டிகிரி வாங்கும் முன்பே "ட்ரீட்மெண்ட்".. சிக்கிய பாஜக அலிஷா அப்துல்லா? பாய்ந்து வந்த திமுக! அவங்கதானே
சென்னை: பாஜக உறுப்பினர் அலிஷா அப்துல்லா தனது படிப்பை முடிக்கும் முன்பே கிளினிக் ஒன்றை நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. அவருக்கு எதிராக போலீசிலும் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
சமீபத்தில் ஹிந்தி மொழி குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியவர் பாஜக உறுப்பினர் அலிஷா அப்துல்லா. நானா தமிழில் பெயில் ஆனேன். எனக்கு தமிழ் படிக்க கஷ்டமாக இருந்தது.
ஆனாலும் என்னை தமிழ் படிக்க சொல்லி அழுத்தம் கொடுத்தனர். ஹிந்தி திணிப்பு என்று சொல்கிறார்களே இது தமிழ் திணிப்பு இல்லையா என்ற முத்தை உதிர்த்து இருந்தார் அலிஷா அப்துல்லா.

அலிஷா அப்துல்லா
அதோடு வடஇந்தியாவில் செல்லும் போது 4 ஆண்கள் வந்து தொல்லை செய்தால் ஹிந்தியில் கத்த முடியும். ஹிந்தி பேசி தப்பிக்க முடியும். இதற்காக ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று விசித்திரமான விளக்கத்தை கொடுத்து இருந்தார். தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். ஹிந்தி திணிப்பு வேண்டாம் என்று மக்கள் கூறி வரும் நிலையில் பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா தமிழ் திணிப்பு என்று கருத்து தெரிவித்து இருக்கிறார். அவரின் பேச்சு கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

மருத்துவர்
இந்த நிலையில்தான், பாஜக உறுப்பினர் அலிஷா அப்துல்லா தனது படிப்பை முடிக்கும் முன்பே கிளினிக் ஒன்றை நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. அவருக்கு எதிராக போலீசிலும் வழக்கு பதியப்பட்டு உள்ளது. அதன்படி கரிஷிமா பியூட்டி கிளினிக் என்ற மருத்துவமனையை இவர் சிஇஓவாக இருந்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் திமுக நிர்வாகிகள் சிலர், நீங்கள் இன்னும் படித்தே முடிக்கவில்லையே. எப்படி கிளினிக் நடத்துகிறீர்கள்.

கிளினிக்
டிகிரி வாங்கும் முன் எப்படி நீங்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்க முடியும். டிகிரி இல்லாமல் நீங்கள் எப்படி டெர்மடாலஜி மருத்துவத்தை மேற்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு அலிஷா அளித்த பதிலில், நான் எனது மருத்துவப் பட்டப்படிப்பு 3 ஆம் ஆண்டு படித்து வருகிறேன். நான் ஒரு கிளினிக்கை நடத்தி வருகிறேன். அங்கு 2 மூத்த டாக்டர்கள் MBBS என்னுடன் பணியாற்றுகிறார்கள். நான் பட்டம் பெற்ற அழகுக்கலை நிபுணர், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எனது கிளினிக்கில் வந்து பார்க்கலாம். அழகுக்கலை நிபுணர்கள் லேசர் கருவிகளை பயன்படுத்த டாக்டராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.

ஊசிகள்
இதையடுத்து நீங்கள் லேசர் கருவிகளை மட்டும் பயன்படுத்தவில்லையே. நீங்கள் ஊசிகளைதான் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் ஊசிகளை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அது சட்டப்படி தவறு. அப்படி பயன்படுத்தவில்லை என்றால் ஊசிகளை வைத்து இருப்பது போல விளம்பரம் கொடுப்பதும் தவறு. உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று குற்றஞ்சாட்டி உள்ளனர். அவரின் இணைய பக்கத்தில் இருக்கும் போட்டோவையும் திமுகவினர் பகிர்ந்து உள்ளனர்.

வழக்கு
இதையடுத்து திமுகவினர் சார்பாக அலிஷா அப்துல்லா மீது போலீசில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. மருத்துவ டிகிரி வாங்கும் முன் அவர் கிளினிக்கை நடத்துவதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. மருத்துவம் படிக்காமல் கிளினிக்கில் வேலை செய்வதாகவும், ஊசிகளை பயன்படுத்துவதாகவும் புகார் வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுகவினர் அமைச்சர் மா. சுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா?












Click it and Unblock the Notifications