என்னது இதுவா ரஃபேல் வாட்ச் பில்! எவ்ளோ பெரிய கம்பெனி -கையிலா எழுதுவாங்க? "இளையான்குடி" இடைஞ்சல்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கையில் அணிந்து இருந்த விலை உயர்ந்த ரஃபேல் சிறப்பு கைகடிகாரத்தின் பில்லை வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கோரி இருந்த நிலையில் கையால் எழுதப்பட்ட பேப்பர் பில்லை இளையான்குடி ஒன்றிய பாஜகவின் பேஸ்புக் பக்கத்தில் வெளியானதாக ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா? விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்புகள், பொதுக்கூட்ட மேடைகளில் பேசும்போது கையில் ஒரு வாட்ச் அணிந்திருப்பார். அது என்ன வாட்ச் என்று தேசிய நெட்டிசன்கள் அதன் விலையை கண்டு ஷாக் ஆகினர்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவுகளை வெளியிட தொடங்கிய நிலையில் செய்தியாளர் சந்திப்பிலும் அண்ணாமலையிடம் அவரது வாட்ச் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அண்ணாமலை அளித்த பதில்
இதற்கு அவர் அளித்த பதில்தான் ஹைலைட். அதுதான் கடந்த ஒரு வார காலமாக காரசாரமான விவாத பொருளாக மாறி இருக்கிறது. இந்திய பாதுகாப்புத் துறையில் ரஃபேல் விமானங்கள் முக்கியமானவை என்றும், ரஃபேல் விமான பாகங்களைக் கொண்டு 500 வாட்சுகளை தயாரித்தார்கள் எனவும், 149 கடிகாரத்தை தான் அணிந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

ரஃபேல் உதிரி பாகங்கள்
ரஃபேல் போர் விமானத்தில் உள்ள அனைத்து பாகங்களும் அந்த கடிகாரத்தில் உள்ளதாகவும், தான் ஒரு தேசியவாதி என்பதால் அந்த வாட்ச்சை வாங்கி கட்டி இருப்பதாகவும் கூறிய அண்ணாமலை, உயிர் இருக்கும் வரை இந்த கடிகாரம் தனது உடலில் இருக்கும் என்றார். தான் ஒரு தேசியவாதி என்றும், பிரிவினைவாதி இல்லை எனவும் அவர் கூறிய சர்ச்சைக்கு உள்ளானது.

செந்தில் பாலாஜி பதில்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, "பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார்.

ரசீதை வெளியிட வேண்டும்
அவர் வாங்கிய ரசீதை வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம். வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசிய வியாதி, மன்னிக்க.. தேசியவாதி, ஆடு வளர்த்துச் சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாகத் தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை வெளியிட முடியுமா?" என்று வெளியிட்டு இருந்தார்.

அண்ணாமலை பதில்
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, விரைவில் சம்பளக் கணக்கையும், வாட்ச் வாங்கிய பில்லையும் வெளியிடுவதாகவும், தன்னை விட தனது மனைவி 7 மடங்கு அதிகம் சம்பாதிப்பதாகவும் தெரிவித்தார். இதேபோல் திமுகவினர் சொத்து பட்டியலை வெளியிட தயாரா என்று கேள்வி எழுப்பிய அவர், திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட இருப்பதாக அறிவித்தார்.

தேர்தல் மனுவில் உள்ளது
இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, "சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் எனக் கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து 'பல்பு' வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

பில் தயார் செய்ய வேண்டுமா?
தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் 'வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை' என்ற கேள்வியைத் தவிர்த்துவிடலாம் என 'புத்திசாலித்தனமாக' மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?" எனக் கேட்டு இருந்தார்.

வெளியான பில்
இந்த நிலையில் "பாரதிய ஜனதா கட்சி இளையான்குடி ஒன்றியம் சிவகங்கை" என்ற பெயரில் இயங்கி வரும் பேஸ்புக் பக்கத்தில் கடந்த 8.7.2021 என்று தேதி குறிப்பிட்ட கையால் எழுதப்பட்ட பில் வெளியிடப்பட்டு உள்ளது. ரபேல் விமானத்தை தயாரித்த பிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனம் வழங்கியதைபோல் எழுதப்பட்டு உள்ள அந்த ரசீதில் அண்ணாமலை பெயர், கடிகாரத்தின் எண் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கையால் எழுதப்பட்ட பில்
அத்துடன் வாட்சின் விலை ரூ.27 லட்சம் என எழுதப்பட்டு அதில் ஒரு ஜீரோ நீக்கப்பட்டு ரூ.2.7 லட்சம் என மாற்றப்பட்டு உள்ளது. அதிலும் 14% ஜிஎஸ்டி என்று குறிப்பிட்டு மொத்த விலையாக ரூ.3.49 லட்சம் என்று எழுதப்பட்டு இருந்தது. இதனை பலரும் குறிப்பிட்டு டஸ்ஸால்ட் நிறுவனம் தரும் பில் இப்படிதான் இருக்குமா? பேப்பர் பில்லையா இன்னும் பயன்படுத்துகிறார்கள் என்று பாஜகவை விமர்சித்து வந்தனர்.

பாஜக நிர்வாகி மறுப்பு
இந்த நிலையில் "பாரதிய ஜனதா கட்சி இளையான்குடி ஒன்றியம் சிவகங்கை" பக்கத்தை நடத்தும் பாஜக இளையான்குடி தெற்கு ஒன்றிய தலைவர் ராஜபிரதீப் விளக்கம் அளித்து உள்ளார். அதில், "இளையான்குடி பாஜக சார்பாக எந்த ஒரு பதிவும் இந்த பக்கத்தில் இருந்து பதிவு செய்யவில்லை. நமது பெயரில் போலி கணக்கு உருவாக்கி பதிந்து பரப்பி உள்ளனர் எதிரிகள். இதற்கும் இளையான்குடி பாஜகவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நமது பகுதியின் வளர்ச்சியை தடுக்க இதுபோன்ற செயலில் ஈடுபடுவது கண்டத்திற்குரியது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications