Exclusive: ராகுலும் கமலும் என்ன பேசினார்கள்? மநீம -காங்கிரஸ் கூட்டணியா? ஜோதிமணி எம்.பி.பளிச் பதில்!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ராகுல்காந்தியும் கமல்ஹாசனும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை என ஜோதிமணி எம்.பி.மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே இருக்கும் போது ராகுல் எப்படி கூட்டணி தொடர்பாக பேச முடியும் என நம்மிடம் வினவினார்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்துகொண்ட நிலையில் அந்நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வரும் ஜோதிமணி எம்.பியை ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு சில கேள்விகளை முன் வைத்தது.
ஒன் இந்தியா தரப்பில் முன் வைக்கப்பட்ட கேள்விகளை உள்வாங்கிக் கொண்ட ஜோதிமணி எம்.பி. அளித்த பதில் வருமாறு;

எல்லோருக்கும் அழைப்பு
''பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதற்கு கமல்ஹாசனுக்கு மட்டும் ராகுல் அழைப்பு விடுக்கவில்லை. எழுத்தாளர்கள், மதச்சார்பற்ற கொள்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பிரிவிணைக்கு எதிரான அனைத்து சக்திகளுக்கும் ராகுல் அழைப்பு விடுத்திருந்தார். அந்த வகையில் இதில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இதற்காக உடனே காங்கிரசும் கமலும் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்று பேசுவது ஏற்புடையதாக இருக்காது.''

மல்லிகார்ஜுனே கார்கே
''கூட்டணி பற்றி பேசுவதற்கு மல்லிகார்ஜுனே இருக்கும் போது ராகுல் எப்படி அதை பற்றி பேசுவார். மீண்டும் மீண்டும் மிகத் திடமாக சொல்கிறேன், கமல்ஹாசனும் ராகுல் கூட்டணி குறித்து சிறிதளவும் பேசவில்லை. அவர்கள் பேசியதெல்லாம், கவலைபட்டதெல்லாம் நாட்டின் இன்றைய நிலை குறித்தும் நாடு போகிற பாதை குறித்தும் தான். மதத்தால் மக்களை பிளவுப்படுத்தி பிரிவினைவாதத்தை வளர்க்கும் போக்கு குறித்து இருவரும் பேசிக்கொண்டார்கள்.''

கூட்டணி பற்றி பேசவில்லை
''மற்றபடி இந்த யாத்திரையில் தேர்தல் கூட்டணி குறித்தெல்லாம் பேசப்படவில்லை. இருவர் சந்திப்பை மையமாக வைத்து இது போன்ற யூகங்களின் அடிப்படையில் பல்வேறு செய்திகள் உலா வரத் தொடகியிருகின்றன. கமலை போன்று இன்னும் பல பிரபலங்கள் ராகுலுடன் கரம் கோர்த்து யாத்திரையில் பங்கேற்கவுள்ளார்கள். தற்போது பாத யாத்ராவுக்கு பிரேக் பங்கேற்கவுள்ளார்கள். ஜனவரி 3ஆம் தேதி முதல் மீண்டும் ராகுலின் லட்சிய நடைபயணம் தொடரும்.''

ஒரு வருடம்
''நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் கூட்டணி குறித்து இப்போதே பேச வேண்டிய அவசியமில்லை. அப்படியே பேசினாலும் இரு கட்சிகளின் சார்பில் குழு தான் பேச்சுவார்த்தை நடத்துமே தவிர இரு கட்சிகளின் தலைவர்கள் நேரடியாக அப்படி பேசிக்கொள்ள மாட்டார்கள்.'' இவ்வாறு ஜோதிமணி எம்.பி. ஒன் இந்தியா தமிழிடம் பேசும் போது கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications