அப்பல்லோ டூ கொடநாடு செல்ல விரும்பிய ஜெயலலிதா.. நோ சொன்ன மருத்துவர்கள்.. I am your bossனு சொன்ன ஜெ!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் இறப்பதற்கு முன்னர் கொடநாடு எஸ்டேட்டுக்கு போக விரும்பியதாக அவரது தோழி சசிகலா தெரிவித்ததாக நமது எம்ஜிஆர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு காலமானார்.
இவரது மரணம் குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் பல்வேறு தகவல்கள் உலா வருவதால் அதுகுறித்து விசாரிக்க கடந்த அதிமுக ஆட்சியில் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொடநாடு எஸ்டேட்
இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இதற்கு அடுத்த 4 மர்ம மரணங்கள் நிகழ்ந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முக்கிய ஆவணங்கள்
இந்த பங்களாவிலிருந்து முக்கிய ஆவணங்கள் கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகின்றன. இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை முடித்துவிட்டு கொடநாடு எஸ்டேட்டுக்கு செல்ல வேண்டும் என ஜெயலலிதா விரும்பியதாக அவரது தோழி சசிகலா கூறியதாக நமது எம்ஜிஆர் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

செய்தித் தாள்
இதுகுறித்து சசிகலா சொன்னதாக அந்த செய்தித்தாளில் வெளியான செய்தியில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் மருத்துவர்கள் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம்தேதி வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என கூறினர்.

அப்பல்லோ டூ கொடநாடு
ஆனால் ஜெயலலிதாவோ தான் நேராக கொடநாடு எஸ்டேட்டிற்குதான் செல்வேன், போயஸ் தோட்டத்திற்கு செல்ல மாட்டேன் என்றாராம். அதற்கு மருத்துவர்கள், அங்கு குளிராக இருக்கும். உங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அங்கு வருவது கடினமாக இருக்கும். அதனால் எங்களுக்காக ஒரே ஒரு மாதம் மட்டும் சென்னை போயஸ் தோட்டத்தில் இருங்கள்.

பூரண நலம்
மருத்துவ பரிசோதனைகள் முடித்துக் கொண்டு பூரண நலம் பெற்றவுடன் கொடநாடு செல்லலாம் என அப்பல்லோ மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் ஜெயலலிதாவோ இங்கே நான்தான் பாஸ் என மருத்துவர்களிடம் தெரிவித்ததாக சசிகலா நமது எம்ஜிஆர் நாளிதழுக்கு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட போதே கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்ததாக கொடநாடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications