சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புண்படுத்திட்டே இருக்கார்! பிடிஆர் குறித்து முதல்வருக்கு பறந்த புகார்! பொரிந்து தள்ளிய ஜாக்டோ-ஜியோ

Google Oneindia Tamil News

சென்னை : பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து அரசு ஊழியர்களின் மனதை புண்படுத்துவது போல் பேசுவதாக முதல்வர் ஸ்டாலினிடம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் புகார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நடைமுறையில் இருந்த அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கமான ஜாக்டோ ஜியோ தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் திமுக கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சியைப் பிடித்து நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அரசியலுக்காக தவறான தகவல்களை பரப்பக்கூடாது! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் கண்டனம்! அரசியலுக்காக தவறான தகவல்களை பரப்பக்கூடாது! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் கண்டனம்!

திமுக தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கை

மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களின் போராட்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் எனவும் தமிழக முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் என்பதற்காக தாங்கள் களப்பணியாற்றியதாக அரசு ஊழியர்கள் வெளிப்படையாகவே அறிவித்தனர். இது தொடர்பாக கடந்தாண்டு ஜாக்டோ ஜியோ சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்

இந்த நிலையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பற்றி பொதுமக்களிடையே பகை உணர்வை வளர்க்கும் விதமாக நிதி அமைச்சர் பேசி வருவதாக ஜாக்டோ ஜியோ தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒரு ரூபாய் வருமானம் வருகிறது என்றால் அதில் 65 பைசா அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கும் ஓய்வூதியத்திற்கும் செயல்படுகிறது என பேசியதாகவும் , இதனால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததாக கூறியிருந்தனர்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

குறிப்பாக கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கிடையே தங்களது பணியினை மேற்கொண்ட அரசு ஊழியர்களை "ஒருநாள் கூட சம்பளத்தை ஓய்வூதியத்தினை இழக்காமல்" என்று வசை பாடினார் எனவும் காட்டமான அறிக்கையை ஜாக்டோ ஜியோ வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து அரசு ஊழியர்களின் மனதை புண்படுத்துவது போல் பேசுவதாக முதல்வர் ஸ்டாலினிடம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் புகார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 முதல்வரிடம் புகார்

முதல்வரிடம் புகார்

விரைவில் நடைபெற இருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்க மாநாடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை இன்று ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சந்தித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான தேதி குறித்து பேசினர். அப்போது தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து அவதூறாக பேசி வருவதாகவும், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் தங்கள் மனதை புண்படுத்துவது போல் இருப்பதாக முதல்வரிடம் புகார் கூறியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் முதல்வர் மீது இருக்கும் நம்பிக்கையால் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படவில்லை என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

English summary
It has been reported that jacto geo organizations have complained to Chief Minister Stalin that Finance Minister PTR Palanivel Thiagarajan is constantly talking about the old pension scheme as if he is hurting the sentiments of government employees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X