விலகி போவது பாமக உரிமை...ஆனால் எங்களை விமர்சித்தால் நாங்களும் விமர்சிப்போம்...ஜெயக்குமார்
உட்கட்சிப்பிரச்சினைப்பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: யாருடைய கட்டாயத்தின் பேரில் இப்படி ஒரு முடிவு எடுத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எழுதப்படாத ஒப்பந்தம் போல இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கலாம் என்று அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது பாமக. அந்த தேர்தலில பாமக சார்பில் 5 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில், 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து செப்டம்பர் 15ஆம் தேதி, 16ஆம் தேதி விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணை பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்வார்கள் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2016 சட்டசபை தேர்தலின் போது மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழகத்துடன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது பாமக. ஆனால் பாமக போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் தோல்வியைத்தான் சந்தித்தது. இதனையடுத்து 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக-பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம்பெற்றது. தற்போது பாமகவுக்கு 5 எம்.எல்.ஏக்கல் உள்ளனர். சட்டசபை தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தது முதல் திமுகவுடன் நெருக்கம் காட்டி வருகிறது பாமக.

டாக்டர் ராமதாஸ்
உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை தற்போதைய கூட்டணி நீடிக்கும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேட்டியளித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார். எங்களது இலக்கு 2026 தேர்தல்தான். அரசியலில் மாற்றங்கள் வந்துதான் தீரும். லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரையில் சூழ்நிலைகள் பொறுத்து முடிவெடுப்போம். ஆனால் 2026 சட்டசபை தேர்தலில் திமுக, அண்ணா திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்காது என்று கூறினார் டாக்டர் ராமதாஸ். 2026 சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாமகவின் இலக்கு என்றும் கூறியிருந்தார்.

பாமக தனித்துப்போட்டி
இந்த நிலையில் திடீரென அதிமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட பாமக தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. இன்று முதல் விருப்பமனு பெற அறிவிப்பு வெளியிட்டுள்ளது பாமக. அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபைத் தேர்தலில் கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார் பேட்டி
அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் முன்னாள் அமைச்சர்கள் அண்ணாசாலையில் உள்ள உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களின் நெஞ்சங்களில் மறையாமல் வாழ்ந்து வருகிறார் பேரறிஞர் அண்ணாவிற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கிறோம் என்று கூறினார்.
Recommended Video

உட்கட்சி பிரச்சினை
அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியது பற்றி ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியது எங்களுக்கு இழப்பு எதுவும் இல்லை என்று கூறிய ஜெயக்குமார், அது அவர்களின் உட்கட்சியினர் எடுத்த முடிவு என்று கூறினார். அதில் நாங்கள் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்று கூறினார். கூட்டணியில் இருக்கலாமா வேண்டாமா என்பது பற்றி முடிவு எடுத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு. அதை விட்டு விட்டு அதிமுகவின் தலைமை பற்றியோ அதிமுகவின் உட்கட்சி விவகாரம் பற்றியோ விமர்சிக்கக் கூடாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

எழுதப்படாத ஒப்பந்தம்
எங்களுடைய கூட்டணியில் நீடிக்கலாமா வேண்டாம் என்பது பற்றி அவர்கள் முடிவு எடுக்கலாம். எங்கள் கட்சியைப் பற்றி விமர்சிக்க கூடாது. அப்படி அவர்கள் விமர்சனம் செய்தால் நாங்களும் விமர்சனம் செய்வோம் என்று கூறினார்.
யாருடைய கட்டாயத்தின் பேரில் இப்படி ஒரு முடிவு எடுத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எழுதப்படாத ஒப்பந்தம் போல இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கலாம் அதைப்பற்றி நான் சொல்ல முடியாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

பொய்யான வாக்குறுதி
அதிமுக கொள்கையும் லட்சியமும் கொண்ட கட்சி. பத்தாண்டு காலத்தில் மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறோம். திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டது. இன்றைக்கு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாமல் உள்ளது. அது மக்களுக்கு நன்றாக தெரிகிறது. மக்கள் உணர்ந்துள்ளனர் இது உள்ளாட்சித்தேர்தலில் எதிரொலிக்கும்.

விமர்சனங்களைத் தாண்டி வென்றோம்
மக்கள் எங்களோடு இருக்கும் வரை எங்களுக்கு கை கொடுக்கும். அதிமுக காலத்தில் செய்தவைகளை எடுத்துக்கூறுவோம். எங்களைப் பொருத்தவரை இழப்பு எதுவும் இல்லை. இழப்பு என்பது அவர்களுக்குத்தான் என்று கூறினார். உட்கட்சி பிரச்சினை பற்றி பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எத்தனையோ விமர்சனங்களைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளோம் என்றார். இடைத்தேர்தல், சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று வலுவான எதிர்கட்சியான அமர்ந்துள்ளோம் என்று கூறினார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications