விஜய் வருகிறாரா? நயினாரை அழைத்து தனியாக கேட்ட எடப்பாடி.. களமிறக்கப்பட்ட தலைகள்.. செம ட்விஸ்ட்
சென்னை: தமிழக அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் கவனம் பெற தொடங்கி உள்ளார். முக்கியமாக தமிழக சட்டமன்ற வளாகத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி அறையில் அவரும் நயினாரும் சந்தித்து 30 நிமிடங்கள் பேசியது அரசியலில் உற்று கவனிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி செய்துள்ளார். சமீபத்தில் கூட சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா - அண்ணாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அமித் ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம்.
2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று அமித் ஷா கூறி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி சில சீக்ரெட் மீட்டிங்குகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளார்.

எடப்பாடி நயினார் ஆலோசனை
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக சட்டமன்ற வளாகத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி அறையில் அவரும் நயினாரும் சந்தித்து 30 நிமிடங்கள் பேசியது அரசியலில் உற்று கவனிக்கப்பட்டது. கூட்டணி ஆட்சி ; துணை முதல்வர் என்றெல்லாம் நயினார் நாகேந்திரனை உயர்த்திப்பிடித்து பாஜகவினர் போஸ்டர் ஒட்டிய விவகாரம் எடப்பாடியை கோபப்படுத்தியிருந்தது.
உடனே அவரை தொடர்புகொண்டு தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார் எடப்பாடி. இதனை அடுத்து தனது கட்சியினருக்கு அப்படியெல்லாம் போஸ்டர் ஒட்டக்கூடாது என்று எச்சரிக்கை செய்த நயினார், கூட்டணி ஆட்சியை பற்றி அமித் ஷா பேசவில்லை; கூட்டணி மட்டும் தான் அதிமுகவுடன் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று பல்டி அடித்தார்.
நயினார் மீட்டிங்
இப்படிப்பட்ட சூழலில்தான், எடப்பாடியை அவரது அறையில் சந்தித்தார் நயினார். இருவரும் அரசியல் ரீதியாக பல விசயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது பற்றி அதிமுக, பாஜக தரப்புகளில் விசாரித்த போது, ''அதிமுக-பாஜக கூட்டணியை பொறுந்தா கூட்டணின்னு திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் விமர்சனம் செய்து வருகின்றன. மக்கள் மத்தியில் இது எடுபடவில்லைங்கிறது தெரியும். இருந்தாலும் இதில் அலட்சியம் காட்டக்கூடாது.
அலட்சியம் கூடாது
தேர்தலுக்கான கூட்டணி; திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக ஒன்றிணைந்திருக்கிறோம். ஒத்த சிந்தனையுள்ளவர்கள் ஓரணியில் ஒன்றாகியிருக்கிறோம் என்பதை நாம் இணைந்து மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இருக்கிற 10 மாதங்களில் இதனை நாம் அழுத்தமாக செய்ய வேண்டும். அதற்கு முதல்கட்டமாக அதிமுக-பாஜக தலைவர்களை மேடையேற்றும் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தலாம் என இருவருமே விவாதித்தனர். இருவரும் அதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, பாஜக கூட்டணியை அதிமுக மா.செ.க்கள் விருப்பவில்லை என எனக்கு தகவல் வருகிறது என நயினார் கேட்டிருக்கிறார்.
பாஜக கூட்டணி அதிருப்தி
அதற்கு எடப்பாடி, எங்கள் கட்சி மா.செ.க்களிடம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் அதிருப்தி இருக்கிறது. மறுக்கவில்லை. மா.செ.க்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களுக்கு புரிய வைக்கிறேன். பாஜகவுடன் கொள்கை கூட்டணி இல்லை; தேர்தல் கூட்டணி தான். கொள்கை வேறுபாடுகள் உள்ள கட்சிகள் கூட்டணி வைப்பதில்லையா? அப்படி கூட்டணி வைப்பதால் கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டனவா? நாமும் அப்படித்தான். எந்த சூழலிலும் மதச்சார்பின்மையை நாம் விட்டுக்கொடுத்து விடமாட்டோம். நம்மை பொறுத்த வரை 2026-ல் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்காக பலமான கூட்டணியை அமைப்பது அவசர அவசியம் தான் என மா.செ. க்களுக்கு புரியும்படி விளக்கிச் சொல்லலாம் என இருக்கிறேன் என விவரித்திருக்கிறார்.
இதனையடுத்து, விஜய் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர உங்கள் மேலிடம் எடுக்கும் முயற்சி எந்த அளவில் இருக்கிறது? என்று எடப்பாடி கேட்க, பாஜகவுக்கு தொடர்பில்லாத நபர்கள் மூலம் சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. அந்த முயற்சி அடுத்தக் கட்டத்துக்கு நகரவில்லை. தற்போது விஜய் பற்றி யோசிக்காமல் இருக்கின்றனர். நிச்சயம் அவரை நம் கூட்டணிக்குள் எங்கள் தேசிய தலைவர்கள் கொண்டு வந்துவிடுவார்கள் என நயினார் பகிர்ந்திருக்கிறார்'' என்று அதிமுக-பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது
-
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications