நடவடிக்கை எடுப்பேன்.. அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை.. மாறுகிறது கேபினெட்? என்ன நடக்குது?
சென்னை: அமைச்சர்களிடம் இது சீரியஸான தேர்தல்.. இதில் நாடே நம்மை பார்க்கிறது. முறையாக பணிகளை செய்ய வேண்டும். இதில் சரியாக பர்பார்ம் செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் எல்லாம் முடிந்து அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி: அதில், லோக்சபா தேர்தலில் அமைச்சர்களின் பணிகளை ஸ்டாலின் தீவிரமாக கண்காணித்தார். ராணிப்பேட்டையில் ஒரு அமைச்சர், சென்னையில் இருக்கும் அமைச்சர் ஒருவர், இன்னொரு பக்கம் தாம்பரத்திலும் அமைச்சர் ஒருவருக்கும் வேட்பாளருக்கும் இடையில் மோதல் வந்தது. தேனியில், மதுரையில் நன்றாக பணிகள் நடந்தன. கோவையில் பூச்சி முருகன் பொள்ளாச்சியில் பணிகளை செய்தார். அவர் சிஸ்டமேட்டிக்காக பணிகளை செய்தார்.
நெல்லையில் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிரமாக பணிகளை செய்தார். சிலர் சரியாக பணிகளை செய்தனர். இதில் என்ன முடிவு வரும் என்பதை பொறுத்து அமைச்சரவை மாற்றம் இருக்கும். ஸ்டாலின் முன்பே சொல்லிவிட்டார். இது சீரியஸான தேர்தல்.. இதில் நாடே நம்மை பார்க்கிறது. முறையாக பணிகளை செய்ய வேண்டும். இதில் சரியாக பர்பார்ம் செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
ஸ்டாலின் எச்சரிக்கை: எல்லார் மீது புகார் உள்ளது. முடிவை பொறுத்து.. வாக்கு வேறுபாடு குறைவாக இருந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். 2026 சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாக ஸ்டாலின் இதை பார்க்கிறார். எடப்பாடியும் அப்படித்தான் இதை பார்க்கிறார். ஸ்டாலின் ரொம்ப சீரியஸாக இதை பார்த்து பணிகளை செய்துள்ளார். திமுக களத்தில் பணிகளை தீவிரமாக செய்துள்ளது.
கோவையில் அண்ணாமலை வேலையே செய்ய முடியவில்லை. திமுக - அதிமுக அங்கே டீம் போட்டது. ஆனால் கடைசி 3 நாட்களில் அங்கே அதிமுக பிரச்சாரம் செய்யவே இல்லை. அண்ணாமலையால் காசு கூட கொடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு திமுக - அதிமுக களத்தில் இறங்கி பணிகளை செய்தனர். நகர்ப்புறங்களில் மட்டுமே அண்ணாமலை பணம் கொடுக்க முடிந்தது.
இதனால்தான் இப்போது 1 லட்சம் வாக்காளர்களை காணவில்லை என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார். கையில் ஓட்டு போட்ட முத்திரையோடு வாக்களித்தனர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கோவையில் 1 லட்சம் வாக்குகள் காணவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். அதிமுக பூத் லெவலில் சரியாக வேலை பார்க்கவில்லை. சென்னையில் அதிமுகவின் பூத் கமிட்டிகள் எல்லாம் மிக மோசமாக செயல்பட்டன.
திமுகவிற்கு சில தொகுதிகள் மட்டும் சந்தேகமாக உள்ளது. கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருப்பூர் , வேலூர் ஆகியவை குழப்பமாக உள்ளது. அங்கே திமுகவிற்கு உட்கட்சி ரீதியாக பிரச்சனைகள் உள்ளன. முக்கியமாக திருப்பூர் , வேலூர் மாவட்டங்களில் திமுகவிற்கு உட்கட்சி ரீதியாக பிரச்சனைகள் உள்ளன. இதை எல்லாம் ரிவ்யூ செய்வார்கள். வார்னிங் வரும். இப்போது எக்சிட் போல் திமுக செய்துள்ளது. கோவையில் திமுக ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றிபெறும் என்று கூறி உள்ளனர்.
தேர்தல் முடிவுகளை பொறுத்து அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications