில் அளித்த காயத்ரி ரகுராம்.. அது யார் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அது யாராக இருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். நான் சொல்ல முடியாது. அண்ணாமலை என்னை டார்கெட் செய்கிறாரா என்று எனக்கு தெரியாது. உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா? இது நல்ல கேள்வி. இதற்கு முன் பதவி போன போதே அதை பற்றி பல முறை லெட்டர் குடுத்தேன்.

 அண்ணாமலை

அண்ணாமலை

நான் முன்பு இருந்த கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராக சிவக்குமார் இருக்கிறார். முன்னர் அவர் செய்த தவறுகள் பற்றி அண்ணாமலையிடம் புகார் கொடுத்தேன். ஆனால் அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்து எந்த தடையும் இன்றி இயங்குகிறார்கள். கட்சியில் வேலையே செய்ய முடியவில்லை. மீட்டிங்கிற்கு கூட செல்ல முடியாமல் செய்கிறார் சிவாவிற்கு எதிராக புகார் கொடுத்தேன். ஆனால் அந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

புகார்

புகார்

எனக்கு எதிராக அண்ணாமலையிடம் பெப்சி சிவாதான் புகார் அளித்தார். நான் செய்கிற விஷயம் எல்லாம் கட்சி நலனுக்காக இருந்தாலும், நான் திமிராக இருக்கிறேன் என்றெல்லாம் புகார் சென்றுள்ளது. நான் முட்டி மோதித்தான் முன்னேற வேண்டும். சாதாரண பெண்ணை அசிங்கப்படுத்தி திருச்சி சூர்யா பேசி இருக்கிறார். இப்படி எல்லாம் பேசும் போது கண்டிப்பாக நான் குரல் கொடுப்பேன். ஒரு பெண்ணுக்கு பிரச்சனை வரும் போது அதை நான் எதிர்ப்பேன். நான் அந்த பெண்ணுடன் நிற்பேன்.

எதிர்க்க மாட்டேன்

எதிர்க்க மாட்டேன்

ஆனால் அண்ணாமலை எடுத்த முடிவை நான் எதிர்க்க மாட்டேன். அதே சமயம்.. இந்த முடிவால் நாங்கள் வருத்தத்தில் இருக்கிறோம் என்றால் ஆம் வருத்தத்தில்தான் இருக்கிறோம். கடந்த 2 வருடத்தில் முதல் 3 மாதங்கள் கலை, கலாச்சார பிரிவு மாநில இயக்குனராக நான் இருந்தேன். அதன்பின் என்னையே நீக்கிவிட்டு சிவாவை அந்த தலைவர் பொறுப்பில் போட்டனர். அதன்பின் 3 மாதங்கள் நான் போஸ்டிங் இல்லாமல் இருந்தேன்.

3 மாதங்கள்

3 மாதங்கள்

கடந்த 3 மாதங்களாக நாங்கள் கடினமாக உழைத்தோம். உங்களால் என் உழைப்பை குறை சொல்ல முடியாது. அதில் நீங்கள் பொய் சொல்ல முடியாது. என்னை நீக்கியதை ஏற்றுக்கொள்கிறேன். அது அண்ணாமலை முடிவு. அதை தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் கட்சிக்கு நான் களங்கம் விளைவித்தேன் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் பாஜகவில்தான் இருப்பேன். பாஜகவை விட்டு செல்ல மாட்டேன். என் மீது தவறு இல்லாத போது நான் ஏன் பயப்பட வேண்டும்.

பாஜக என்னை நீக்குமா ?

பாஜக என்னை நீக்குமா ?

பாஜகவில் என்னை நிரந்தரமாக நீக்கினாலும் தொடர்ந்து கட்சிக்காக பேசுவேன். தேசிய தலைமையிடம் இதை பற்றி பேசுவேன். இதற்காக அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு இருக்கிறேன். காசி தமிழ் சங்க மீட்டிங்கிற்கு என்னை கூப்பிடவில்லை. அந்த கமிட்டியில் நான் இருக்கிறேன். அது என்னுடைய துறை தொடர்பானது. ஆனாலும் கூட என்னை அழைக்கவில்லை. அந்த டீமில் இருந்தவர்களை யார் கூப்பிட வேண்டுமோ அவர்கள் கூப்பிடவில்லை. என்னிடம் ரீசனே சொல்லாமல் நடவடிக்கை எடுத்துள்ளார். பாஜகவிற்கு எதிராக இருக்கிறேன் என்று என்னை யார் கூறினாலும், அவர்களுக்கு எதிராக நான் இருப்பேன், அண்ணாமலையாக இருந்தாலும் எதிராக இருப்பேன்.

 சிவக்குமார்

சிவக்குமார்

அண்ணாமலை என்னிடம் இதை பற்றி பேசினார். ஏன் என்னிடம் நீங்கள் புகார் தரவில்லை என்று கேட்டார். நான் பெப்சி சிவா விவகாரத்தை புகார் கொடுத்தேன். அப்போதே நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை, என்று கூறினேன். செல்வகுமார் பெரிய வார் ரூமை வைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் ஏன் எனக்கு எதிராக செயல்படுகிறார் என்று தெரியவில்லை. அவர் எனக்கு எதிராக தொடக்கத்தில் இருந்தே டிரெண்ட் செய்து வருகிறார். அவர் சொல்வதை எல்லாம் மேலிடம் கேட்கிறது. நான் ஆனால் பின்வாங்க மாட்டேன். நான் என் உரிமைக்காக நிற்பேன். என்று காயத்ரி ரகுராம் தெரிவித்து உள்ளார்.

English summary
Is Annamalai playing against you? Gayathri Raghuram response to question after suspended from BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X