அருந்ததியருக்கு 2% உள் ஒதுக்கீடு தந்தது திமுக! அதுவா தலித் விரோத கட்சி?
சென்னை: அருந்ததியர் சமூகத்திற்கு 2% உள் ஒதுக்கீடு வழங்கிய திமுக பட்டியலின மக்களுக்கு எதிரான கட்சியா என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கடந்த சில நாள்கள் முன்னதாக நாடாளுமன்ற விவாதத்தின் போது இந்திய 'வானிலை மையத்தில் முறையான தொழில்நுட்பங்கள் இல்லை. அவை அனைத்து காலாவதியானவை. அதனால் மழையைக் கணித்துச் சொல்வது அந்தத் துறை தோல்வி அடைந்துள்ளது' என்று திமுக உறுப்பினர் டி ஆர் பாலு பேசினார்.

அப்போது குறுக்கிட்டுப் பதிலளிக்க முயன்றார் மத்திய அமைச்சர் எல்.முருகன். தனது உரையின் போது இடையில் குறுக்கிட்டவரை, தயவு செய்து அமரும்படி கூறினார் பாலு.
ஆனால், விவாதம் தொடர்ந்தது. டி.ஆர்.பாலு தொடர்ந்து பேசுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் ஆவேசமான பாலு, 'சபாநாயகர் அவர்களே அவரைக் கட்டுப்படுத்துங்கள். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கே தகுதியற்றவர்' என்று சொன்னார்.
டி.ஆர்.பாலு அன்ஃபிட் என்று முருகனைச் சொன்னது சர்ச்சையானது. எங்கள் கட்சியைச் சேர்ந்த தலித் ஒருவர் அமைச்சராகி உள்ளார். அவரை தகுதி அற்றவர் எனச் சொல்கிறார் பாலு. அவரை மன்னிப்பு கேட்கச் சொல்ல வேண்டும் என பாஜக அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. திமுக தலித் விரோத கட்சி என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். உண்மையில் திமுக தலித் விரோத கட்சியா? அதற்காக விளக்கங்களை அளிக்க முன்வந்துள்ளார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன்.
அவர் என்ன சொல்கிறார்?
"கடந்த மக்களவைத் தேர்தலின் போது மோடியைப் பற்றிப் பேசும்போது 'நீச்' என்ற வார்த்தையை மணி சங்கர் அய்யர் பயன்படுத்தினார். மணி சங்கர் அய்யர் தனிப்பட்ட முறையில் வைத்த விமர்சனம் அது.

தேர்தல் பரப்புரையை மிகச் சிறப்பாகக் கொண்டுபோவதில் திறமையானவர் மோடி. ஆகவே அவர் என்ன செய்தார், 'பாருங்கள் நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால் 'நீச்' என்று சொல்லுகிறார்' என்று அதை அப்படியே திசைதிருப்பி, மிகப் பெரிய விதமாக மாற்றினார்.
மத்திய இணை அமைச்சராக பாஜக எல்.முருகனுக்குப் பதவி வழங்கி இருக்கிறது. இவருக்கு முன்னதாகவே ஆ.ராசாவுக்கு மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சராக திமுக பதவி வழங்கவில்லையா? அதன்பிறகு மிகமிக சக்திவாய்ந்த தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய அமைச்சராக்கவில்லையா?

அதைப்போல எல்.முருகனை ஒரு கேபினேட் அமைச்சராக அமர்த்த வேண்டியது தானே? பாஜக ஆட்சியில் பலரை ஆளுநராகப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அதில் யாருமே பட்டியலினத்தவர்கள் இல்லையே? தமிழ்நாட்டிலிருந்து ஆளுநராக அமர்த்தப்பட்டவர்களில் ஒருவர் கூட பட்டியலினத்தவர் இல்லையே? அப்படி என்றால், பாஜக தலித் மக்களுக்கு எதிரான கட்சி என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா?
திமுகவை விடுங்கள். அதிமுகவும் திராவிடக் கட்சிதான். அதில் சபாநாயகராக எந்த வகுப்பைச் சேர்ந்தவருக்குப் பதவி அளித்திருந்தார்கள்?
பாஜக செய்வது கீழ்த்தரமான அரசியல். முதலில் பாஜக பட்டியலினத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்துவிட்டு. பிறகு மற்ற கட்சிகளைக் கூறை சொல்லட்டும்.

