ராமநாதபுரத்தில் போட்டியிடும் திட்டத்தை கைவிடுகிறார் மோடி? ஏன்.. என்ன நடந்தது?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிடும் முடிவை பிரதமர் மோடி மற்றும் பாஜக கைவிடும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி, குஜராத்தில் உள்ள வதோதரா தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் பிரதமர் மோடி வெற்றிபெற்றார்.

அதன்பின் வதோதரா தொகுதியில் பிரதமர் மோடி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் தென் இந்தியாவில் கவனம் செலுத்த பாஜக முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆலோசனை செய்துள்ளார்.
ஆலோசனை: தென் மாநில பாஜக தலைவர்கள், பொதுச்செயலாளர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஜே.பி நட்டா இந்த திட்டத்தை தெரிவித்து அது தொடர்பாக நேற்று ஆலோசனை கேட்டு இருக்கிறார். . இதற்கு பெரும்பாலான தலைவர்கள், உடனடியாக ஆதரவு வழங்கி உள்ளனர். மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்று தீவிரமாக கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் மோடி எங்கே ராமநாதபுரத்தில் போட்டியிடுவாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.
இதையடுத்தே தற்போது பாஜக தலைவர் அண்ணாமலையும் ராமநாதபுரத்தில் இருந்து தன்னுடைய பேரணியை தொடங்கி உள்ளார். தமிழ்நாட்டில் அதிக எம்பிக்களை வெல்ல பாஜக முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் எப்படியாவது பாஜகவை வளர்க்க வேண்டும் என்று அந்த கட்சி முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
லோக்சபா தேர்தலில் இந்த முறை வடக்கில் பாஜகவிற்கு சரிவு ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேபோல் காங்கிரஸ் பெரிய எழுச்சி அடையும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அப்படி இருக்க வடக்கில் இழக்கும் இடங்களை தெற்கில் தட்டி தூக்கும் விதமாக மோடி தென் மாநிலத்தில்.. அதாவது தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மனமாற்றம்: ஆனால் தற்போது ராமநாதபுரத்தில் போட்டியிடும் முடிவை பிரதமர் மோடி மற்றும் பாஜக கைவிடும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி உளவுத்துறை ரிப்போர்ட்படி சாதகமான சூழ்நிலை இல்லை. கொங்கில் கூட போட்டியிடலாம். ஆனால் ராமநாதபுரத்தில் போட்டியிட முடியாது.
அங்கே பாஜகவிற்கு பூத் கமிட்டி கூட இல்லை. அப்படி இருக்க வெற்றிபெறுவது மிக கடினம். மோடி போட்டியிட்டு தோல்வி அடைந்தால் அது பாஜகவிற்கு பெரிய அவமானமாக இருக்கும். அதனால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று டெல்லி நினைக்கிறதாம். இதனால்தான் ராமநாதபுரத்தில் போட்டியிடும் முடிவை பிரதமர் மோடி மற்றும் பாஜக கைவிடும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின் பிளான்: ஒருவேளை அவர் போட்டியிடும் பட்சத்தில் மோடியை எதிர்க்க முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறாராம். அதன்படி மிக வலுவான வேட்பாளரை ராமநாதபுரத்தில் இறக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அதோடு அமைச்சர்களை களமிறக்கி மோடியை தோற்கடிக்கவும் வலுவான திட்டங்களை வகுக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.
முக்கியமாக அங்கே மீனவர்கள் அதிகம் உள்ளனர். மோடி ஆட்சியில் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாகவும் பிரச்சாரம் செய்ய உள்ளாராம். இதற்காக அடுத்த மாதம் மீனவ சங்கங்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். மோடி களமிறங்கினால் இறங்கட்டும்.. மோதி பார்த்துவிடலாம் என்ற திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறாராம்.
மோடி தமிழ்நாடு: 2019 தேர்தலிலேயே தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் மோடியை களமிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அதேபோல் ராகுல் காந்தியும் தமிழ்நாட்டில் போட்டியிடுவதாக இருந்தது. கடைசியில் வயநாட்டில் அவர் போட்டியிட்டார். அந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றிபெற.. ராகுல் காந்தி போட்டியிட்டதும் காரணமாக அமைந்தது. அதேபோல்தான் பாஜகவும் மோடியை தமிழ்நாட்டில் களமிறக்கி தமிழ்நாட்டில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராகுல் கேராளாவில் காங்கிரஸ் வெற்றிக்கு காரணமாக இருந்தது போல தமிழ்நாட்டில் மோடி பாஜக வெற்றிக்கு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கலாம். பாஜக தமிழ்நாட்டில் இத்தனை நாட்கள் பேசு பொருட்களாக இல்லை. இப்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது. இந்த நிலையில்தான் மோடி வந்தால் பாஜகவின் நிலை மாறும் என்று அந்த கட்சி நினைக்கிறதாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications