பாஜகவிற்கு பீதியை கிளப்பிய கருத்து கணிப்பு.. லோக்சபா தேர்தலில் இலவசங்களை வழங்க முடிவு? காட்சி மாறுதே
சென்னை: லோக்சபா தேர்தல் கருத்து கணிப்புகள் பல பாஜவிற்கு எதிராக வரும் நிலையில் தேர்தல் வியூகத்தை மாற்ற பாஜக திட்டமிட்டு வருவதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன.

2024 லோக்சபா தேர்தல் குறித்து பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் சில கருத்து கணிப்புகள் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது என்றும் சில கருத்து கணிப்புகள் பாஜகவிற்கு கண்டிப்பாக மிகப்பெரிய மெஜாரிட்டி கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றன.
கருத்து கணிப்பு 1 : உதாரணமாக டைம்ஸ் நவ் இடிஜி சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டு சமீபத்தில் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் எனவும், 26 கட்சிகளின் ‛‛இந்தியா'' கூட்டணி பின்னடைவை சந்திக்கும் எனவும் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 296 முதல் 326 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 கட்சிகள் இணைந்த எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி 160 முதல் 190 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் 4-8 இடங்களை பாஜக - அதிமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் பிடிக்கும் என்று இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்து கணிப்பு 2 : இன்னொரு பக்கம் PCSurveysIndia அதாவது Political Critic என்ற அமைப்பு இன்னொரு கருத்து கணிப்பை வெளியிட்டு உள்ளது. அதில், பாஜகவின் என்டிஏ கூட்டணி : 255 இடங்கள் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி: 225 இடங்கள் மற்ற கட்சிகள் : 63 இடங்கள் வெல்லும் என்று இந்த அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது
மாநில வாரியாக லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 38 இடங்களை திமுக காங்கிரசின் இந்திய கூட்டணி வெல்லும் என்றும், அதிமுக - பாஜக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் வெல்லும் என்றும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
கருத்து கணிப்பு 3 : ஸ்மால் பாக்ஸ் இந்தியா சர்வே என்ற அமைப்பு இந்த புதிய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,
தமிழ்நாட்டில் திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களை வெல்லும்
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி - 03 இடங்களை வெல்லும்
தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில்வென்றது. அதிமுக 1 இடத்தில் வென்றது. இந்த முறை திமுக கூட்டணி 2 இடங்களை இழக்கும். பாஜக கூட்டணி கூடுதலாக இரண்டு இடங்களை பெறும். அதாவது தமிழ்நாட்டில் இருந்து பாஜக கூட்டணிக்கு 3 எம்பிக்கள் வருவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. இவர்கள் பாஜக கட்சியா, அதிமுக கட்சியா என்பது தெரிவிக்கப்படவில்லை.
மொத்தமாக எத்தனை: லோக்சபா கருத்துக்கணிப்பு மொத்த இடங்கள் : 543, மெஜாரிட்டி பெற 272
- இந்தியா கூட்டணி - 243
- பாஜகவின் என்டிஏ கூட்டணி - 255
- மற்றவை - 45
இலவசம்: லோக்சபா தேர்தல் கருத்து கணிப்புகள் பல பாஜவிற்கு எதிராக வரும் நிலையில் தேர்தல் வியூகத்தை மாற்ற பாஜக திட்டமிட்டு வருவதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை வழங்குவதை பாஜக தலைவர்கள் பலர் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். இலவசங்கள் மூலம் மக்கள் பல அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொண்ட நிலையிலும் கூட பாஜக இதை கடுமையாக எதிர்த்து வருகிறது.
அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளை வழங்க கூடாது. இலவசங்களை வழங்கும் கட்சிகளின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜகவை வழக்கறிஞர் அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்த திமுக, ரிட் மனு மூலம் தங்களையும் மனுதாரராக சேர்த்துக்கொண்டது. இலவசங்கள் காரணமாக மக்களின் அடிப்படை பொருளாதாரம் உயரும். இதற்கு பொருளாதார ரீதியாக சான்றுகள் உள்ளன, என்று திமுக தரப்பு இந்த வழக்கில் வாதம் வைத்து வருகிறது. அதே சமயம் இலவசங்களை வாக்குறுதிகளாக கொடுப்பதை பாஜகவினர் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இலவசங்கள் காரணமாக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வெற்றிபெறும் நிலையில்தான் பாஜக இந்த வழக்கை தொடுத்தது.
இலவசங்கள் மூலம் குஜராத்திலும் ஆம் ஆத்மி வென்றுவிடும் என்ற அச்சத்தில் பாஜக இந்த வழக்கை தொடுத்ததாக கூறப்பட்டது. அதே சமயம் ஆம் ஆத்மியை சமாளிக்க பாஜகவும் இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கியது. குஜராத் சட்டசபை தேர்தலுக்காக பாஜக "Agresar Gujarat Sankalp Patra 2022" என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது. அதில் இலவச கல்வி கொடுப்போம், பெண்களுக்கு கிண்டர் கார்டன் முதல் பிஜி வரை கல்வி இலவசம் என்று பாஜக வாக்குறுதி கொடுத்தது. அதோடு, இலவச மருத்துவம், இரண்டு இலவச சிலிண்டர்கள், சன்னா குறைந்த விலையில், குறைந்த விலையில் எண்ணெய், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச மின்சார பைக் ஆகியவை வழங்கப்படும் என்று பாஜக அறிவித்தது. தமிழ்நாட்டில் பைக் வழங்கும் திட்டத்தை காப்பி அடித்து பாஜக இந்த வாக்குறுதியை கொடுத்தது.
லோக்சபா தேர்தல்: இந்த நிலையில்தான் தற்போது லோக்சபா தேர்தலிலும் இலவசங்களை கொடுக்க பாஜக திட்டமிட்டு வருகிறதாம். இதனால் இந்தியா முழுக்க உள்ள பாஜகவின் மூத்த தலைவர்கள், தேசிய நிர்வாகிகள், அரசியல் ஆலோசகர்களிடம் பாஜக கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாம்.
அதன்படி இலவசங்களை பாஜக கையில் எடுக்கலாமா? அப்படி இலவசங்களை கொடுத்தால் என்ன இலவசங்களை கொடுக்கலாம். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பெண்கள் வாக்களிக்கிறார்கள். இதற்கு 1000 ரூபாய் உரிமை தொகை உள்ளிட்ட திட்டங்கள் காரணமாக அமைகிறது. இலவச பேருந்து டிக்கெட் வசதியும் முக்கிய காரணம்.
இதேபோல் பெண்களை கவரும் வகையில் திட்டங்களை கொண்டு வரலாமா என்றும் பாஜக ஆலோசனை செய்துள்ளதாம். இதையடுத்தே சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் இலவசங்களை அறிவிக்கலாமா என்று பாஜக ஆலோசனை செய்து வருகிறதாம்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications