"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்கு விஜய்யும், நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவும் வேண்டும் என நினைக்கிறார்கள். ஒருவேளை தவெக கூட்டணியில் இணைக்கும் அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்பட்டால், அன்றே திமுக நிரந்தரமாக இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறிவிடும். ஏனெனில், திமுகவும் தவெகவும் கிட்டத்தட்ட அண்ணா திமுக - திமுக போல நேர் எதிரிகளாக மாறிவிட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் மணி, பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்

மூத்த பத்திரிகையாளர் மணி அந்த பேட்டியில், "2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திமுக இல்லாத முதல் இந்தியா கூட்டணிக் கூட்டம் நடந்துள்ளது. இந்தியா கூட்டணியில் திமுக தொடர்ந்து நீடிக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. அவர்கள் கண்டிப்பாக ஒரு கட்டத்தில் இக்கூட்டணியை விட்டு வெளியேறி விடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. காரணம், தவெகவை இந்த கூட்டணிக்குள் கொண்டுவரச் சில முயற்சிகள் நடக்கின்றன.

DMK MK Stalin INDIA Alliance Congress Strategy Tamil Nadu Politics

இந்தியா கூட்டணியை தவிர்த்த திமுக

அதுமட்டுமன்றி, இப்போதைய சூழலில் திமுகவிற்கு எதிராக இந்தியா கூட்டணியின் பெரும்பாலான கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் மிகவும் வலுவாக எழுந்து நின்று கொண்டிருக்கிறது.

தங்களுக்கு உரிய மரியாதை இல்லாத ஒரு இடத்தில் திமுகவால் தொடர்ந்து நீடிக்க முடியாது. இன்றைய கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளாதது என்பது தேசிய அரசியலிலும் தமிழக அரசியலிலும் நிகழப்போகிற சில முக்கியமான மாற்றங்களுக்கான ஒரு முன்னறிவிப்பு நிகழ்வாகவே பார்க்கிறேன். காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கைகோர்த்துச் சென்று, தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு இது எப்படிச் சாத்தியமாகும் என்றும் புரியவில்லை.

ஆம் ஆத்மி - காங்கிரஸ்

திமுக இக்கூட்டத்தை ஒருமுறை புறக்கணித்திருக்கலாம், ஆனால் தொடர்ந்து புறக்கணிக்க முடியாது. அவர்கள் ஒரு கட்டத்தில் இறுதி முடிவெடுத்தாக வேண்டும். காங்கிரஸ் இருக்கக்கூடிய கூட்டணியில் திமுகவால் இனி தொடர முடியாது என்பதுதான் உண்மை. ஆகவே, ஆம ஆத்மி கட்சியைப் போல திமுகவும் இந்தியா கூட்டணியை விட்டு நிரந்தரமாக வெளியேறக்கூடிய காலச்சூழல் வெகுவிரைவாகக் கனிந்து வந்து கொண்டிருக்கிறது.

மற்ற மாநில முதல்வர்களும் சரி, எதிர்கட்சித் தலைவர்களும் சரி, ஸ்டாலின் இக்கூட்டணியில் இருந்து வெளியேறுவதை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள். ஏனெனில், அவர் இக்கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர். இந்த கூட்டணியின் மிக வலுவான ஒரு தூணாக ஸ்டாலின் இருந்தார். எனவே, ஸ்டாலின் கலந்து கொள்ளாத முதல் இந்தியா கூட்டணிக் கூட்டம் என்பது அக்கூட்டணிக்கு ஒரு பலவீனமாகத்தான் பார்க்கப்படும்.

அதை உணர்ந்துதான், திமுக இன்னும் விலகவில்லை என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நப்பாசையில் பேசி வருகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி வெறும் ஒரே இரவில் ஒட்டுமொத்தமாகத் தடம் மாறி, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், 2029 நாடாளுமன்றத் தேர்தலிலும் தவெகவுடன் தான் கூட்டணி என்று அறிவித்துவிட்டது.

என்டிஏ கூட்டணியில் திமுக?

இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறினால் திமுகவிற்கு இருக்கும் ஒரே வழி என்டிஏ கூட்டணி மட்டும்தான். அவர்கள் என்டிஏ பக்கம் போக மாட்டார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது.. அதேசமயம் போவார்கள் என்றும் சொல்ல முடியாது.

என்டிஏ பக்கம் திமுக போகாது என்று யாரும் உத்தரவாதம் அளிக்க வேண்டாம் என்பதுதான் எனது வேண்டுகோள். அரசியலில் நடுநிலை என்பது மிகவும் சிக்கலானது. திமுகவிடம் தற்போது 32 எம்பிக்கள் இருக்கிறார்கள். எனவே, திமுக ஒருவேளை என்டிஏ பக்கம் சென்றால் பிரதமர் மோடி வாரி அணைத்துக் கொள்வார். குறைந்தது 3 பேருக்கு கேபினெட் அமைச்சரவையில் இடம் கிடைக்கும்.

ஸ்டாலினை அடுத்த கட்டமாக ரீப்ளேஸ் செய்யும் அளவுக்கு விஜய்க்கு இப்போதைக்கு அந்த ஆளுமையோ தகுதியோ கண்டிப்பா கிடையாது. இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் பொறுத்து வேண்டுமானால் அது வரலாம். காங்கிரஸ் கட்சிக்கு விஜய்யும் வேண்டும், திமுகவும் வேண்டும் என்ற பேராசை இருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு விஜய்யும், நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவும் வேண்டும் என நினைக்கிறார்கள். ஒருவேளை தவெக கூட்டணியில் இணைக்கும் அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்பட்டால், அன்றே திமுக நிரந்தரமாக இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறிவிடும். ஏனெனில், திமுகவும் தவெகவும் கிட்டத்தட்ட அண்ணா திமுக - திமுக போல நேர் எதிரிகளாக மாறிவிட்டார்கள்.

தவெகவும் வேண்டும், திமுகவும் வேண்டும்

விஜய் ஒரு மாநிலத்தின் முகமாக ஈசியாக வந்துவிடலாம். ஆனால், தேசிய அளவில் மோடிக்கு மாற்றாக ஒரு நாட்டின் முகமாக விஜய் உருவெடுப்பதற்கு வாய்ப்பில்லை. தேசிய அளவிலான அரசியல் கணக்குகள் முற்றிலும் வேறானவை. தேசிய அளவில் மைனாரிட்டியாக இருக்கும் ஒரு நபர் ஆல்டர்நேட்டிவாக வருவதை இந்துத்துவா ஓட்டு வங்கி விரும்பாது. விஜய்க்கு தேசிய அளவிலான அரசியல் ஆசைகள் வருமேயானால் அதுவே அவருக்குப் பின்னடைவாக மாறும்.

டெல்லியில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி புகைப்படங்களைப் போட்டு வைக்கப்பட்ட பேனர் குறித்துப் பார்க்கும்போது, தேசிய அளவில் காங்கிரஸ் தங்களை விட்டுப் பிரிந்ததை திமுகவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது. அதோடு, இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய பெருந்தன்மையும் திமுகவிடம் இல்லை.

அக்ரசிவான அரசியல்

திமுகவினர் விரைவில் இதிலிருந்து மீண்டு வந்து அக்ரசிவாக அரசியல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. காங்கிரஸின் இந்தத் துரோகத்தை அவர்களால் ரொம்ப நாட்களுக்குப் பேசிக் கொண்டிருக்க முடியாது.

இந்தியக் கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரஸ் தான் ஒவ்வொரு மாநிலத்திலும் துரோகம் செய்கிறது' என்று சொல்வதில் உண்மையில்லை. அரசியலில் துரோகம், தியாகம் என்ற வார்த்தைகளுக்கு எல்லாம் எந்தவிதமான அர்த்தமும் கிடையாது; இது வெறும் பாலிடிக்ஸ் மட்டும்தான். திமுக ஒரு காரியத்தைச் செய்தால் அது சாதுரியம் அல்லது ராஜதந்திரம், மோடி செய்தால் அது ராஜதந்திரம், ஆனால் காங்கிரஸ் செய்யும்போது மட்டும் ஏன் துரோகம் என்று சொல்ல வேண்டும்?

அரசியலில் சில குறைந்தபட்ச நாகரிகங்கள் இருக்குமே தவிர, பெரிய அளவில் துரோகம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. அமைச்சர் தாமு அன்பரசன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை விமர்சிக்கும் தொனியில் பேசிய வார்த்தைகள் மிகவும் தவறானவை. இத்தகைய அவதூறான வார்த்தைப் பிரயோகங்கள்தான் திமுகவின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமையும்" என்றெல்லாம் கருத்து தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+