ஈரோடு கிழக்கில் பாஜக போட்டி? வந்தது 'சமிக்ஞை’.. சூசகமா சொன்ன அண்ணாமலை.. ரைட்டு.. அப்போ கன்ஃபார்மா?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாது என்பதை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார் அண்ணாமலை.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் களமிறங்குவதாக அறிவித்துள்ள நிலையில், பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை இன்னும் அக்கட்சியின் தலைமை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த இடைத்தேர்தலில் போட்டி இல்லை என்கிற ரீதியில், பாஜக தரப்பில் இருந்து சமிக்ஞைகள் வரத் தொடங்கி இருக்கின்றன.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி அண்ணாமலைக்கு நேரடியாக சவால் விட்டு வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள அண்ணாமலை, 2024 நாடாளுமன்றத் தேர்தல் தான் எங்களுடையது எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக, இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், இந்த இடைத்தேர்தலில் நின்று எங்கள் வலிமையைக் காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டணியின் வலிமையான வேட்பாளர் மூலம் திமுக வேட்பாளரை எதிர்ப்பதே நோக்கம் என்றும் அண்ணாமலை தெரிவித்திருப்பதால், ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிகளில் எந்த அணியின் வேட்பாளரை பாஜக ஆதரிக்கப்போகிறது என்ற கேள்விக்கான விடை வெகு விரைவில் தெரியவரும்.

ஈபிஎஸ் அணி ரெடி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வருகின்றனர். பாஜகவிடமும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆதரவு கேட்டனர்.

ஓபிஎஸ் டீம்
இதேபோல, ஓ.பன்னீர்செல்வமும், இந்த இடைத்தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களமிறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஓபிஎஸ்ஸுக்கு இருப்பதால், அவரும் களத்தில் இறங்குகிறார். இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு போய்விடக்கூடாது, அதிமுகவில் தனது நிலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற காரணங்களுகாக இடைத்தேர்தலில் களமிறங்குகிறார் ஓபிஎஸ். ஓபிஎஸ், கூட்டணி கட்சி தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

பாஜக தலைவர்களிடம் பேச்சு
அதேசமயம், பாஜக இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினால் முழு ஆதரவு தருவோம் என்றும் தெரிவித்தார் ஓபிஎஸ். இதன் மூலம், அதிமுக விவகாரத்தில் பாஜகவின் ஆதரவை தன் பக்கம் நிலைநாட்டிக் கொண்டு, எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தரலாம் எனக் கணக்குப் போட்டார் ஓபிஎஸ். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடமே இதுதொடர்பாகப் பேசிய ஓபிஎஸ், குஜராத் சென்று அங்கு முக்கிய பாஜக தலைவர்களிடமும் இதுபற்றி பேசியதாக கூறப்படுகிறது.

போட்டியிடலாமா? - ஆலோசனை
பாஜகவைப் பொறுத்தவரை, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, தேர்தல் பணிக்குழுவை அமைத்துவிட்டது. கடலூரில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தின்போதும் உயர்மட்ட நிர்வாகிகள் இடைத்தேர்தல் பற்றி ஆலோசித்துள்ளனர். இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடலாமா வேண்டாமா என்பது பற்றி கட்சி நிர்வாகிகளின் கருத்துகள் கேட்கப்பட்டன. அதையடுத்து, அந்த கருத்துகள் டெல்லி தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன.

ஆளுங்கட்சி தான்
இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்பதை டெல்லி மேலிடத்தின் ஆணைப்படி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதே, பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுகள் மூலம் தெரியவருகிறது. அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இடைத்தேர்தலை பொறுத்தவரை 80 சதவிகிதம் ஆளும் கட்சியினர் தான் வெற்றி பெற்றுள்ளனர். ஆளும் கட்சியின் பண பலம், படை பலம், அதிகாரிகளை தவறுதலாக பயன்படுத்துவது ஆகியவை உள்ளன.

கட்டாயமில்லை
இந்த இடைத்தேர்தல் பாஜகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயமில்லை. அதிமுக பிரதான கட்சியாக உள்ளது. பலம் வாய்ந்த வேட்பாளரை ஆதரித்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே நோக்கம். ஏற்கனவே அதிமுகவில் அந்த தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். அதனால் வேட்பாளர்கள் தொடர்பாக புதிதாக ஆராய்வதற்கு எதுவுமில்லை. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் இது குறித்து அறிவிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

எங்கள் இலக்கே வேறு
எங்கள் தேர்தல் எது என்பது எங்களுக்கு தெரியும், எந்த தேர்தலில் பலப்பரீட்சை நடத்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதில் பாஜக களமிறங்கும். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் எங்களுடையது எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை. இதன் மூலம், பாஜக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, எங்கள் குறி நாடாளுமன்றத் தேர்தல் தான் என்பதை சூசகமாக அறிவித்துள்ளார் அண்ணாமலை.

வெளிப்படையாக அறிவிப்பதில் தாமதம்
இந்த இடைத்தேர்தல் தொடர்பாக டெல்லி தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பப்பட்ட நிலையில், 3 மாநில சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகவே பாஜக தலைமை முனைப்பு காட்டுவதாகவும், நிலைமையைப் பொறுத்து நீங்களே கட்சிக்கு சாதகமான எடுங்கள் என தமிழ்நாட்டு தலைமைக்கு டெல்லி ஆணையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையிலேயே, அண்ணாமலை, இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு பற்றிப் பேசி வருகிறார். ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக டெல்லியின் கண்ணசைவு கிடைக்காததன் காரணமாகவே, வெளிப்படையாக அறிவிப்பதில் தாமதம் எனக் கூறப்படுகிறது.
-
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா?












Click it and Unblock the Notifications