ஜனநாயகன் பஞ்சாயத்து ஓவர்.. ரிலீஸ் தேதி வந்துடுச்சு! குஷியான விஜய் ரசிகர்கள்!
சென்னை: சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காததால், ஜனநாயகன் திரைப்படம் இன்றும் வெளியாகமல் இருக்கிறது. இது தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், திரைப்பட வெளியீடு தேதி குறித்த தகவல்கள் கசிந்திருக்கின்றன.
பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன், இத்தனை நாட்கள் தள்ளிப்போய் இருப்பது விஜய் ரசிகர்களை அப்செட் செய்திருக்கிறது. இந்நிலையில் தற்போது ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள், ரசிகர்களை ஓரளவுக்கு ஆசுவாசப்படுத்தியிருக்கிறது.

விஜய்யின் கடைசி திரைப்படம் என்று சொல்லப்படும் ஜனநாயகன், ஜன.9ம் தேதி வெளியாக இருந்தது. திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழுக்காக கடந்த டிச.18ம் தேதி தயாரிப்பு நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இருப்பினும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், கடைசி நேரத்தில் சில காட்சிகளை வெட்ட வேண்டும் என்று கேட்டது.
குறிப்பாக படத்தில் மத உணர்வுகள் மற்றும் இந்திய ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாகவும், எனவே படத்தை 9 பேர் கொண்ட மறு ஆய்வுக் குழுவுக்கு, தணிக்கை வாரியத்தின் தலைவர் அனுப்பி வைத்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுக்க.. படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்கி, படத்தை வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவும் கொடுத்தது. ஆனால், தணிக்கை வாரியம், உடனடியாக மேல்முறையீடு செய்தது.
இதற்கிடையில் திரைப்படத்தின் ஓடிடி விநியோக உரிமையை பெற்ற அமேசான், படம் வெளியாக தாமதமாவதால்.. தங்களுக்கு நிதியிழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தது. எனவே திரைப்படத்திற்கு நெருக்கடி அதிகரித்தது. இப்படி இருக்கையில், மேல் முறையீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை நிறைவடைந்திருக்கும் நிலையில், நாளை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
பிரச்சனை இப்படி இருக்க.. பிப் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைப்படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் எதுவும் தற்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு!












Click it and Unblock the Notifications