‛ஹே என்னப்பா இது’.. அஇஅதிமுகவில் உள்ள இந்திய என்ற பெயர் பாரத் என மாற்றமா? செல்லூர் ராஜூ கலகல பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் பெயர் பாரத் என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தான் அஇஅதிமுகவின் பெயரில் உள்ள இந்திய என்ற பெயர் பாரத் என மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலகலப்பாக பதிலளித்துள்ளார்.

இந்தியாவின் பெயரை மத்திய அரசு பாரத் என மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதுபற்றி மத்திய அரசு சார்பில் இன்னும் எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அதேவேளையில் இந்த தகவலை மத்திய அரசும் மறுக்கவில்லை.

IS India be removed in the name of AIADMK and will add Bharat? Sellur Raju Says this

இதுமட்டுமின்றி சமீபத்திய சில நடவடிக்கைகள் என்பது இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு தயாராகி வருவதை உறுதி செய்யும் வகையில் உள்ளன. அதாவது ஜி20 மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கிய விருந்துக்காக அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதில் பாரத் ஜனாதிபதி என அச்சிடப்பட்டு இருந்தது.

அதோடு நேற்று தொடங்கி இன்று முடிந்த ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் அருகே இருந்த பெயர் பலகையில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என எழுதப்பட்டு இருந்தது. இதுபோன்ற நடவடிக்கைகள் என்பது விரைவில் இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகம் இருப்பதை காட்டும் வகையில் உள்ளது.

இந்நிலையில் தான் இந்தியாவின் பெயர் மாற்றம் குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் பின்னர் செல்லூர் ராஜூவிடம் பத்திரிகையாளர்கள் சில கேள்விகள் கேட்டனர்.

இந்த வேளையில், ‛‛இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறதே' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு செல்லூர் ராஜூ, ‛‛பிரதமர் இதுபற்றி பேச வேண்டாம் என கூறிவிட்டார். அதுபற்றி நாம் எதற்கு பேசி விமர்சனம் செய்து கொண்டு இருக்க வேண்டும்? நாட்டில் இப்போது எவ்வளவோ பிரச்சனை இருக்கு. அதெல்லாம் விட்டுவிட்டு இதை பற்றி பேசிக்கிட்டு இருக்கீங்களே? பிரதமரே விரும்பலே.. அப்புறம் அதைபற்றி நாம் பேசிகிட்டு என்னா தம்பி'' என மதுரை ஸ்லாக்கிங்கில் கூறினார்.

இதையடுத்து ‛‛உங்களுக்கு இந்தியா விருப்பமா? பாரத் விருப்பமா?'' என கேள்வி கேட்டனர். அதற்கு செல்லூர் ராஜூ, ‛‛எனக்கு இந்தியா தான் விருப்பம். இந்தியா, பாரத் எல்லாம் ஒன்று தான்'' என சிரித்தார். அதன்பிறகு அவரிடம், ‛‛இந்தியாவை பாரத் என மாற்றினால் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதில் உள்ள அனைத்திந்திய என்பதற்கு பதில் அனைத்து பாரதிய என மாற்றுவீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிரித்த செல்லூர் ராஜூ, ‛‛இது புது கான்செப்டா இருக்கே. அது வரும்போது பார்த்து கொள்ளலாம்'' என கலகலப்பாக பதிலளித்தார்.

இதையடுத்து பாதியிலேயே தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, செல்லூர் ராஜூ, ‛‛ஆமா, எப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இக்கிறோம். தயாராக இருக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கூறியுள்ளார். இது ஒன்னும் புதிது இல்லை. கருணாநிதியே இதனை விரும்பி ஏற்றுக்கொண்டு செய்துள்ளார். 1971 தேர்தல் மற்றும் 1980ல் எம்ஜிஆர் ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் கொண்டு வரப்பட்டது. அரசியலில் பழுத்த பழமாக இருந்தவர் கருணாநிதி. அவர் வழியை தான் நாம் பின்பற்ற வேண்டும். திமுக கூட இன்று மாற்றி பேசலாம். ஆனால் நாங்கள் மாற்றி பேச மாட்டோம். தேர்தலுக்கு தயாரா இருக்கிறோம்'' என்றார்.

இதையடுத்து, ‛‛அதிமுக கருணாநிதி வழியை தான் பின்பற்றுகிறதா?'' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு செல்லூர் ராஜூ, ‛‛ ஆஹாம்.. இந்த கருத்துக்கு கருணாநிதி வழியை பின்பற்றுகிறோம்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+