இது லிஸ்டுலேயே இல்லையே.. புது ரூட் எடுத்த விஜய்.. சில்லு சில்லாக நொறுங்குது! அப்போ அதிமுக, திமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக - திமுக அல்லாத மூன்றாவது அணியை அமைக்க விஜய் ஆலோசனை செய்து வருகிறாராம். இதற்காக திமுக கூட்டணியை உடைக்கவும், தனி கூட்டணி அமைக்கவும் கூட விஜய் ஆலோசனைகளை செய்து வருகிறாராம்.

தேசிய அளவில் பாஜக - காங்கிரஸ் என்ற இரண்டு தேசிய கட்சிகள் மட்டும் கோலோச்சிய காலம் அது. மற்ற சில தேசிய கட்சிகள் இருந்தாலும் அவர்கள் இரண்டு - மூன்று மாநிலங்களில் மட்டும் அவை கோலோச்சின.

AIADMK Tamilaga vetri kazhagam Seeman Edappadi Palaniswami

இதில் பாஜக வலதுசாரி. காங்கிரஸ் மைய - இடதுசாரி கொள்கையை கொண்டு இருந்தது. இரண்டு பேருமே வேண்டாம் என்று கூறுபவர்களுக்கு மாற்று அரசியல் இல்லாத நிலைமை இருந்தது. என்றால் மற்ற கட்சிகள் எல்லாம் ஒன்று பாஜகவுடன் கூட்டணி இல்லையென்றால் காங்கிரஸ் உடன் கூட்டணி இருந்தது.

இன்னொரு பக்கம் தமிழ்நாட்டிலும் இதே நிலைதான் ஒன்று அதிமுக - இல்லை திமுக. இல்லையென்றால் நாம் தமிழர். இது மூன்றுமே இன அடிப்படையில் உரிமையை பேசும் கட்சிகள்தான்.

தேசிய அரசியல் மாறியது: இப்படிப்பட்ட நிலையில்தான் தேசிய அரசியல் மாறும் வகையில் ஆம் ஆத்மி தோன்றியது. அந்த கட்சிக்கு தனிப்பட்ட கொள்கை என்று கிடையாது. மாறாக ஒவ்வொரு விஷயங்களுக்கு ஏற்றபடி நிலைப்பாடு எடுத்தது. சில விஷயங்களில் வலதுசாரி போல செயல்படும்.. சில விஷயங்களில் இடதுசாரி போல செயல்படும்.

சில சமயங்களில் மைய கொள்கை கொண்டு இருக்கும். அக்னி பாத்தை தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கும் ஆம் ஆத்மி நீட்டை ஆதரித்தது. இப்படி காங்கிரஸ் - பாஜக இரண்டிற்கும் இடையில் இருந்து கொண்டு அதிகபட்சம் welfare அரசியலை மட்டும் ஆம் ஆத்மி முன்னெடுத்தது. காங்கிரஸ் - பாஜக இரண்டிற்கும் வாக்களித்து அலுத்து போனவர்களுக்கு இந்த மாற்று அரசியல் பெரிய நல் வாய்ப்பாக இருந்தது.

அதே ஸ்டைல்: அதே ஸ்டைலை தமிழ்நாட்டில் விஜய் கொண்டு வரப்போகிறாராம்.. மாற்று அரசியலை.. தமிழ்நாட்டில் அதிமுக - திமுக அல்லாத மூன்றாவது அணியை அமைக்க விஜய் ஆலோசனை செய்து வருகிறாராம். இதற்காக திமுக கூட்டணியை உடைக்கவும், தனி கூட்டணி அமைக்கவும் கூட விஜய் ஆலோசனைகளை செய்து வருகிறார் என்று விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திமுக, அதிமுக என்று யாருடனும் கூட்டணி அமைக்கும் திட்டம் அவருக்கு இல்லை, மூன்றாவது அணியை அமைத்துக்கொள்ளலாம் என்ற முடிவில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் அமைக்க போகும் மூன்றாவது அணி பற்றியும், அதிமுகவை அவர் ஏன் வேண்டாம் என்று நினைக்கிறார் என்பது பற்றியும் தகவல்கள் வர தொடங்கி உள்ளன. விஜய் தொடங்குவது தனி கட்சி. முதல் தேர்தலிலேயே அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் விஜய் மீது முத்திரை குத்தப்படும்.

விஜய்க்கு நெருக்கமான சிலர் அவரிடம் இதை பற்றி பேசி உள்ளனராம். தனியாக நில்லுங்கள் இல்லை தனி கூட்டணி அமையுங்கள் என்று. அதிமுகவுடன் ஏற்கனவே சர்க்கார் சமயத்தில் இருந்தே , அதற்கு முன் தலைவா சமயத்திலும் விஜய்க்கு பிரச்சனை உள்ளது. அதனால் விஜய் அவர்களுடன் செல்ல வாய்ப்பு குறைவாம்.

நடிகர் விஜய் ரகசியமாக கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடங்கிவிட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை உடைத்து தங்கள் பக்கம் கொண்டு வருவதே அவரின் திட்டம் என்கிறார்கள். முக்கியமாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுகளில் ஒன்றை குறிவைக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்களை இழுக்க அதிமுக முயன்றது. ஆனால் அதிமுக எப்போது வேண்டுமானாலும் பாஜகவுடன் சேரலாம். அதனால் பாஜக மீதான அதிருப்தி காரணமாக அதிமுகவையும் இந்த கட்சிகள் புறக்கணித்தன. ஆனால் விஜய்க்கு அப்படி ஒரு பிம்பம் இல்லை. அவர் பாஜகவுடன் நெருக்கமாக இல்லை. பாஜக பக்கம் செல்ல வாய்ப்பு இல்லை.

இதனால் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுகளில் ஒன்றை குறிவைக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது. அவர்களிடம் பேசி வருகிறார். ஆனால் இன்னும் அவர்கள் ஓகே சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டில் கூட்டணி காட்சிகள் மாறலாம். இவர்கள் இல்லையென்றால் நாம் தமிழரை வைத்து தனி அணியை உருவாக்கும் திட்டமும் விஜய்க்கு உள்ளதாம். ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி எழும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+