சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுன் ஓராண்டு ஓடிப்போச்சு.... கொரோனா போகலையே - என்னென்ன கூத்து நடந்தது தெரியுமா

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க நாடு முழுவதும் முதன் முறையாக கடந்த ஆண்டு இதே நாளில்தான் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. ட்விட்டரில் பலரும் லாக்டவுன் நினைவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா லாக்டவுன் அறிவித்து இன்றுடன் ஓராண்டு ஆகிவிட்டது. ஒவ்வொரு முறை லாக்டவுன் அறிவித்த போதும் பல கூத்துக்கள் அரங்கேறின. அவைகளை நினைவுபடுத்தி இன்றைய தினம் ட்விட்டரில் பலரும் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

Recommended Video

    கொரோனாவும்... ஊரடங்கும்... அழியாத ஓராண்டு நினைவலைகள்!

    கடந்த ஆண்டு உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியது. மக்கள் கொரோனாவின் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக மார்ச் 22ஆம் தேதி முதல்முறையாக ஒருநாள் முழு ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது.

    தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூரலிகான் அடேங்கப்பா குத்துகரணம்- மீண்டும் போட்டியிடுகிறாராம் தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூரலிகான் அடேங்கப்பா குத்துகரணம்- மீண்டும் போட்டியிடுகிறாராம்

    மார்ச் 24ஆம் தேதி முதல் பல மாதங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிரதமர் மோடி இரவு 8 மணியளவில் தொலைபேசியில் பேசி கொரோனா முன்களப்பணியாளர்களுக்காக கை தட்டியும், விளக்கேற்றியும், மணிகளை ஒலித்தும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

    மோடி பேச்சு


    கொரோனா முன்கள பணியாளர்களுக்கு பாராட்டும் வகையில் மாலை நேரங்களில் கைகளை தட்டுங்கள், மணிகளை ஒலிக்க செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

    கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு பாராட்டு

    கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து பணியாற்றினர். அவர்களுக்கு வாழ்த்து கூறும் வகையில் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார் அதனை ஏற்று பலரும் விளக்கேற்றினர்.

    கொரோனா கோ

    கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு விளக்கேற்ற சொன்னதற்கு பலரும் தீப்பந்தம் ஏந்தி வீதி வீதியாக கோ கொரோனா கோ என்று கும்பலாக முழக்கமிட்டு சென்றனர்.

    அதிர்ந்த தெருக்கள்

    ஏராளமானோர் தட்டுக்களை தட்டியும் வீதிகளில் போட்டும் தட்டுக்களை ஒலிக்கச் செய்தனர். இதைப் பார்த்து கொரோனா பயந்து ஓடியே விட்டது என்று பலரும் கிண்டலடித்தனர்.

    ஓடியே போன கொரோனா

    வீட்டு மாடியில் ஒருவர் தட்டுக்களை வரிசையாக வைத்து டிரம்ஸ் வாசித்தது காமெடியின் உச்சம். அதைப்பார்த்து கொரோனா சிரித்த சிரிப்பு பலருக்கும் கேட்டிருக்கும்.

    என்னென்ன கூத்துக்கள்

    என்னென்ன கூத்துக்கள்


    ஞாயிறு லாக்டவுன்களை தாங்க முடியாத மக்கள் சனிக்கிழமைகளிலேயே கறிக்கடைகளுக்கு போய் மட்டன் சிக்கன் என்று வாங்கி வைத்துக்கொண்டு சமைத்து சாப்பிட்டதை இன்றைக்கும் அசை போடுகின்றனர். மறுபடியும் அதே போல ஒரு லாக்டவுன் வந்துருமோ என்பதே பலரின் அச்சமாக உள்ளது.

    English summary
    Janata Curfew Anniversary Now, a year later, Indians are remembering the day and sharing their memories on Twitter, along with hilarious memes and jokes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X