உடனே நாங்கள் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவரையே நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தியிருக்கிறோம் என்று பாஜகவினர் சொல்வார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தை Define செய்கிறது தெரியுமா? The parliament consists of the president of india and the lok sabha and rajya sabha என்று வரையறை செய்கிறது. அப்படி என்றால், நாடாளுமன்றத்திற்காக புதிய கட்டடம் கட்டித் திறக்கும் போது அந்த நாடாளுமன்றத்தின் மிக முக்கியமான அங்கமாகிய ஒருவரை அழைக்க வேண்டுமா? வேண்டாமா?
அனைவரையும் அழைத்தார்களே? ஏன் ராமர் கோயில் திறப்பு விழாவில் அவரை முன்னிலைப்படுத்தவில்லை.

ராமர் கோயிலை மோடி பிரதிஷ்டை செய்யக் கூடாது. அது ஆகம விதிகளுக்கு எதிரானது என்று சங்கராச்சாரியார் சொன்னபோது அது தீண்டாமை இல்லையா? அதற்கு ஏன் ஒட்டுமொத்த பாஜகவினரும் மௌனம் காத்தார்கள்? சங்கராச்சாரியார் சாதி அடிப்படையில் பேசினாரே? அதற்கு ஏன் மவுனம் காத்தீர்கள்?
இவ்வளவுக்குப் பின்பு இந்துத்துவாவை மோடி விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் என்றால் அவர் உண்மையிலேயே பெருந்தன்மையானவர்தான்.
இவ்வளவு சம்பவங்களைச் சொன்னேன். இத்தினைக்குப் பின்னரும் பட்டியலின மக்களைப் பாரபட்சமாக நடத்துகிறது என்று திமுகவைப் பார்த்துச் சொல்ல பாஜகவுக்குத் தகுதி இருக்கிறதா?
குடியரசுத் தலைவர் என்ற உயர் பதவியிலிருந்த ஒருவர் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை என்று செய்தி வந்ததே? அதை எதிர்த்து கி.வீரமணி கூட வழக்குப் போட்டார். நீங்கள் அந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர் இல்லை என்று சொல்லி அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இவ்வளவு பெரிய உயர்பதவியிலிருந்தவருக்கே சமூகநீதி கிடைக்கவில்லை. அதை பாஜக வேடிக்கைபார்த்தது. அவர்கள்தான் திமுகவைப் பட்டியலின மக்களுக்கு எதிரான கட்சி என்று சொல்கிறார்கள். அது எப்படிச் சரியாக இருக்கும்?
இதே மத்திய அமைச்சர் எல்.முருகன் சார்ந்துள்ள சமூகத்தினருக்கு மு.கருணா நிதி அவரது ஆட்சிக்காலத்தில் 2% உள் இடஒதுக்கீடு கொடுத்தார். அதனால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த எத்தனைப் பேர் உயர்பதவிகளுக்கு வந்தார்கள்? பலனடைந்தார்கள். அந்தக் கட்சி திமுக. அதைப் பட்டியலின மக்களுக்கு எதிரான கட்சி எனச் சொல்வது எவ்வளவு அபத்தம்" என்கிறார்

பாஜக சார்பாக 2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிட உள்ளார். அதே தொகுதியில் ஆ.ராசாவும் போட்டியிடுகிறார்.
இந்தத் தேர்தல் பிரச்சார களத்தில் எல்.முருகனை சாதிரீதியாக டி ஆர் பாலு தாக்கியதாகக் கூறி பிரச்சாரத்தைக் கட்டமைக்கவே பாஜக இந்த விவகாரத்தைத் திட்டமிட்டு திசை திருப்பி உள்ளது. அதற்கான முன்னோட்டம் தான் இது என்று அரசியல் வட்டாரத்தில் சில குரல்கள் ஒலித்து வருகின்றன.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications