கட்டாந்தரையில் படுத்தேன்.. தீவிரவாதிகள் இருந்த சிறையில் அடைக்கப்பட்டேன்.. ஜெயக்குமார் குமுறல்
சென்னை: சிறையில் கட்டாந்தரையில் படுத்திருந்தேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். மேலும் தீவிரவாதிகள் இருந்த சிறையில் தன்னை அடைத்து வைத்திருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது சென்னை 49 ஆவது வார்டில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் கள்ள ஓட்டுப் போட்டதாக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
அப்போது அங்கிருந்த அதிமுகவினர் நரேஷ் மீது தாக்கினார். அப்போது அவர்களை விலக்கிவிட்ட ஜெயக்குமார், நரேஷை அரை நிர்வாணப்படுத்தி போலீஸிடம் ஒப்படைத்தார்.

வைரலான வீடியோ
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து நரேஷ் கொடுத்த புகாரின் பேரில் பட்டினப்பாக்கத்தில் இருந்த ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் புழல் சிறையிலிருந்து ஜெயக்குமார் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

3 மணி நேரம்
இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் ஜெயக்குமார் மீது வழக்குப் போட்டால் அதிமுகவை அழித்துவிட முடியுமா? எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது. கைது செய்யப்பட்ட என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லவில்லை.

தண்ணீர் இல்லை
3 மணி நேரமாக சென்னையை சுற்றி காண்பித்தனர். ஹிட்லர் முசோலினியின் ஒட்டுமொத்த சர்வாதிகாரி பிரதிபலிப்பாக ஸ்டாலின் இருக்கிறார். சிறையில் குடிக்கத் தண்ணீர் இல்லை. கட்டில் இல்லை. அதனால் நான் கட்டாந்தரையில் படுத்திருந்தேன். தீவிரவாதிகள் உள்ள சிறையில் என்னை அடைத்து வைத்திருந்தனர்.

அதிமுக ஜெயக்குமார்
இதற்கெல்லாம் அஞ்சும் இயக்கம் அதிமுக கிடையாது. 1972 ஆம் ஆண்டு ஆண்டு முதல் எத்தனையோ சோதனைகளை தாங்கி சாதனை படைத்த இயக்கம் அதிமுக. இந்த பூச்சாண்டி வேலைகளுக்கு எல்லாம் அதிமுக எப்போதும் பயப்படாது என்றார். ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications