சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மண்டியிட்டு கேட்கிறேன்! பேரறிவாளன் விடுதலை குறித்து மன்மோகனுக்கு கடிதம் எழுதிய நீதிபதி கிருஷ்ணய்யர்

Google Oneindia Tamil News

சென்னை: மண்டியிட்டு கேட்கிறேன் என தனது விடுதலை குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நீதிபதி கிருஷ்ணய்யர் கடிதம் எழுதியதாக பேரறிவாளன் உருக்கமாக தெரிவித்தார்.

Recommended Video

    Perarivalan First Speech After Release | Perarivalan Pressmeet | Oneindia Tamil

    இதுகுறித்து பேரறிவாளன் விடுதலைக்கு பிறகு முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், நாங்கள் நடத்திய சட்ட போராட்டத்திற்கு ஒரே காரணம் எங்கள் பக்கத்தில் இருந்த உண்மை. இதுதான் எங்களுக்கு வலிமையை கொடுத்தது என நம்புகிறேன்.

    இந்த நீண்ட போராட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனை அரசின் ஆதரவு எனும் தளத்தையும் மக்கள் ஆதரவு எனும் பெருந்தளத்தையும் உருவாக்கியதற்கு மிகப் பெரிய காரணம் செங்கொடியின் தியாகம்தான்.

    Exclusive: பேரறிவாளன் விடுதலை! இது புளிச்சுபோன விஷயம்! என்னிடம் கேட்காதீங்க! காங் எம்பி ஜெயக்குமார்! Exclusive: பேரறிவாளன் விடுதலை! இது புளிச்சுபோன விஷயம்! என்னிடம் கேட்காதீங்க! காங் எம்பி ஜெயக்குமார்!

     உண்மைகள்

    உண்மைகள்

    அதன் பிறகு என்னை பற்றிய உண்மைகளை நானோ என் அம்மாவோ என்னை சார்ந்தவர்களோ சொல்லியிருந்தால் அது ஒரு பக்க செய்தியாகவே இருந்திருக்கும். இல்லை பேரறிவாளன் நிரபராதி, அவருடைய வாக்குமூலத்தை நான் தவறாக பதிவிட்டுவிட்டேன் என 2013 ஆம் ஆண்டு தியாகராஜன் ஐபிஎஸ் வெளிப்படையாக பேட்டி கொடுத்தார்.

     நீதிபதி கே டி தாமஸ்

    நீதிபதி கே டி தாமஸ்

    பின்னர் அதையே வாக்குமூலமாக உச்சநீதிமன்றத்தில் அவர் பதிவு செய்தார். அது மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அது மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தில் யார் தீர்ப்பு கொடுத்தார்களோ அந்த நீதிபதி கே டி தாமஸின் பேட்டி, கட்டுரைகள் எல்லாம் இந்த வழக்கிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

     நீதிபதி கிருஷ்ணய்யர்

    நீதிபதி கிருஷ்ணய்யர்

    அது போல் நீதிபதி கிருஷ்ணய்யரை பற்றி நான் சொல்ல வேண்டும். அவர் மிகப்பெரிய நீதிமான், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை கொடுத்தவர். இன்று நான் விடுதலையானதற்கு அவர் வழங்கின தீர்ப்பும்தான் மிக முக்கிய காரணம். அவர் எனக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார்.

    வழக்கறிஞர் அனில் தவான்

    வழக்கறிஞர் அனில் தவான்

    நான் மண்டியிட்டு கேட்டுக் கொள்கிறேன் என எனக்காக மன்றாடினார். அதற்கு காரணம் அவர் முழுக்க முழுக்க நான் நிரபராதி என நம்பியதுதான். உச்சநீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு மூத்த வழக்கறிஞர் அனில் திவான் நான் நினைத்துகூட பார்க்க முடியாத வழக்கறிஞர்களை அவர் அமைத்து கொடுக்க காரணமாக இருந்தார்.

     வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன்

    வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன்

    இந்த விடுதலையை சாத்தியபடுத்துவதற்கு ஏறத்தாழ 6 ஆண்டுகளுக்கும் மேலாக என்னிடம் பொருளாதாரத்தை எதிர்பார்க்காமல் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதாடினார். அது போல் தமிழக அரசும் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் அஃபிடவிட் பைல் செய்தார்கள்.

    வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி

    வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி

    வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி போன்ற திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாடி இந்த தீர்ப்பு பெற்றுத் தர காரணமாக இருந்தார்கள். மரண தண்டனை நேரங்களில் மிகவும் வலியோடு இருந்த காலகட்டங்களில் எங்களுக்கு துணையாக இருந்த சட்ட போராட்டத்தில் முதுகெலும்பாக இருந்த மும்பை வழக்கறிஞர் சவுத்ரிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் பேரறிவாளன்.

    English summary
    Perarivalan says about Justice Krishna Iyer who wrote letter to Former PM Manmohan Singh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X