இந்தியாவில் ஜாதிய ரீதியிலான ஒடுக்குமுறை இல்லையா? பிரவீன் காந்திக்கு பதில் கொடுத்த வெற்றிமாறன்
சென்னை: இந்தியாவில் ஜாதிய ரீதியிலான ஒடுக்குமுறை இல்லை என்று ஒருத்தர் சொல்கிறார்கள் என்றால்.. சமூக ஏற்றத்தாழ்வு இல்லை என்று சொல்கிறார்கள் என்றால், அவங்க எங்க வாழ்ந்துட்டு இருக்காங்கன்னு தெரியவில்லை என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
நேற்று சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பிரவீன் காந்தி, " பா. ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட சில இயக்குனர்கள், வளர்ச்சி கண்டதற்கு பிறகு தான் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது. ஜாதிப்படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு எதிராக எப்போதுமே நான் ஸ்டேட்மண்ட் கொடுத்துக்கொண்டே இருப்பேன். சாதியை சொல்லவே கூடாது.. சாதியை பேசவே கூடாது" என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் தான் இன்று இது தொடர்பாக இயக்குனர் வெற்றிமாறனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து வெற்றிமாறன் கூறியதாவது:- இந்தியாவில் ஜாதிய ரீதியிலான ஒடுக்குமுறை இல்லை என்று இன்றைக்கு ஒருத்தர் சொல்றாங்க என்றால்.. சமூக ஏற்றத்தாழ்வு இல்லை என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அவங்க எங்க வாழ்ந்துட்டு இருக்காங்கன்னு தெரியவில்லை.
இந்தியா முழுவதுமே ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. தமிழகத்திலும் இருக்கு தானே... நிறைய சம்பவங்கள் நடக்கிறது தானே.. இருந்துகொண்டு தானே இருக்கிறது. ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இல்லையே.. இவ்வாறு அவர் கூறினார். விடுதலை படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கிறது என்றும், இது தொடர்பாக இப்போது இங்கு வந்திருக்கிறேன் என்றும் வெற்றி மாறன் பேசினார்.
முன்னதாக நேற்று குழந்தை சிஒ கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பிரவீன் காந்தி பேசியதாவது:- ஜாதிப்படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு எதிராக எப்போதுமே நான் ஸ்டேட்மண்ட் கொடுத்துக்கொண்டே இருப்பேன். சாதியை சொல்லவே கூடாது.. சாதியை பேசவே கூடாது. எந்த சீட்டில் யார் உக்கார்ந்து இருக்கிறோம் என்று யாருக்குமே தெரியாது.
பா.ரஞ்சித் என ஒரு டைரக்டர்.. வெற்றி மாறன்னு ஒரு டைரக்டர்.. இன்னும் சில டைரக்டர்கள்.. வளர்ச்சி கண்ட பிறகுதான்.. சினிமா தளர்ச்சி ஆகிவிட்டது. என் பக்கத்தில் யார் இருக்கிறார் என்று எப்படி எனக்கு தெரியும். எல்லோரும் சேர்ந்து விசில் அடிக்கிறோம். சினிமாவில் சாதியை சொல்லவே கூடாது. சினிமாவில் சாதியை சொல்பவன் சமுதாயத்தில் ஒதுக்கப்பட வேண்டியவன். என்னுடைய கொள்கை அது.
நாம எல்லாம் ஒண்ணுங்க... சூத்திரன் யாரு... சூத்திரன் எப்போது தெரியுமா உருவானான். நம்ம உருவாக்கல.. இந்துக்கள் உருவாக்கல.. இங்கே படையெடுத்து வந்தான் பாருங்க.. அவன் உருவாக்கினான். இஸ்லாமியர்களும் அடுத்து வந்த வெள்ளைக்காரர்களும் உருவாக்கிய சூட்சமம் அது. சூத்திரன் என்பவன் சூத்திரத்தை அறிந்தவன். இறைவனுடைய சூத்திரத்தை அறிந்தவன். இவ்வாறு பிரவீன் காந்தி பேசியிருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications