Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னாது.. 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை மேலும் அதிகரிக்கப்படுமா.. கீதா ஜீவன் சொன்ன பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த தொகை அதிகரிக்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் தனது வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற தொடங்கியது. அந்த வகையில், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்தது.

kalaignar Magalir urimai thogai scheme, Will the amount be increased? Minister Geeta Jeevan Replies

தகுதி வாய்ந்த மகளிருக்கு வழங்கப்படும் என்றும் இதற்காக மகளிர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது பட்டியலை தயார் செய்தது. தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெறுவதற்காக 1 கோடியே 83 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். இவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்தப் பணிகள் நிறைவு அடைந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியான பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. வங்கி கணக்கில் வரவு வைக்க முடியாதவர்களுக்கு மணி ஆர்டர் மூலமாகவும் பணம் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது. மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் இ சேவை மூலமாக மேல் முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் வழங்கப்படும் உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படுமா? என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் கூறியதாவது:- ஒரு ரூபாய் கூட கொடுக்கப்படமால் இருந்தது. தற்போது தேவை உள்ளவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால் அடுத்து உயர்த்தப்படுமா? என்ற கேள்விக்கு இன்று நான் பதில் கூற முடியாது.

kalaignar Magalir urimai thogai scheme, Will the amount be increased? Minister Geeta Jeevan Replies

மேலும் "அனுமானங்களுக்கு பதில் சொல்ல முடியாது" என்றார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களை சேர்க்கும் போது ஏற்கனவே வாங்குபவர்களுக்கு நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், அதற்கு வாய்ப்பு இல்லை. முதல்வர் ஏற்கனவே தெளிவா சொல்லியிருக்கிறார்.1 கோடியே 6 லட்சம் பேருக்கு கொடுத்து விட்டோம். 30 நாளில் மேல் முறையீடு செய்பவர்களுக்கு வழங்கப்படும் என்றுதான் சொல்லியிருக்கிறார். எனவே அந்த மாதிரியான வாய்ப்பு இல்லை" என்றார்.

மேலும், வசதியாக இருப்பவர்களும் இந்த உரிமைத்தொகை வாங்குவதாக கண்டறியப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், அவர்களாக வந்து விலக வேண்டும். ஆனால் 75 ஆயிரம் சம்பளம் வாங்குகிறேன். எனக்கு இந்த ஆயிரம் ரூபாய் தேவை இல்லை என்று விலக வேண்டும். அது வந்து எதிர்காலத்தில் என்னவென்று தெரியவில்லை. இப்போதைக்கு தகுதியுள்ள தேவை உள்ளவர்கள் விண்ணப்பம் பண்ணிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+