Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அன்பு மகளே.." பாடகி பவதாரிணி மரணம்.. இசையமைப்பாளர் இளையராஜா உருக்கம்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், மகள் உயிரிழப்பு குறித்து இசைஞானி இளையராஜா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக கேன்சரால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே சமீபத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றிருந்தார்.

Isaignani Ilayaraja has posted a heartfelt post about the loss of her daughter bhavatharini


அங்கே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே சிகிச்சை பலனில்லாமல் அவர் நேற்று ஜனவரி 25ஆம் தேதி உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

பவதாரிணி மறைவு: முதல்வர் ஸ்டாலின், இசையமைப்பாளர்கள் ஏ ஆர் ரஹ்மான், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் பவதாரிணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து பவதாரிணி உடல் இலங்கையில் இருந்து தமிழகம் எடுத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காகச் சகோதரர் யுவன் சங்கர் ராஜா இன்று காலை இலங்கை சென்றார். பிறகு இன்று பிற்பகல் பவதாரிணி உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.


இலங்கை தலைநகர் கொழும்பில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் அவரது உடல் சென்னைக்கு எடுத்து வரப்பட்டது. பவதாரிணி உடலைப் பெற அவரது சகோதரர் கார்த்திக் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் சென்னை ஏர்போர்ட் வந்திருந்தனர். பிறகு ஏர்போர்ட்டில் இருந்து பவதாரிணி உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜா இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இளையராஜா: அங்கே உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இளையராஜா இல்லத்திற்குக் கங்கை அமரன் மகன் பிரேம்ஜி, பாரதிராஜா மகன் மனோஜ் ஆகியோர் வந்துள்ளனர். மேலும், பிரபலங்கள் பலரும் பவதாரிணி மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே இப்போது இளையராஜா உருக்கமான பதிவு ஒன்றைத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது மகள் குழந்தையாக இருக்கும் போது எடுத்த படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இளையராஜா, "எனது மகளே" என்று மட்டும் பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த பதிவுக்கு கீழ் அவரது ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜா வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பவதாரிணி உடல்.. இரவு தேனிக்கு எடுத்துச்செல்ல உள்ளதாக தகவல்!

பாடல்கள்: இளையராஜாவின் மகளான பவதாரிணி ராசய்யா படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். இவர் பாடிய மஸ்தானா மஸ்தானா பாடல் அப்போதே மிகப் பெரிய ஹிட்.. இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, தேவா என்று பலரது இசையில் பவதாரிணி பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் மட்டுமின்றி பல்வேறு தெலுங்கு படங்களிலும் இவர் பாடியுள்ளார். மேலும், இவர் நடிகை ரேவதி இயக்கிய மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.

பவதாரிணியின் குரல் தனித்துவம் வாய்ந்தது என்றும் குயில் போல் அழகாக இருக்கும் குரலுக்குச் சொந்தக்காரரான பவதாரிணி பாடிய பல பாடல்கள் மிக பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளையராஜா இசையில் பாரதி படத்தில் வரும் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காக அவருக்குத் தேசிய விருதும் கிடைத்தது.இந்தச் சூழலில் தான் அவருக்கு கேன்சர் பாதிப்பு ஏற்படவே அவர் மருத்துவச் சிகிச்சை எடுத்து வந்தார். ஆயுர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்ற அவர் நேற்று மாலை மறைந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+