ஜோலார்பேட்டைக்கு ஜாலி.. அடடே கோயம்பேட்டில் டக்னு மாற்றம்.. சென்னை அசோக்நகர் மெட்ரோ ரயில் சேவை எங்கே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை - ஜோலார்பேட்டை தடத்தில், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான பணிகள், 50 சதவீதம் முடிந்துள்ளதாகவும், மிச்ச பணிகளை விரைவில் முடித்துவிட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் ஹேப்பி தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.. இந்த அறிவிப்பானது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் தந்து வருகிறது. இதனிடையே, கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தம் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. என்னாச்சு?

இந்தியா முழுவதும் விரைவு ரயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரிக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டமைப்பு பணிகள், சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை தடத்தில் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

chennai Koyambedu Jolarpettait

அந்தவகையில், குரூப் A வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்ட்ரல் - அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடத்துக்கு முன்னுரிமை அளித்து, பணிகள் நடந்து வருகின்றன.

ஜோலார்பேட்டைக்கு ஜாலி

இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, "அதிக வளைவுகளை நீக்குவது, ரயில் பாதையை மேம்படுத்துவது, மிகவும் பழமையான ரயில்வே பாலங்களை நீக்குவது, 'சிக்னல்' தொழில்நுட்பம் மேம்படுத்துதல், தேவையான இடங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம்.

இப்போதைக்கு 50 சதவீத பணிகளை முடித்துவிட்டோம்.. அடுத்த வருடம் இறுதிக்குள் மிச்சமுள்ள பணிகளை முடித்து, உடனே பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்று உறுதி தெரிவித்திருக்கிறார்கள்.. தெற்கு ரயில்வே அதிகாரிகளின் நம்பிக்கையானது, ரயில் பயணிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

கோயம்பேடு டூ அசோக்நகர் மெட்ரோ

இதனிடையே, வரும்15 தேதியிலிருந்து 19ம் தேதி வரை மெட்ரோ ரெயில் சேவைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.

அதில், சென்னையில் வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு மேலே நடந்து வரும் 2ம் கட்ட மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகளால், பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை மெட்ரோ ரெயில் சேவைகள் வருகிற 15-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை தற்காலிகமாக மாற்றியமைக்கப்படுகிறது.

நீல வழித்தடத்தில் (விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை அண்ணாசாலை டி.எம்.எஸ் வழியாக) இயக்கப்படும் சேவையில் நேரம் மற்றும் அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது

பச்சை வழித்தடத்தில் சேவை

ஆனால் பச்சை வழித்தடத்தில் மேற்கண்ட நாட்களில் காலை 5 மணி முதல் 6 மணி வரை பரங்கிமலையில் இருந்து அசோக் நகர் வரையிலும், விமான நிலையத்தில் இருந்து அசோக்
நகர் வரை 15-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை காலை 5 மணி முதல் 6 மணி வரை தற்காலிகமாக சேவை நிறுத்தப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு மற்றும்

அசோக் நகர் இடையே காலை 5 மணி முதல் 6 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. காலை 6 மணி முதல் மெட்ரோ ரெயில் சேவை வழக்கம் போல் தொடங்கும். வாரநாள், சனிக்கிழமை, ஞாயிறு கால அட்டவணை பின்பற்றப்படும்.

இந்த தற்காலிக மாற்றங்கள், 2-ம் கட்ட கட்டுமானப் பணிகள் சீராகவும், சரியான நேரத்திலும் நடப்பதற்கு அவசியமானவையாகிறது. பயணிகளின் சிரமத்துக்கு வருந்துகிறோம். பயணிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் அந்த அறிவிப்பில் கேட்டுக் கெண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+