"துரோகம்".. ஸ்டாலினுக்கு வந்த கோபம்.. விதித்த "கெடு".. கண்டுகொள்ளாத "சாந்தி".. கூட்டணிக்குள் விரிசல்?

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் அதிகமாகி கொண்டே போகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணிக்குள் விரைவில் புகைச்சல் அதிகமாகிவிடும் என்று தெரிகிறது.. முதலில் விசிக, இப்போது காங்கிரஸ் என அதிருப்திகள் கூடி வருகின்றன.

திமுகவின் மேல்மட்ட அளவில் எந்தவிதமான பெரிய பிரச்சனைகள், புகார்கள் இதுவரை இல்லாமல் சென்று கொண்டிருந்த நிலையில்தான் ராஜ கண்ணப்பன் விவகாரம் தலைதூக்கிவிட்டது.. ஆனால், லோக்கல் பாலிட்டிக்ஸ் என்பது ஆரம்பம் முதலே பெருகி வருவதாக தெரிகிறது..

குறிப்பாக, மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில், அக்கட்சி அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கினர்..

 ராஜினாமா

ராஜினாமா

இவர்கள் பல இடங்களில் வெற்றியும் பெற்றனர். இதனால் கூட்டணி கட்சிகள் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானது.. இதையடுத்து, இவர்களை ராஜினாமா செய்யும்படி கட்சி தலைமை உத்தரவிட்டது.. சிலர் ராஜினாமா செய்தனர்.. சிலர் மறுத்து விட்டனர்... விரைவில் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கெடுவும் விதிக்கப்பட்டது. ஆனால், பதவியில் உட்கார்ந்தவர்கள், ராஜினாமா செய்யாமல், கட்சி தலைமை மீதும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது..

போராட்டம்

போராட்டம்

இதனால் கூட்டணிகள் மேலும் அப்செட் ஆகி உள்ளதாம்.. இப்போது விஷயம் என்னவென்றால், கூட்டணியில் இருந்தாலும் கூட்டணி தர்மத்தை மீறி விட்டதால் திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. இதற்கு ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தேர்தல்தான் இப்போதுவரை அடிப்படை காரணமாக இருந்துள்ளது.

 பேரூராட்சி

பேரூராட்சி

இந்த பேரூராட்சியை பொறுத்தவரை மொத்தம் 15 வார்டுகள் இருக்கின்றன... இவற்றில் திமுக 6 வார்டிலும், சுயேச்சை 4 வார்டிலும், அதிமுக 3 வார்டிலும், பாமக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. திமுக தலைமை கழகம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியை கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு ஒதுக்கியது.. எனவே காங்கிரசும் செல்வி மேரி என்பவரை இங்கு நிறுத்த முயன்றது.. மேரி சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்.

சாந்தி

சாந்தி

ஆனால், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்று தெரிந்தும், திடுதிப்பென்று சாந்தி என்ற திமுக பிரமுகர் போட்டியிட்டார்.. கடந்த 2ம் தேதி அன்று நடந்த தலைவர் தேர்தலில் சாந்தி, திமுக தலைமையின் உத்தரவையும்தான் போட்டியிட்டார்.. இறுதியில் வெற்றியும் பெற்றார். முதல்வர் ஸ்டாலின், ராஜினாமா செய்யும்படி சொல்லி, எத்தனையோ பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், ஆனால், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் வெற்றிபெற்ற சாந்தி மட்டும் இன்னமும் ராஜினாமா செய்யவே இல்லை..

திருமாவளவன்

திருமாவளவன்

இதுதான் காங்கிரஸ் சிறுபான்மையினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.. அதனால் தான் திமுக, சிறுபான்மையினருக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக சிறுபான்மையினர் கோபத்தில் உள்ளனர். இதனால் காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவின் சார்பில் தமிழகம் முழுவதும் சிறுபான்மையினரை ஒன்று திரட்டி திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.இதுதான் காங்கிரஸ் சிறுபான்மையினர் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.. அதனால் தான் திமுக, சிறுபான்மையினருக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக சிறுபான்மையினர் கோபத்தில் உள்ளனர். இதனால் காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவின் சார்பில் தமிழகம் முழுவதும் சிறுபான்மையினரை ஒன்று திரட்டி திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 விசிக - காங்கிரஸ்

விசிக - காங்கிரஸ்

ஏற்கனவே இதே அதிருப்தி தான் விசிகவிலும் ஏற்பட்டது.. திருமாவளவன் வெளிப்படையாகவே செய்தியாளர்களிடம் இதை பற்றி சொல்லி வருத்தப்பட்டார்.. அதற்கு பிறகுதான் ஸ்டாலின், அனைவரையும் ராஜினாமா செய்ய சொல்லி உத்தரவிட்டார்.. ஆனால், கெடு விதித்தும், ராஜினாமா செய்யாமல் உள்ளவர்களை திமுக மேலிடம் கண்டுகொள்ளுமா? கூட்டணிக்குள் விரிசல் வராமல் பார்த்துக் கொள்ளுமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+