இந்த தொகுதிகள்தான் முடிவை மாற்றும்! அதிமுகவிற்கு கீழே போக கூடாது! அடித்து தூக்கும் அண்ணாமலை! அதிருதே
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக சில இடங்களில் இரண்டாம் இடம் வரும். சில இடங்களில் பாமக ஆதரவுடன் பாஜக இரண்டாம் இடம் வரும். பாமக போட்டியிடும் பல தொகுதிகளில் இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும். தர்மபுரியில் கண்டிப்பாக பாமக இரண்டாம் இடம் பிடிக்கும், என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் கட்சிகள் பெரும்பாலும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். தேர்தல் பணிகள், பிரச்சாரங்கள் தொடங்கிவிட்டன. திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி - பாஜக கூட்டணி - நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டி தேர்தலில் நிலவுகிறது. இந்த நிலையில்தான் சில இடங்களில் அதிமுக இரண்டாம் இடத்திற்கு வரும். கண்டிப்பாக அதில் சந்தேகம் இல்லை. அதிமுக தேமுதிக விஜயகாந்த் இமேஜை பயன்படுத்தி இரண்டாம் இடம் வர பார்ப்பார்கள் என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார் .

ஒன்இந்தியாவிற்கு ரவீந்திரன் துரைசாமி அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் கட்சியின் பலம், பிரதமர் வேட்பாளர் இதை எல்லாம் வைத்துதான் இரண்டாம் இடம் பிடிக்க போகும் கட்சி எது என்று தெரியும். அந்த அடிப்படையில் அதிமுக சில இடங்களில் இரண்டாம் இடம் வரும். சில இடங்களில் பாமக ஆதரவுடன் பாஜக இரண்டாம் இடம் வரும். பாமக போட்டியிடும் பல தொகுதிகளில் இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும். தர்மபுரியில் கண்டிப்பாக பாமக இரண்டாம் இடம் பிடிக்கும்.
சில இடங்களில் அதிமுக இரண்டாம் இடத்திற்கு வரும். கண்டிப்பாக அதில் சந்தேகம் இல்லை. அதிமுக தேமுதிக விஜயகாந்த் இமேஜை பயன்படுத்தி இரண்டாம் இடம் வர பார்ப்பார்கள். கொங்கு பகுதிகளில் பாஜக பலமாக உள்ளது. அண்ணாமலை, மோடி பிரதமர் என்பதால் கொங்கில் பாஜக வளரும். கவுண்டர், மோடி ஆதரவு காரணமாக அண்ணாமலைக்கு சாதகமாக இருக்கும். அண்ணாமலை வெற்றிபெற முயற்சி செய்வார்.
பாஜக அதிமுகவிற்கு கீழே செல்ல கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். இதனால் கொங்கு மண்டலம் சுவாரசியமாக இருக்க போகிறது. சட்டசபையை மையமாக வைத்து இந்த தேர்தல் நடக்கவில்லை. நாடாளுமன்றத்தை மையமாக வைத்தே இந்த தேர்தல் நடக்கும். கோவை குண்டுவெடிப்பு, நாடாளுமன்ற பிரச்சனைகள், பிரதமர் வேட்பாளர் போன்ற விஷயங்கள் இந்த தேர்தலில் பெரிய அளவில் கவனம் பெறும். இது எடப்பாடி அதிமுக, ஜெயலலிதா அதிமுக இல்லை.
எடப்பாடி அதிமுக சட்டசபை தேர்தல் போல நாடாளுமன்ற தேர்தலில் பலமாக இருக்காது. அண்ணாமலை கொங்கு மண்டலத்தில் பலமாக இருக்கிறார். கோவையில் அதிமுகவை விட அண்ணாமலை நன்றாக செயல்படுவார். தென் சென்னையில் நன்றாக போட்டி இருக்கும். அங்கே ஜெயவர்த்தன - தமிழச்சி - தமிழிசை இடையே போட்டி இருக்கும். ஜெயங்கொண்டத்தில் இதேபோல் கடுமையாக போட்டி இருக்கும்.
அதிமுக பலகீனமாக இருக்கும் போது அந்த வாக்குகள் பாஜகவிற்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன. அதுதான் இந்த முறை நடக்க போகிறது. நெல்லையில் இதேபோல் கடுமையாக போட்டி இருக்கும். நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கும் அதிமுகவினருக்கும் நெருக்கம் உண்டு. இதனால் அங்கே போட்டி வித்தியாசமாக இருக்கும், என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications