வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்!
சென்னை: சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எஸ்பி வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருந்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.
அமைச்சரவை மற்றும் வாரியத் தலைவர் பதவிக்காக எஸ்பி வேலுமணி அணியினர் இப்படி செய்கிறார்கள் என்று விமர்சித்தார். இந்த சூழலில் தவெக அமைச்சரவை அமைக்கப்பட்டது. காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளும் அமைச்சரவையில் இணைந்தனர். இதனால் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் கதி என்ன என்ற கேள்வி எழுந்தது.

இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர். அதேபோல் பாலகிருஷ்ண ரெட்டி, நத்தம் விஸ்வநாதன், அருண்மொழிதேவன், திருத்தணி கோ.அரி, ரவி மனோகரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவர் பக்கம் சாய்ந்தனர். இதனால் எஸ்பி வேலுமணி பக்கம் வெறும் 11 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர்.
நாளுக்கு நாள் எஸ்பி வேலுமணி அணி பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் எஸ்பி வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பை இணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த பேச்சுவார்த்தையை தங்கமணி மூலமாக நடத்தி வருகின்றனர். தற்போது எஸ்பி வேலுமணி தரப்பில் சில டிமாண்ட் வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அதன்படி அதிமுகவில் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும். அதிமுகவில் கட்சி சார்ந்த முடிவுகளை எடுக்க ஒரு குழு அமைக்க வேண்டும். குறிப்பாக கட்சியில் அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று எஸ்பி வேலுமணி தரப்பு எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.
இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதவி இழந்தவர்களுக்கு பதவி கிடைக்கும் என்றும், கட்சி முடிவுகளை எடுக்க குழு அமைக்க வாய்ப்பில்லை.. அதனால் கட்சிக்கு எதிராக கொடுத்த புகார்களை திரும்ப பெற்று, கட்சியில் இணைந்து செயல்படுங்கள் என்று கூறியதாக தெரிய வந்துள்ளது. இதனால் விரைவில் அதிமுகவில் இணைப்பு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
திமுகவிற்கு வந்துடுங்க.. வேலுமணி - தங்கமணிக்கு மெசேஜ் அனுப்பிய திமுக.. கொங்கு மண்டல அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications