ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி
சென்னை: தமிழகத்தில் ரூ.8 ஆயிரம் கூப்பன் மாடலை முன்வைத்து பிரசாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றதாக திமுகவை சேர்ந்த நபர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு தமிழக தேர்தல் அதிகாரி வார்னிங் செய்து மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை வைத்து ஏதாவது வீட்டு உபயோக பொருட்களை புதிதாக அல்லது எக்ஸ்சேஞ்ச் முறையில் பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த கூப்பன் வருமான வரி செலுத்தாதக குடும்பங்களை சேர்ந்த இல்லதரசிகள் அனைவருக்கும் பொருந்தும். இந்த கூப்பனை வைத்து ரூ.8 ஆயிரம் மதிப்பீட்டில் வீட்டில் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோவேவ் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை புதிதாக வாங்கவோ அல்லது ஏற்கனவே பயன்படுத்திவரும் இத்தகைய பொருட்களுக்கு மாற்றாகவோ வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளரால் சர்ச்சை
இந்நிலையில் தான் திமுகவினர் இந்த கூப்பனை வைத்து தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக பாலக்கோடு சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள்எம்பி செந்தில் குமார் ரூ.8 ஆயிரம் கூப்பனை வைத்து பிரசாரம் செய்தது சர்ச்சையை கிளப்பியது. செந்தில் குமார் தேர்தல் நடத்தை விதியை மீறி ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பனை பெண்களிடம் வழங்கி வாக்கு சேகரிக்கிறார் என்று அதிமுக சார்பில் தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆதரவாளர் போட்ட பதிவு
இந்நிலையில் தான் திமுகவை சேர்ந்த சரண் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று முக்கிய பதிவை செய்திருந்தார். அதில், '' உடன்பிறப்புகளுக்கு ஒரு தகவல். பொதுமக்களிடம் ரூ.8,000 கூடப்பன் மாடல் தந்து வாக்கு சேகரிக்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெற்றுள்ளது திமுக. மாற்று கட்சியினர் பிரச்சனை செய்தால் அனுமதி நகலை காட்டவும்'' என பதிவிட்டு உள்ளார். இந்த பதிவுக்கு தமிழக தேர்தல் அதிகாரியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இருந்து வார்னிங் செய்யப்பட்டுள்ளது.
உடன்பிறப்புகளுக்கு ஒரு தகவல்❗
— Saran (@Saran69041939) April 14, 2026
பொதுமக்களிடம் 8,000ரூ கூப்பன் மாடல் தந்து வாக்குச் சேகரிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெற்றுள்ளது திமுக.
மாற்றுக்கட்சியினர் பிரச்சனை செய்தால் அனுமதி நகலைக் காட்டவும்❗#VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்
🏴🚩🌄 pic.twitter.com/KdWWTRldku
தேர்தல் அதிகாரி வார்னிங்
அதில், ''மேற்கூறிய சான்றிதழ் மின்னணு ஊடகங்களில்(Electronic media) உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்காக மட்டுமே வழங்கப்பட்டது என இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இச்சான்றிதழ் அச்சிடப்பட்ட பிரசுரப் பொருட்கள், குறிப்பாக துண்டுப் பிரசுரங்கள் (pamphlets) அல்லது கைப்பிரதிகள் (handbills) ஆகியவற்றிற்கு பொருந்தாது.
மேற்கூறிய சான்றிதழ் மின்னணு ஊடகங்களில்(Electronic media) உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்காக மட்டுமே வழங்கப்பட்டது என இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இச்சான்றிதழ் அச்சிடப்பட்ட பிரசுரப் பொருட்கள், குறிப்பாக துண்டுப் பிரசுரங்கள் (pamphlets) அல்லது கைப்பிரதிகள் (handbills)…
— Chief Electoral Officer Tamil Nadu (@TNelectionsCEO) April 14, 2026
அத்தகைய அச்சிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 இன் பிரிவு 127A மற்றும் நடைமுறையில் உள்ள மாதிரி நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) ஆகியவற்றைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, மேற்கண்ட வகையில் வெளியிடப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானதும் தவறாக வழிநடத்தக் கூடியதுமானதாகும்'' என வார்னிங் செய்துள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ












Click it and Unblock the Notifications