அதிமுக உள்ளேயே புகுந்து "ஆபரேஷன் தாமரை.." எடப்பாடி "ரைட் ஹேண்டுக்கு" வலை வீசிய பாஜக! அட அவரா?
சென்னை: அதிமுகவில் நடக்கும் மோதலால் தற்போது ராயப்பேட்டை அதிமுக அலுவலகமே சூடாக இருக்கிறது. அதிமுகவின் இந்த சூட்டில் முடிந்த அளவு குளிர் காய மற்ற கட்சிகளும் முடிவு எடுத்துவிட்டன. முக்கியமாக அதிமுகவில் நிலவும் மோதலை பயன்படுத்தி அதில் இருந்து தலைகளை தூக்க பல்வேறு கட்சிகள் முயன்று வருகின்றனவாம்.
அதிலும் சமீபத்தில் அதிமுக மோதலுக்கு இடையில் முக்கியமான முன்னாள் எம்பி ஒருவர் பாஜக பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல் வந்தது. அதிமுக கூட்டங்களில் பெரிதாக கலந்து கொள்ள அவர் திடீரென பாஜக பக்கம் தாவ போவதாக செய்திகள் வந்தன.
அதிலும் அந்த முன்னாள் அதிமுக எம்பி பாஜக தலைகளை சமீபத்தில் சந்தித்த காரணத்தால் அவர் பாஜகவில் இணைய போகிறார் என்ற சந்தேகம் வலுத்தது.

பாஜக வலை
இந்த நிலையில்தான் எடப்பாடிக்கு எல்லாமுமாக இருந்த இன்னொரு மூத்த நிர்வாகிக்கும் பாஜக வலை வீசி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக வலை வீசிய அந்த நபர் வேறு யாரும் இல்லை.. சி.வி.சண்முகம்தான். அதிமுகவில் இவர் கடந்த 4 நாட்களாக எந்த பரபரப்பையும் ஏற்படுத்தாமல் அமைதியாக இருக்கிறார். பெரிதாக எதுவும் சண்முகம் பேசுவது இல்லை.

எடப்பாடி கூட்டம்
எடப்பாடி கலந்துகொண்ட திரவுபதி முர்மு நிகழ்வில் கூட சண்முகத்தின் தலை தெரியவில்லை. அதன்பிறகு எடப்பாடியை சந்திக்க சென்ற சீனியர்கள் மீட்டிங்கிலும் அவர் காணவில்லை. 4 நாட்களுக்கு முன்பு வரை ஊடகங்களில் இவர் தீவிரமாக பேசி வந்தார். ஆனால் இப்பொது சைலெண்டாக இருக்கிறார். இந்த அமைதிதான்.. அதிமுகவில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

சண்டையா?
எடப்பாடிக்கும் சண்முகத்துக்கும் மனவருத்தம்.. அதனால்தான் இப்படி என ஓபிஎஸ் முகாமை சேர்ந்தவர்கள் கொளுத்திப் போடுகிறார்கள். இதற்கிடையே, சி.வி.சண்முகத்துக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் தமிழக பாஜகவில் பொறுப்பில் இருக்கிறார். அந்த நண்பருக்கு ஆர்.எஸ்.எஸ்.தலைவர்களிடம் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த நிலையில், "பாஜகவுக்கு வந்து விடுங்கள். மேலிடத்தில் சொல்லி அமைச்சர் பதவி வாங்கித் தருகிறேன் " என சண்முகத்திடம் பேசியிருக்கிறார் என்று பாஜக தரப்பில் கசிகிறது.

சண்முகம் போக மாட்டார்
அதிமுக மோதலை பயன்படுத்தி அக்கட்சியிலும், வன்னியர்கள் தரப்பிலும் வலிமையாக இருக்கும் சண்முகத்திற்கு வலை வீச பாஜக நினைக்கிறதாம். அதிமுக தலைகளை தூக்கி.. அதிமுகவிற்குள் ஒரு ஆபரேஷன் தாமரையை செய்ய பாஜக திட்டமிட்டு வருகிறதாம். ஆனால் சிவி சண்முகம் தரப்போ.. அந்த திட்டத்திலேயே இல்லை என்று கூறப்படுகிறது. சிவி சண்முகத்திற்கு நெருக்கமான தரப்பு நம்மிடம் கூறுகையில் , எடப்பாடி - சண்முகம் அண்ணன் இடையே மோதல் எல்லாம் இல்லை. அவர் கட்சி மாற சான்ஸே இல்லை.
Recommended Video

எம்பி
பல நிர்வாகிகள் இருந்த போது இப்போதே தானே ராஜ்ய சபா எம்பி பதவியை சண்முகத்திற்கு கொடுத்தனர். அப்படி இருக்கும் போது அவர் ஏன் அதிருப்தி அடைய வேண்டும். அதோடு பொதுக்குழுவில் எடப்பாடி பொதுச்செயலாளர் ஆனால், சண்முகம்தான் எடப்பாடி பதவி வகித்த தலைமை கழக செயலாளர் பதவியை பெற போகிறார். அப்படி இருக்கும் போது அவர் ஏன் பாஜக பக்கம் செல்ல வேண்டும். வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications