சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இலவசம் முக்கியம்".. வாவ்.. "தமிழ்நாடு மாடலை" பின்பற்றும் ஸ்பெயின்! மக்களுக்கு சொன்ன ஸ்வீட் நியூஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட முக்கிய ஒரு திட்டத்தை போலவே ஸ்பெயின் நாட்டிலும் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளை வழங்க கூடாது. இலவசங்களை வழங்கும் கட்சிகளின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜகவை வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம்,இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது. அப்படி வழங்கும் கட்சிகளை தடை செய்வது பற்றி ஆலோசிக்க முடியாது, என்று கூறியது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கில் மத்திய அரசு வைத்த வாதத்தில், இலவசங்களை நாங்கள் முற்றிலுமாக எதிர்க்கவில்லை. ஆனால் அனைத்து திட்டங்களையும் இலவசமாக வழங்க கூடாது. இது மக்களை பாதிக்கும் என்று தெரிவித்தது.

எதை பற்றியாவது புகார் கூற நினைத்தேன்.. ஆனால் எல்லாம் பிரம்மாதம்! முரசொலியில் ஸ்பெயின் செஸ் வீரர்! எதை பற்றியாவது புகார் கூற நினைத்தேன்.. ஆனால் எல்லாம் பிரம்மாதம்! முரசொலியில் ஸ்பெயின் செஸ் வீரர்!

வழக்கு

வழக்கு

இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இலவசங்களுக்கு எதிரானோர் வைக்கும் வாதங்களில், இலவசங்கள் காரணமாக மக்கள் சோம்பேறி ஆக்கப்படுவார்கள். மக்களுக்கு இந்த பணத்தை வேறு நலத்திட்டங்களில் பயன்படுத்தலாம்,. மக்களுக்கு இந்த பணத்தை நேரடியாக இலவசம் என்று கொடுக்கலாம் அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதில் பயன்படுத்தலாம் என்று வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் திமுக உள்ளிட்ட இலவசங்களை ஆதரிக்கும் கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

திமுக

திமுக

திமுக இந்த வழக்கில் ஒரு மனுதாரராக சேர்ந்து உள்ளது. இதில் திமுக வைக்கும் வாதங்களில் இலவசங்கள் என்பது அடித்தட்டு மக்களுக்கு பூஸ்ட் போல செயல்படும். மாணவிகளுக்கு இலவசங்கள் கொடுத்ததால்தான் அவர்கள் பள்ளிகளுக்கு வர முடிந்தது. எது தேவையான இலவசம், எது தேவையில்லாத இலவசம் என்று யார் முடிவு செய்வது. மக்களுக்கு எது அத்தியாவசியம் என்பதை மக்களே தானே முடிவு செய்ய முடியும். இலவசங்கள் காரணமாக மக்கள் வறுமை கோட்டில் இருந்து வெளியே வர முடியும். இது நிருபிக்கப்பட்ட உண்மை திமுக வாதத்தில் குறிப்பிட்டு உள்ளது.

ஸ்பெயின்

ஸ்பெயின்

இந்த நிலையில்தான் தற்போது ஸ்பெயினில் கொண்டு வரப்பட்ட திட்டம் ஒன்று இந்தியாவில் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஸ்பெயினில் தற்போது உள்ளூர், லோக்கல் ரயில் பயணம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு லோக்கல் பேருந்துகளில் பயணம் இலவசமாக் உள்ளது. இதே போன்ற மாடல் தற்போது ஸ்பெயினில் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த திட்டம் பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் பொருந்தும்.

விலைவாசி

விலைவாசி

நாட்டில் விலைவாசி அதிகம் உயர்ந்து உள்ளது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதை சரி செய்யும் விதமாக உள்ளூர் ரயில் போக்குவரத்துக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இலவச பாஸ் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் இறுதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும். சமீபத்தில் அங்கு மின் கட்டண வரிகள் உயர்த்தப்பட்டன. இதில் அரசுக்கு வரும் கூடுதல் வருவாயில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டம் காரணமாக 75 மில்லியன் பேர் இலவச பயணங்களை மேற்கொள்வார்கள் என்று அரசு கூறியுள்ளது.

 வறுமை

வறுமை

மக்கள் வறுமையில் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவவே இந்த திட்டம் என்று ஸ்பெயின் அரசு கூறியுள்ளது. இதைத்தான் இந்தியாவில் இலவசங்களைஆதரிக்கும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். பாருங்கள் ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாட்டில் கூட இலவச திட்டங்கள் உள்ளன. மக்களை வறுமையில் இருந்து மீட்க அவர்கள் இலவசங்களை கொடுக்கிறார்கள். இந்தியா போன்ற நடுத்தர நாட்டில் கொடுப்பதில் என்ன தவறு என்று கேட்டுள்ளனர். இன்னும் பலர் தமிழ்நாட்டின் இலவசங்கள் மாடலை ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாடுகள் பின்பற்றுவதாக கூறியுள்ளனர் .

English summary
Is Spain following Tamil Nadu model: Free ticket for passengers in local trains .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X