விக்கிரவாண்டியில் எங்கிருந்த திமுகவை எங்க கொண்டாந்து நிறுத்தியிருக்கார் எடப்பாடி! மாஜி எம்பி வேதனை
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தாலும் அவர் பாமக, நாம் தமிழர் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு போல் பேசிவந்த நிலையில் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு விக்கிரவாண்டி வாக்கு சதவீதம் உள்ளது என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: #விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் சுமார் 5%, பா.ம.க 25%, திமுக 65%க்கு மேல் பெற்றுள்ளது.
புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் மற்றும் #ஜெயலலிதா அம்மா அவர்களின் புகைப்படத்தை வைத்து #பாமக வாக்கு கேட்டார்கள். அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் "எங்கள் தலைவர்களின் புகைப்படத்தை வைத்து வாக்கு கேட்பது ஒன்றும் தவறில்லை அது எங்கள் தலைவர்களை பெருமைப்படுத்தும் விதமாகத்தான் இருக்கிறது" இன்று மறைமுகமாக உணர்த்தினார்
எடப்பாடி பழனிசாமி
நாம் தமிழர் கட்சி அதிமுகவின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்தது. தேர்தல் பிரச்சாரங்களில் அதிமுக தொண்டர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று சீமான் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் EPS-ன் எண்ணப் படி அதிமுக வாக்குகள் எதுவும் நா.த.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் போகவில்லை. அவர் வேண்டுகோள் விடுத்தபடி தேர்தலையும் யாரும் புறக்கணிக்கவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் 40%ஆக இருந்த திமுக வாக்கு தற்போது இடைத்தேர்தலில் 65%ஆக உயர்ந்துள்ளது.
அதிமுகவினர் வாழ்வில் முதல் முறையாக திமுகவிற்கு வாக்களிக்கிற சூழ்நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதை உணருங்கள். இரட்டைக் குழல் துப்பாக்கி போல #திராவிட கொள்கையில் எதிரெதிர் துருவமாக பயணித்து வந்த திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளில் அதிமுக பலவீனம் ஆகும் பொழுது திராவிடம் என்று திமுக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது.
அதனுடைய பாதிப்பு அதிமுகவிற்கு வருகிறது. அது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இப்போதாவது ஒன்று பட்ட அதிமுகவின் அவசியத்தை புரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர். அங்கு கடந்த 10ஆம் தேதி 82 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அப்படியென்றால் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை அதிமுகவினர் யாரும் பின்பற்றவில்லை. அவர்களும் இடைத்தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்பதாகவே கருதப்படுகிறது.
இந்த தேர்தலை அதிமுக, தேமுதிக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஜனநாயக முறைபடி இந்த இடைத்தேர்தலை ஆளும் கட்சி நடத்த விடாது என்றும் இதற்கு திருமங்கலம் தேர்தல், ஈரோடு இடைத்தேர்தல் என பல முன்னுதாரணங்கள் உள்ளன என்று கூறி அதிமுக புறக்கணித்துவிட்டது. அது போல் இந்த தேர்தலில் பாமகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளிப்படையாக கேட்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை தங்கள் பேனரில் வைத்து பாமக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அன்புமணி கேட்டுக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவின் புகைப்படத்தை போட்டதாலேயே பாமகவுக்கு அதிமுகவினர் வாக்களிப்பார்கள் என சொல்ல முடியாது என அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதால் அதிமுகவினர் யாரும் தேர்தலை புறக்கணிக்கவில்லை என்ற பாயிண்ட்டைத்தான் கே.சி. பழனிசாமி முன் வைத்துள்ளார். அது போல் ஒருங்கிணைந்த அதிமுகவுக்காக அவர், அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பை தொடங்கி போராடியும் வருகிறார். தொடர்ந்து தேர்தல் தோல்விகளால் அதிமுகவினர் மனம் வேதனையில் உள்ள நிலையில் பிரிந்து கிடப்போர் ஒன்று சேர்ந்தால்தான் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் அதிமுக வசமாகும் என தொண்டர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு மேலும் அழுத்தம் கூடும் என தெரிகிறது. அவருக்கு எதிரான நிலைப்பாட்டை கட்சி நிர்வாகிகள் மேற்கொள்வர் என்றே தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications