"செல்லும் செல்லாதுனு" ஒரே வார்த்தையில் சொல்லாமல்! நீதிபதி பயன்படுத்திய "அந்த" அதிகாரம்.. உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ் தரப்பே கேட்காத ஒரு நிவாரணத்தை தனி நீதிபதி கொடுப்பதற்கு சட்டத்தில் வழியிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக் குழு வழக்கில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என தனி நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன் வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பல முக்கிய வாதங்களை முன் வைத்தனர்.

கேட்காத நிவாரணம்

கேட்காத நிவாரணம்

அதில் ஒன்றுதான் ஓபிஎஸ் தரப்பு கேட்காத நிவாரணத்தை தனி நீதிபதி கொடுத்துள்ளார் என்பதாகு���். அதாவது ஓபிஎஸ் கேட்டது ஜூலை 11 ஆம் தேத பொதுக் குழு செல்லுமா செல்லாதா என்பதுதான். அதற்கேற்பதான் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். ஆனால் அவர்களே கேட்காத ஒரு நிவாரணமாகனன ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நலையே தொடரும் என தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இரட்டை தலைமை

இரட்டை தலைமை

அதாவது ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலை என்றால் அதிமுகவில் இரட்டை தலைமை, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர�� பதவிகள் தொடரும் என்பதாகும். இதைத்தான் எடப்பாடி பழனிசாமி முக்கிய வாதமாக முன் வைத்துள்ளது. இது போல் கேட்காத ஒரு நிவாரணத்தை நீதிபதிகள் வழங்குவதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உரிமையியல் வழக்கு

உரிமையியல் வழக்கு

இதுகுறித்து வழக்கறிஞர்களிடம் கேட்ட போது, உரிமையியல் தொடர்பான வழக்குகளில் மனுதாரரே கேட்காத ஒரு நிவாரணத்தை வழங்கலாம். இந்த சட்டவிதியை வைத்தே உச���சநீதிமன்றமும் சில வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. அதாவது உரிமையியல் தொடர்பான வழக்குகளில் இவ்வாறு நிவாரணத்தை வழங்குவது என்பது நீதிபதியின் அடிப்படை உரிமையாகும்.

சட்டத்தில் இடம் உண்டு

சட்டத்தில் இடம் உண்டு

வாதி, பிரதிவாதிகளின் வாதங்களை கேட்ட பிறகு யார் தரப்பில் நியாயம், நீதி, இருக்கிறதோ அந்த தரப்புக்கு அவர்கள் கேட்காத வகையில் ஒரு நிவாரணத்தை அளிக்கலாம். இதனால் வாதி பிரதிவாதி கேட்ட���ர்களா கேட்கவில்லையா என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+