சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வங்கதேசத்தில் கலவரம்.. மத ரீதியிலான வன்முறையை தடுக்க தீர்வு என்ன?.. விளக்குகிறார் ஜக்கி வாசுதேவ்!

Google Oneindia Tamil News

சென்னை: ஜாதி ரீதியிலான வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவது எப்படி என்பது குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் விளக்கமளித்துள்ளார்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் பக்தர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த வகையில் வங்கதேச கலவரம் குறித்து ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில தினங்களாக வங்கதேசத்தில் உள்ள கோயில்கள் சூறையாடப்படுவதாக தகவல்கள் வருகின்றன.

Jaggi Vasudev says about how to end violence on religion?

அது போல் அங்கு இந்துக்களும் கொல்லப்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வசித்து வரும் இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறை மற்றும் குறிப்பட்ட மதத்தின் மீதான பாரபட்சத்தை பார்க்கும் போது என் மனம் வருந்துகிறது.

வங்கதேசத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவ உங்கள் கருத்து என்ன என பக்தர் கேள்வி எழுப்பினார். இதற்கு சத்குரு பதிலளிக்கையில் வங்கதேசம் வெறும் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒரு நாடாகும். அங்கு கிளர்ச்சி, வன்முறை மட்டும் நடந்தது. அந்த நேரத்தில் கற்பனை செய்து கூட பார்க்க இயலாத வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது.

இதிலிருந்து புதிய நாடு ஒன்று உருவானது. ஆனால் இது போன்ற துரதிருஷ்டவசமான நிகழ்வுகள் இப்போது மட்டும் நடக்கவில்லை. அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த வன்முறைக்கு பின்னால் பல்வேறு சக்திகள் உள்ளன. அவற்றில் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும், வன்முறை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை. இது நடக்கத்தான் செய்யும்.

வங்கதேசத்தில் மட்டும் இது நடக்கவில்லை. எனவே வங்கதேசத்தில் மட்டும் இது நடப்பதாக சொல்லாதீர்கள். காஷ்மீரை போல வங்கதேசத்திலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. நீங்கள் இந்த நாட்டை விட்டு வெளியே வசிக்கிறீர்களா என வைத்துக் கொள்வோம், அப்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? இந்தியாவில் எங்கு பார்த்தாலும் இது போன்ற கொலைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இது நியாயமானதல்ல. அப்படித்தானே? அது போல்தான் வங்கதேசத்தில் மட்டும் வன்முறை நடப்பதாக நாம் சொல்வதும் தவறுதான். வீடுகளும், கோயில்களும் சூறையாடப்படுகின்றன, எரிக்கப்படுகின்றன. சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இவையெல்லாம் ஒட்டுமொத்த வங்கதேசிகளுக்கு நடப்பதில்லை. மற்ற நாடுகளை போல் இந்த நாடானது காவல்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத நாடு.

3 அல்லது 4 நாட்கள் கழித்துதான் போலீஸாரால் செயல்பட முடியும். ஊடகங்கள், மற்றவைகளின் மூலம் நான் கேள்விப்பட்டது என்னவென்றால் அந்த நாட்டில் வன்முறை தற்போது கட்டுக்குள் இருக்கிறது. வங்கதேசத்தில் ஏதேனும் சில இடங்களில் அது மீண்டும் துளிர்க்குமா என்றால் நிச்சயம். இவையெல்லாவற்றுக்கு மேலாக வங்கதேசம் இந்தியாவுடன் நட்புறவு கொண்ட நாடாகும். எனவே ஒரு நட்பு நாடாக அந்த நாட்டை நாம் முழுவதுமாக புறக்கணித்துவிட முடியாது. குறிப்பிட்ட சம்பவங்களுக்கு நாம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

எனவே வங்கதேசம் வன்முறையை நடத்துவதாக சொல்ல முடியாது. வங்கதேசத்தில் இருக்கும் எல்லா மக்களும் வன்முறையில் ஈடுபடுவதில்லை. குறிப்பிட்டு சொல்ல போனால் 200 முதல் 500 பேர் வரை மட்டுமே இந்த வன்முறையை நிகழ்த்துகிறார்கள். யார் மீது மதச்சாயம் பூசக் கூடாது. இந்த வன்முறைகளை எப்படி நிறுத்துவது? போலீஸை அனுப்பலாம், அவர்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் ராணுவத்தை அனுப்பலாம். துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரலாம். ஆனால் இப்படியே போகக் கூடாது. இவையெல்லாம் அந்த நேரத்தில் வன்முறையை தடுத்து நிறுத்தும்.

மனிதர்கள்தான் இதை செய்கிறார்கள். மனிதத்தை மறந்து இவ்வாறு செயல்படுகிறார்கள். நாம் இந்த மதம், அந்த மதம், இந்த நாடு அந்த நாடு, இந்த ஜாதி, அந்த ஜாதி என வேறுப்பட்டுள்ளோம். எனவே நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், வன்முறை என்பது தெருக்களில் இல்லை. அது மனிதனின் மனதில் இருக்கிறது. ஜாதி, மதம், இனம் என்ற குறிப்பிட்ட அடையாளத்தை விட்டு நாம் வெளியே வர வேண்டும். மனித உணர்வுகளை அதிகரிப்பது மத கலவரங்களை முடிவுக்கு கொண்டு வரும் முக்கிய விஷயமாகும் என ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

English summary
Sadhguru Jaggi Vasudev says about how to end violence on religion?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X