கனிமொழி ரூட்.. உதயநிதி கையில் எடுக்கும் பிரம்மாஸ்திரம்.. ஸ்டாலின் வெளிநாடு போகும் முன்.. ட்விஸ்ட்
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடக்கும் பிரம்மாண்டமான திமுக இளைஞரணி மாநாட்டிற்கு டெல்லியில் இருந்து சில தலைவர்களை அழைத்து வருவதற்கான தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
திட்டமிட்டிருந்தபடி, டிசம்பர் 17-ந்தேதி இளைஞரணி மாநாடு நடந்து முடிந்திருந்தால் மாநாடு முடிந்ததும் வெளிநாடு கிளம்பியிருப்பார் ஸ்டாலின். டிசம்பர் கடைசி வாரம் வெளிநாடு செல்வதற்காக மத்திய அரசிடம் அனுமதியும் பெற்றிருந்தது தமிழக அரசு.

ஆனால், புயல் காரணமாக மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. டிசம்பர் மாதம் 24- க்கு ஒத்திவைக்கப்பட்ட மாநாடும் தள்ளிவைக்கப்பட்டது. தள்ளிவைக்கப்பட்ட அந்த மாநாடு, ஜனவரி 21-ந்தேதி நடக்கிறது. அது முடிந்ததும் பிப்ரவரியில் வெளிநாடு செல்ல முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மாநாடுக்கு முன்னதாக அதாவது பொங்கல் முடிந்ததும் கவர்னர் உரையுடன் இந்தாண்டின் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தை துவக்கலாமா ? என்கிற ஆலோசனையை முதல்வர் நடத்தியிருக்கிறார்.
இதற்கிடையே, மகளிர் உரிமை மாநாட்டை கனிமொழி அண்மையில் நடத்தினார். அதற்கு சோனியா, பிரியங்கா உட்பட முக்கிய பெண் தலைவர்களை அழைத்து வந்து மாநாட்டை நடத்தி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார் கனிமொழி. அதேபோல, இளைஞரணி மாநாட்டுக்கு ராகுல்காந்தி உட்பட தேசிய அளவிலான இளம் தலைவர்களை அழைத்து வந்து பிரமாண்டப்படுத்த உதயநிதி முயற்சித்துள்ளார். அதாவது கனிமொழி செய்த மாதிரி.
டெல்லியில் ராகுலை உதயநிதி சந்தித்த போது இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார். ராகுல்காந்திக்கு ஆர்வம் இல்லை. இதனால், அவர் மேற்கொள்ளவிருக்கும் யாத்திரையை சுட்டிக்காட்டி, வருவதற்கு வாய்ப்பில்லை என மறுத்து விட்டார் ராகுல். கனிமொழியால் சோனியாவையும் பிரியங்காவையும் வரவழைக்க முடியும் போது, உதயநிதியால் ராகுலை வரவழைத்திருக்க முடிந்திருக்க வேண்டும் என்று விமர்சனமும் இளைஞரணியிடம் இருக்கிறது
ஸ்டாலின் வரலாறு: கடந்த 2007ல் முதல்வர் ஸ்டாலின்.. அப்போதைய திமுகவின் இளைஞரணி செயலாளராக இருந்தார். இளைஞரணி வெள்ளிவிழா மாநாட்டை பிரம்மாண்டமாக ஸ்டாலின் நடத்தினார். அதேபோல் பிரம்மாண்டமாக திமுக சார்பாக அதன்பின் இளைஞரணி மாநாடு நடத்தப்படவில்லை.
ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அடையாளம் தேடிக்கொடுத்த மாநாடுகளில் இதுவும் ஒன்று. இந்த நிலையில்தான் அதேபோல் பிரம்மாண்ட இளைஞரணி மாநாட்டை 17 ஆண்டுகளுக்கு பின் உதயநிதி ஸ்டாலின் நடத்த உள்ளார். முதலில் இந்த மாநாட்டை எங்கே நடத்துவது.. அதாவது கொங்கு மண்டலமா, மத்திய தமிழ்நாட்டிலா எங்கு மாநாட்டை நடத்துவது என்று ஆலோசனை செய்யப்பட்டதாம்.
கடைசியில் கொங்கு மண்டலத்தில் மாநாட்டை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். இதில் கோவை, தருமபுரி, நாமக்கல் எல்லாம் தேர்வு செய்யப்பட்டு கடைசியில் சேலம் இறுதி செய்யப்பட்டு உள்ளதாம்.
லோக்சபா தேர்தலுக்கான பணிகளை கடந்த சில நாட்களாகவே திமுக தீவிரமாக செய்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 38 இடங்களில் வென்றது. புதுச்சேரியில் 1 இடத்தில் வென்றது. இதே வெற்றியை இந்த முறை தமிழ்நாட்டில் பதிவு செய்வதற்கான தீவிரமான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது,.
40க்கு 40 இடங்களில் வெல்ல வேண்டும் என்று டார்கெட் வைத்து திமுக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தல் பணிகள் திமுகவிற்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதி: கடந்த சில மாதங்களாகவே கட்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளில் எல்லாம் உதயநிதி ஸ்டாலினின் தலையீடு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எடுக்க கூடிய முடிவுகளுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. கட்சியின் அடுத்த அதிகார புள்ளியாகவும் உதயநிதி பார்க்கப்படுகிறார்.












Click it and Unblock the Notifications