ஜெயலலிதா ஜெயலலிதா தான்! அது அந்தக்காலம்! அதிமுக இஃப்தார் விழாவை புறக்கணித்த இஸ்லாமிய பிரமுகர்கள்!
சென்னை: அதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சியை இஸ்லாமிய பிரமுகர்கள் பலரும் புறக்கணித்துள்ளனர்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் இஸ்லாமிய அமைப்புகளே நடத்தாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இஃப்தார் விருந்தை ஆண்டுதோறும் நடத்தி வந்தார்.
ஆனால் இப்போது 100 பேர் மட்டுமே அமரக்கூடிய ஒரு மினி ஹாலில் கட்சியினரை மட்டும் அழைத்து சிம்பிளாக இப்தார் விருந்தை நடத்தியிருக்கிறது இப்போதுள்ள அதிமுக தலைமை.

இஃப்தார் விருந்து
அதிமுக சார்பில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் இஃப்தார் விருந்து நடத்தப்படுவது வழக்கம். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை இந்த இஃப்தார் விருந்து நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக ஆயிரம் பேருக்கு குறையாமல் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு நிகழ்ச்சியை நடத்துவார். 5 நட்சத்திர விடுதிகளில் இருந்து இப்தார் விருந்துக்கு தேவையான உணவுகள் வந்து சேரும். இஸ்லாமிய சமுதாய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், என பல தரப்பட்டோரும் அந்த விழாவில் பங்கேற்பார்கள்.

அதிமுகவுக்கு இணையாக
அதிமுகவுக்கு இணையாக அந்தக் காலகட்டத்தில் திமுக கூட அப்படியொரு இஃப்தார் விருந்து நிகழ்ச்சியை நடத்தியது கிடையாது. திருப்பூர் அல்தாப் போன்றவர்கள் நடத்தும் இப்தார் விருந்தில் தான் ஸ்டாலின் கூட பங்கேற்பார். ஆனால் இன்று என்னவென்றால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. திமுக சார்பில் மிக பிரம்மாண்டமாக ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஆயிரம் பேருக்கும் குறையாமல் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள், உட்பட தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் ஆகியோரும் பங்கேற்றனர்.

அதிமுக விருந்து
ஆனால் அதேவேளையில் அதிமுக இப்தார் விருந்து நிகழ்ச்சி பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி நடக்கவில்லை. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளை மட்டும் அழைத்து ராயப்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலின் மினி ஹாலில் சிம்பிளாக விழா நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக தலைமைக் கழகம் சார்பில் இஸ்லாமிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டும் அவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது தான் இப்போது பேசு பொருளாகும். எண்ணிக்கையில் குறைவாக இருக்கக்கூடிய ஷியா பிரிவு காஜி மட்டும் அதில் கலந்துகொண்டார்.

இரண்டு பேர்
முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் ஆகிய இருவர் மட்டுமே இன்றைய சூழலில் அதிமுகவில் இஸ்லாமிய சமுதாய பிரமுகர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கே மேடையில் நடுநாயகமாக இருக்கைகள் போடப்படவில்லை. அப்துல் ரஹீமை கூட விட்டுவிடுவோம், ஆனால் அவைத்தலைவராக இருக்கக் கூடிய தமிழ் மகன் உசேனுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அருகில் இருக்கை போட்டிருக்க வேண்டும். ஏ.சி.சண்முகம், பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோருக்கெல்லாம் அடுத்தப்படியாக 4 வது இடத்தில் அவைத்தலைவருக்கு இருக்கை போடப்பட்டிருந்தது.

மதுசூதணன் இருந்திருந்தால்
அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் மதுசூதணன் இருந்திருந்தால் இப்படித்தான் இருக்கை போடப்பட்டிருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. இதனிடையே இந்த விழாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை போல் நாங்கள் சிறுபான்மை மக்களிடம் இரட்டை வேடம் போடமாட்டோம் எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி -
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
அதெல்லாம் முடியாதுங்க.. பாஜகவிடம் ஷோல்டரை ஏற்றிய எடப்பாடி.. லிஸ்டை பாருங்க.. அடிச்சு ஆடுறாரே! -
சும்மா கிடந்த ரஜினியை.. ஊதிக் கெடுத்த ஆதவ்! 1996 கண்ணு முன்னாடி வந்து போகுமில்லையா? வாய்ஸ் யாருக்கு? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications