Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவுக்கு தாவுகிறாராம் நயினார் நாகேந்திரன்.. திருச்சி சூர்யா கொடுத்த ஷாக்! பாஜக ரகசியங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு விரைவில் ஒரு புதியவரை கட்சி மேலிடம் நியமிக்க இருப்பதாக திருச்சி சூர்யா தெரிவித்திருக்கிறார்.

பாஜகவிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து அக்கட்சியின் உள்ளே என்ன நடக்கிறது? அண்ணாமலை எப்படி சொந்தக் கட்சியினரை வளரவிடாமல் தடுக்கிறார் என்பது போன்ற தகவல்களைப் பகிரங்கமாகப் பேசி வருகிறார் திருச்சி சூர்யா. தினமும் அவரது எக்ஸ் பக்கம் பற்றி எரிந்துகொண்டுள்ளது. இந்நிலையில் திருச்சி சூர்யா அளித்துள்ள பேட்டி, கொங்கு மண்டலத்தில் தான் செல்வாக்கு உள்ளவராக இருக்கவேண்டும் என்பதற்காகவே மக்களவைத் தேர்தல் முன்பு செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக அண்ணாமலை செயல்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

annamalai tn bjp

ஆனால், அதேநேரத்தில் செந்தில் பாலாஜி தம்பியுடன் அண்ணாமலை நெருக்கமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். திருச்சி சூர்யா ஒரு யூடியூப் தளத்திற்காகப் பேசுகையில், "எனக்கு அவர் மீது (அண்ணாமலை) என்ன கோபம் என்னவென்றால், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு பிரச்சினை வந்தது. அப்போது திமுக அவரைக் கைவிட்டதா? செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரிய பிரச்சினை வந்தது. அவரை திமுக கைவிட்டதா? ஆனால், நான் அவரையே நம்பி இருந்தேன். அவர் என்னைக் கைவிட்டுவிட்டார்.

என்னைப் பற்றி அவர் என்ன சொல்கிறார்? நான் உதயநிதி ஸ்டாலினால் பாஜகவுக்கு அனுப்பப்பட்ட ஆளாம். இங்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து வந்து அவர்களுக்குத் தகவல் கொடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்ட ஆளாம். என்னை அவர் ஸ்லீப்பர்செல் என்கிறார். செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் அமைச்சரவையை மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக திமுக இதுவரை 3 முறை தேதியை மாற்றி அமைத்துள்ளது. அவர் கட்சிக்கு விசுவாசமாக இருந்தார். அந்தக் கட்சி அவரைக் காப்பாற்றுகிறது.

பாஜகவில் அப்படியா? நான் அவருக்கு விசுவாசமாக இருந்தேன். அவர் என்னைக் காப்பாற்றினாரா? செந்தில் பாலாஜி லேசான நபர் இல்லை. அவர் திமுகவினர் மீது பாஜக குற்றச்சாட்டுகளை வைத்தபோது பலரும் பயந்து போய் வாய் திறக்கவே இல்லை. ஆனால், நேருக்கு நேராக அண்ணாமலையை எதிர்த்தவர் செந்தில் பாலாஜி மட்டும்தான். எனவே அவர் இப்போது சிறையில் இருப்பதால் அடக்கி வாசிக்கிறார். அவர் வெளியே வந்தால் பல சம்பவங்கள் இருக்கு" என்று பேசி உள்ள சூர்யா பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் செய்யப்படுமா என்பது பற்றியும் பேசியுள்ளார்.

annamalai tn bjp

"பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலத் தலைவர் பதவியை மாற்றுவார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் பழைய தலைமையே தொடரும் என்று அறிவிப்பார்கள். சில மாநிலங்களில் யார் எல்லாம் மீண்டும் பதவியில் தொடரப் போகிறார்கள் ஒரு பட்டியலைக் கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மாநிலத் தலைவர் பெயர் இல்லை. மேலிடத் தலைமைப் பொறுப்பாளராக அரவிந்த் மேனனை போடக் கூடாது என மாநிலத் தலைவர் தலைகீழாக நின்று பார்த்தார். அதை மீறி அவரையே பொறுப்பாளராகக் கட்சி நியமித்துள்ளது. அதில் அப்செட் ஆகிவிட்டார்.

அதேபோல நயினார் நாகேந்திரன் தேர்தலில் வெற்றி பெற்று இருப்பார். அவர் வெற்றி பெற்றிருந்தால், அவரைக் கட்சித் தலைமை மத்திய அமைச்சராகி இருக்கும். அவரை வரவிடாமல் செய்தவர் இவர்தான். இவரே நயினாருக்கு எதிராகச் செய்திகளை வெளிவர வைத்தார். 400 கோடி பணம் அவருடையதுதான் என இவர்தான் வதந்தியைக் கிளப்பிவிட்டார்.

அதேபோல கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக இருந்து அங்கே சிடி ரவிக்கு எதிராக வேலைகள் செய்தார். அவர் கர்நாடக தேர்தலில் தோற்றவுடன் அவரை மேலிடத்தில் சொல்லி மாற்றிவிட்டார். நல்லவேளையாக இப்போது அரவிந்த மேனனை கட்சி பொறுப்பாளராக நியமித்துவிட்டது. அதனால் இப்போது 'அவருக்கு' பிரச்சினை வந்துவிட்டது.

அரவிந்த் மேனன் பாஜக மூத்த தலைவர்கள் மீதுதான் அதிக மரியாதை வைத்துள்ளார். குறிப்பாக பொன் ராதாகிருஷ்ணனுக்கு அவரிடம் செல்வாக்கு அதிகமாக உள்ளது. இப்போது இருப்பவர் திடீரென்று கட்சிக்குள் வந்தவர். அதனால் மதிப்பதில்லை. ஆகவே இவருக்கு மேனனை பிடிக்கவில்லை. இப்போது மாநிலத் தலைமையை மாற்ற வேண்டும் என்பதில் தேசிய தலைமை உறுதியாக உள்ளது. பொன்னாரை மீண்டும் பதவிக்குக் கொண்டுவரலாம் என மேனன் நினைக்கிறார். அமித்ஷா மூலம் தமிழிசை லாபி செய்கிறார்.

இந்த இருவரும் பழைய தலைவர்கள். புதிய ஆட்களுக்குப் பதவி தரவேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு கண்முன்னால் உள்ள ஒரே வாய்ப்பு நயினார் நாகேந்திரன் தான். ஆனால், நயினார் தனக்குப் பதவியே வேண்டாம் என்பதில் உறுதியாக நிற்கிறார். அமித்ஷா, நட்டா வரை பேசியும் அவர் மசியவில்லை. ஏனென்றால், அவர் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் கையை மீறி செலவு செய்துவிட்டார். அவரது சொத்துகளைக் கூட அடமானம் வைத்து செலவு செய்துள்ளார்.

மேலும் அவரது பணம் ரெய்டில் மாட்டிக் கொண்டுவிட்டது. அவர் தோற்றுவிடுவோம் என இறுதிவரை நம்பவே இல்லை. கடைசியில் சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர் செய்த சதியால் தோல்வி அடைந்துவிட்டார். இப்போது அவரிடம் பணம் இல்லை.

அடுத்து 2026இல் அவர் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்றால் பணம் தேவை. அதற்கு பாஜக மாநிலத் தலைவராகிவிட்டால் அதற்குச் செலவு செய்யப் பணம் வேண்டும். ஆகவே அவர் உஷாராக மறுத்துவருகிறார். நயினார் தனக்கு வயதாகிவிட்டதால் மகனுக்கு பாஜகவில் பதவி கேட்கிறார். ஆனால், வாரிசு அரசியலைக் காரணம் காட்டி மாநிலத் தலைவர் பதவி கொடுக்க மறுக்கிறார். இந்தக் குழப்பத்தில்தான் அவர் கட்சி மாறலாம் என்ற முடிவை எடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி ஐவர் குழுவில் ஒருவராக இடம் தருவதாகப் பல ஆண்டுகளாக நயினாரை அழைத்து வருகிறார். ஆனால், இவர் போகவில்லை. நாளை சசிகலா அதிமுகவுக்குள் வந்தால் நயினாருக்குப் பிரச்சினை. இந்நிலையில்தான் திமுகவுக்குப் போக இவர் திட்டமிட்டு வருகிறார். அங்கே மகனுக்கும் பதவி வாங்கிவிடலாம், பிரச்சினை இருக்காது என நினைத்துள்ளார்" என்று சூர்யா பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+