சென்னையில் ஜியோ 5ஜி தொடக்கம்.. எது “ஃப்ரீயா?” அசத்தல் “ஆஃபர்”அறிவித்த அம்பானி -“யூஸ்” பன்றது எப்படி?
சென்னை: ஏலம் நிறைவடைந்து கடந்த 1 ஆம் தேதி 5ஜி சேவையை இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த நிலையில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 5ஜியை தொடங்கி வைத்து இருக்கிறார் ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி.
அக்டோபர் தொடக்கத்தில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் 2022 மாநாட்டில் ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்தன.
அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் நாத்வாராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த சேவையை ஜியோ தொடங்கி வைத்தது.

ஆகாஷ் அம்பானி
ரிலையன்ஸ் ஜியோ இஃன்போகாம் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி இந்த சேவையை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், புனித நகரமான நாத்வாராவில் இந்த ஜியோ 5ஜி சேவையை அறிமுகம் செய்து இறைவனுக்கு சமர்பித்து உள்ளோம். பல இடங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளோம்.

அனைத்து நகரங்களிலும்
ஜியோ 5ஜி சேவை பெரிய நகரங்களில் உள்ளவர்களுக்காக மட்டுமானதாக இருக்க முடியாது. நாடு முழுவதும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு வணிக நிறுவனத்துக்கும் கிடைக்கும் வகையில் அமைய வேண்டும். ஜியோ ட்ரூ 5ஜி சேவையை இயக்க இது ஒரு படியாகும்.

வை ஃபை
ஜியோ 5ஜி வை ஃபை சேவையை பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பொது இடங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஜியோ வெல்கம் ஆஃபர் காலத்தில் எந்த கட்டணமும் இன்றி பயனர்கள் சேவையை பெறலாம்." என்றார்.

சென்னை
ஜியோ வெல்கம் ஆஃபரில் சென்னையும் சேர்க்கப்படும். சென்னையில் ஜியோ பயனர்கள் நொடிக்கு 1 ஜிபி வேகத்தில் அன்லிமிட்டடாக 5ஜி அனுபவத்தை பெற்றிட இயலும். ஏற்கனவே ஜியோ 4ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்தலாம்.

எப்படி பயன்படுத்துவது?
ஜியோ வெல்கம் ஆஃபரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதுவாகவே ஜியோ 5ஜி சேவை மாறிவிடும். இதற்காக சிம் கார்டையோ அல்லது 5ஜி செல்போனையோ மாற்ற தேவையில்லை. 5ஜி சேவைக்கான புதிய கட்டண டாரிஃப்களை ஜியோ வெளியிடவில்லை. பழைய 4ஜி கட்டணத்திலேயே பயன்படுத்தலாம்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications