சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?”
சென்னை: சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற நகைக்கடையில் அரங்கேறியுள்ள இந்தத் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கடையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த ஒரு ஊழியரே, நிர்வாகத்தின் நம்பிக்கையைச் சிதைத்து, கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைத் திருடி வந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது...!!
மாநகரின் இதயப்பகுதியாகவும், நகை விற்பனையின் முக்கிய மையமாகவும் விளங்கி கொண்டிருக்கிறது.. எப்போதுமே இங்குள்ள துணி கடைகள் போல, நகைக்கடகளும் பிசியாகவே இருக்கும்..!

சென்னையில் நகை திருட்டு
அந்தவகையில் நேற்றும் ஒரு பிரபல கடையில் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது.. இரவில் வழக்கம்போல கடையின் நகை இருப்புகளை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சரிபார்த்தபோது, நகைகளின் எண்ணிக்கையில் பெரும் வித்தியாசம் இருப்பதைக் கண்டு நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர்...!!
இதனால் விரிவான தணிக்கையை மேற்கொண்டனர்.. அப்போது முடிவில், சுமார் 25 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வளையங்களைத் தாண்டி இவ்வளவு பெரிய அளவிலான நகைகள் காணாமல் போனது எப்படி என்பது குறித்து பெரும் குழப்பம் நிலவியது...!!
பிரபல நகைக்கடை
உடனடியாக இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தன... எனவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அப்போது தான் அந்த பகீர் தகவல் தெரிய வந்தது.. சம்பந்தப்பட்ட நபர், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 32 வயதான சிவாதேவ் என்பதும், இந்த திருட்டில் ஈடுபட்டது இவர் தான் என்பதும் அம்பலமானது.
குற்றவாளியின் சுபாவமும் கைவரிசையும்
கைது செய்யப்பட்ட சிவாதேவ், அந்தப் பிரபல நகைக்கடையில் நீண்ட காலமாக நகை பராமரிப்பாளராக அதாவது Jewellery Custodian பணியாற்றி வந்துள்ளார்.
நம்பிக்கை துரோகம்
அந்த கடையின் அனைத்து நகைகளும் அவர் வசம் தான் ஒப்படைக்கப்பட்டிருந்ததாம். இந்த நம்பிக்கையைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அவர், ஒரே நாளில் நகைகளைத் திருடினால் சிக்கிக்கொள்வோம் என்பதை உணர்ந்து, மிகத் திட்டமிட்டு செயல்பட்டுள்ளார்.
ஒருத்தரும் சந்தேகிக்காத வண்ணம், ஒரு சில நகைகளை மட்டும் அவ்வப்போது சிறுக சிறுகத் திருடி வெளியே கொண்டு சென்றுள்ளார். இவ்வாறு பல மாதங்களாக அவர் செய்த கைவரிசையின் மொத்த மதிப்பு 25 பவுன் ஆகும்..
சிக்கிய சிவாதேவ்
இறுதியில் போலீசார் சிவாதேவை கைது செய்தனர்.. முதற்கட்டமாகத் தான் திருடிய நகைகளில் 10 பவுனை மட்டும் போலீசாரிடம் ஒப்படைத்தார். எஞ்சிய நகைகளையும் விரைவில் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் உறுதி அளித்தார்.
ஆனால், சொன்னபடி நகைகளைத் தராமல், போலீசாரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகத் திடீரெனத் தலைமறைவாகி விட்டார்.. எனினும்
அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இறுதியில், நேற்று முன்தினம் போலீசார் சிவாதேவை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். கைதான அவரிடமிருந்து எஞ்சிய நகைகளை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நம்பிக்கைக்குரிய பழைய ஊழியரே கைவரிசை காட்டிய இந்தச் சம்பவம், சென்னை வியாபார வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..!!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications