Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதிமன்ற அவமதிப்பு என்பதை.. ஆயுதம் போல நீதிபதிகள் பயன்படுத்த கூடாது.. உச்ச நீதிமன்றம் பளீர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீதிபதிகள் அவமதிப்பு வழக்குகளை தனிப்பட்ட கவசம் அல்ல போல பயன்படுத்த கூடாது என்றும், அவமதிப்பு வழக்கை விமர்சனங்களை அடக்குவதற்கான ஆயுதமாக பயன்படுத்த கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அழுத்தமாகக் கூறி உள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம், சமீபத்திய தமிழக அரசியல் வரலாற்றில் மத மற்றும் அரசியல் ரீதியிலான பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

திருப்பரங்குன்றம் வழக்கு

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, திருப்பரங்குன்றம் மலையில் மீது உள்ள தீபத்தூணில் தீபத்தை ஏற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பின்னரே இக்கோயில் விவகாரம் தீவிரம் அடைந்து சர்ச்சைக்கு உள்ளானது.தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு செயல்படுத்தப்படாதபோது, இந்து அமைப்புகள் தலைமையில் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தன. பாஜக தொண்டர்களும் இதில் கலந்துகொண்டனர். மோதல்கள் ஏற்பட்டதையடுத்து, போலீசார் பாஜகவினர் மற்றும் இந்து முன்னையினரை கைது செய்தனர். அண்மைக் காலங்களில் மதக் குழுக்களுக்கும் அரசுக்கும் இடையே இத்தகைய நேரடி மோதலை தமிழ்நாடு இப்படி கண்டது அரிதான நிகழ்வு.

Judges can not use the contempt of court as a shield for them says SC in a Major case

இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு விசாரணை நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் நடந்து வருகிறது. திங்கள் கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான பல விவாதங்கள் இந்த வழக்கு காரணமாக உருவாகி உள்ளது.

அவமதிப்பு வழக்கு - அஸ்திரமாக இருக்க கூடாது

இப்படிப்பட்ட நிலையில்தான் அவமதிப்பு வழக்குகள் தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது . அதன்படி நீதிபதிகள் அவமதிப்பு வழக்குகளை தனிப்பட்ட கவசம் அல்ல போல பயன்படுத்த கூடாது என்றும், அவமதிப்பு வாழ்க்கை விமர்சனங்களை அடக்குவதற்கான கருவியாக பயன்படுத்த கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அழுத்தமாகக் கூறி உள்ளது. நவி மும்பையைச் சேர்ந்த வினிதா ஸ்ரீநந்தன், நீதிபதிகளைப் "நாய் மாஃபியா" என்று கூறியதற்கு எதிராக சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டது. மும்பை உயர் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு அதில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அவருக்கு ஒரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

தெருநாய்களுக்கு உணவளிப்பது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது அவர் இந்த கருத்தை கூறி இருந்தார். நாய்கள் தொடர்பான வழக்கில் நாய்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி "நாய் மாஃபியா" என்று நீதிபதிகளை விமர்சனம் செய்து இவர் பேசி இருந்தார். இதையடுத்து ஸ்ரீநந்தன் மன்னிப்பு கேட்டார். ஆனால் அவரின் மன்னிப்பு உண்மையான வருத்தத்தைத் தெரிவிக்கவில்லை என முடிவு செய்த உயர் நீதிமன்றம், அதை ஏற்க மறுத்து ₹2,000 அபராதத்துடன் ஒரு வார சிறைத் தண்டனை விதித்தது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்தது. அவரின் தண்டனையை நிறுத்தியது. அதோடு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரத்தை கவனத்துடன் கையாள வேண்டும் என வலியுறுத்தியது. இந்த அதிகாரம் நீதிபதிகளின் தனிப்பட்ட கவசம் அல்ல, விமர்சனங்களை அமைதியாக்கும் ஆயுதம் அல்ல என்று குறிப்பிட்டது. அதாவது நீதிமன்ற அவமதிப்பு என்பதை அஸ்திரம் போல நீதிபதிகள் பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டது

கருணை என்பது நீதித்துறை மனசாட்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். நீதிமன்றத்தை அவமதித்தவர் தனது தவறை நேர்மையாக ஒப்புக்கொண்டு, அதற்குக் மன்னிப்பு கேட்கும் போது அதை ஏற்றுக்கொண்டு கருணை வழங்கப்பட வேண்டும்," என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

1971 இந்திய நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், பிரிவு 12 ஆனது, தண்டனை விதிக்கும் அதிகாரத்தை மட்டுமல்லாது, அதை நீக்கும் அல்லது குறைக்கும் நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் உறுதிப்படுத்தும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விளக்கினர். அதாவது ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னரும், தண்டனை விதிக்கப்பட்ட பின்னரும் கூட அதை நீக்கும், குறைக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளது. அதன் அடிப்படியில் இவருக்கு மன்னிப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் அவமதிப்பு வழக்கை ஒரு ஆயுதம் போல பயன்படுத்தியது சரியல்ல என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+